பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (09.08.2018)

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலுக்கு

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தீர்வு கிடைக்கும் வரையில் பணி நிறுத்தம் தொடரும்

புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக தற்போது நாடு பூராகவும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி மேலதிக பஸ்களை சேவையில் இணைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

6000 இ.போ.ச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பஸ் சேவை தேவையேற்படின் 011-7 50 55 55 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதனால் நேற்று கோட்டை புகையிரத நிலையத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பயணிகள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி இருந்தனர்.

எவ்வாறாயினும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் ஒய்வு பெற்ற புகையிரத இயந்திர சாரதிகளை இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானதாக இல்லாதிருப்பினும் நாட்டின் நிலைமையை பொறுத்து சம்பள அதிகரிப்பதை எதிர்பார்ப்தில்லை என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சம்பளம் தனது வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

16 பேரில் 04 பேர் கலந்து கொண்டனர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்ததாக தெற்கு மாகாண முதலமைச்சர் சான் விஜேயலால் கூறியுள்ளார்.

அந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்களில் எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் கூறினார்.

அவர்கள் மிகவும் ஒத்துழைப்புடன் செயற்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் 16 பேரை பிரதிநிதித்துவம் செய்யும் மேலும் உறுப்பினர்கள் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் சான் விஜேயலால் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

Comments (0)
Add Comment