பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (04.08.2018)

வைத்தியசாலையில் இளைஞர் தற்கொலை

அம்பன்பொல வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்பன்பொல பொலிஸர் தெரிவிக்கின்றனர்.

வெட்டுக் காயங்களுடன் நேற்று இரவு குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் சிகிச்சைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதய நோயினால் நாளொன்றுக்கு 120 – 150 பேர் வரை உயிரிழப்பு

இலங்கையில் இதய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவின் பிரதானி விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.

இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே கூறினார்.

அரச வைத்தியர்களின் வேலை நிறுத்தம் நிறைவு

சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதால் நாட்டு மக்கள் மீது மேலும் வரி சுமத்தப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

அந்த உடன்படிக்கை ஊடாக நாட்டிற்குள் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்படும் என்று அந்த சங்கத்தின் பதுளை மாவட்ட தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை அரச வைத்திய அதிகாரிகளால் நேற்று காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுதல், அடிப்படை சம்பளங்களை உயர்த்துதல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் வேலை நிறுத்தத்திற்கு காரணமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை புலமைப் பரிசில் பரீட்சை

இவ்வருடத்துக்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நாளை (05) நடைபெறவுள்ளது.

நாடாளாவிய ரீதியில், 3,050 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள இப்பரீட்சைக்கு, 55,326 மாணவர்கள் தோற்றவுள்ளார்.

இதேவேளை, இவ்வருடத்துக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

Comments (0)
Add Comment