பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.08.2018)

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு\

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியில் தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கொழும்பு, லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு, லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

ETI வைப்பாளர்கள் அந்தப் பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

‘அமைச்சர்களின் சம்பளம் ​அதிகரிக்கப்பட வேண்டும்’

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பதிலாக அமைச்சர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென பீல்ட் மார்சல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு இருக்கும் கடமைகளுக்கு அமைய நாடுபூராகவும் பயணிக்க வேண்டியிருப்பதாகவும், அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதைப் போல, எரிபொருளுக்காக வழங்கபடும் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்ற ரீதியில் தன்னுடைய சம்பளம் மூன்றரை இலட்ச ரூபாய் என்றப் போதிலும், அதில் இரண்டு இலட்ச ரூபாய் எரிபொருளுக்கு செலவாவதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சேதவத்தை பகுதியில் ​கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 10 கிலோ 200 கிராம் அளவிலான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளம்பிட்டி – சேதவத்தை – களு பாலம் அருகில் சந்தேகத்துக்கிடமாக குறித்த நபர்கள் நடமாடியதை தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் 29, 30, மற்றும் 36 வயதுடையவர்கள் என்பதுடன் மொரன்துடுவ, ரிதிகம மற்றும் கொழும்பு 10 ஐ சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியதர குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடு

மத்திய தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுக​ளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்தியதர குடும்பங்களில் வீடுகளுக்கான கேள்விகள் அதிகம் எழுந்துள்ளமையை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தொழிற்சங்கவாதிகள் மற்றும் வெவ்வேறு தர அதிகாரிகளின் வீட்டுத் தேவைக்காக கொட்டாவை, ஒருகொடவத்தை, அநுராதபுரம், நுவரெலியா, அவிஸ்ஸாவலை மற்றும் ஹொரனை ஆகிய பகுதிகளில் 1900 வீடுகளுக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

Comments (0)
Add Comment