பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி2-..!! (08.08.2018)

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரையில் இந்த வேலை நிறுத்தம் இடம்பெறும் என்று புகையிரத சாரதிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ரயில்வே ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படாமைக்கு எதிராகவே வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பருவகால சீட்டை இ.போ.ச பேருந்துகளில் பயன்படுத்தலாம்

புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்துவோர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதால் குறித்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் காலத்தில் மட்டும் புகையிரத பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பா அரிசி, கோழியிறைச்சி, முட்டை ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை

சந்தையில் சம்பா அரிசியின் விலை தொடர்ச்சியாக அதிகரிப்பதால் எதிர்வரும் நாட்களில் சம்பா அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி அதிகரித்துச் செல்வதால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை குறைவடையாவிட்டால் அவற்றுக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு தீர்மானித்துள்ளது.

Comments (0)
Add Comment