நெல்லியடி: விபத்தில் ஒருவர் பலி..!!

நெல்லியடி, மாலே சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனங்கள் சிலவற்றை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னால் வந்த மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை மந்திகாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் மத்தி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment