பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (08.08.2018)

தைத்த ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கைக்கு மீண்டும் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்ததைத் தொடர்ந்து தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் பெருமளவு அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதற்பாதியில் தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி வருமானம் 228 கோடி டொலராக இருந்தது.

இவ்வாண்டு இது 235 கோடி டொலர் வரை உயர்ந்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவிற்கு ஆகக்கூடுதலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதன் மூலம் 104 கோடி டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

அரச தகவல் திணைக்களம்

வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுட அனுமதி

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரமணாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அதன் வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில் ஈடுட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

புகையிரத வேலை நிறுத்தம் நிறைவு பெறும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை எப்பொழுது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற புகையிரத சாரதிகளை பணியில் ஈடுபட அழைப்பு

ஓய்வு பெற்றுள்ள புகையிரத சாரதிகளுக்கு பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத பொதுமுகாமையாளர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

அதன்படி நாளை காலை 6 மணிக்கு புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்திற்கு ஓய்வுபெற்ற சாரதிகள் வருகை தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகவே ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா தோட்டம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது

புத்தள விஷேட அதிரடிப்படையினர் தனமல்வில பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் சுமார் 5 அடி உயரமான 700 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் அவை அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா தொகை 5 இலட்சம் பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனமல்வில பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தள விஷேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment