பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (09.08.2018)

வெட் வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி திருத்தச் சட்டமூலம் சம்பந்தமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (09) பாராளுமன்றில் இடம்பெற உள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான விவாதம் இடம்பெற உள்ளது.

இது தவிர சுயாதீன ஆணைக்குழுக்களுக்காக தலைவர்கள் மற்றும் உறுப்பினரகைளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு சம்பந்தமாகவும் இன்று விவாதம் இடம்பெற உள்ளது.

இதேவேளை ஊடகங்களுக்கு அரசாங்கம் விதிக்கின்ற அடக்குமுறை சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள யோசனை மீதான விவாதமும் இடம்பெற உள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைது

நீதிமன்றத்தை புறக்கணித்து வந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பிரதேசத்தில் சொத்துக்களை கொள்ளையிட்டல் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சந்தேகநபருக்கு எதிராக 08 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 வயதுடைய சாவகச்சேரி வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொடிகாமம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குற்றவியல் விடயங்கள் சம்பந்தமான் பிரேரணை நிறைவேற்றம்

குற்றச் செயல்கள் விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உதவிகள் சம்பந்தமாக பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருத்தங்களுடன் அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைத்ததாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.

பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி மூடப்பட்டது

பொல்துவ, தியட்ட உயன சந்தியில் இருந்து பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment