பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (21.08.2018)

ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை தாக்குதல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டவுன் ஹோல் பகுதியின் வோர்ட் பிளேஸ் வீதி அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தால் வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக டவுன் ஹோல் பகுதி வரையான வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுமான அனுமதிப் பத்திரத்தை துரிதமாக வழங்க நடவடிக்கை

கட்டுமான அனுமதிப் பத்திரத்தை வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் கட்டுமான அனுமதிப் பத்திரத்தை வழங்கவதற்கான புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

இதனால், கட்டுமான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள் அதற்கான விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளவும் மாத்திரமே கொழும்பு மாநகர சபைக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இணையத்தை பயன்படுத்தி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் மக்களுக்கு நேர்த்தயாகவும் உடனடியாகவும் சேவையை வழங்க எதிர்ப்பார்ப்பதாக கொழும்பு மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவு

பல்கலைக்கழக மாணவர்களால் இன்று நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணிக்கு நீதிமன்றத்தால் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும், அரச நிறுவனங்களுக்குள் உட்பிரவேசிக்காதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

விசேட மேல் நீதிமன்றம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தின் பணிகள் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இது ஆரம்பித்து வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றத்தை அமைப்பதறங்கான சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த விஷேட மேல் நீதிமன்றத்தின் நீதியரசர்களாக சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments (0)
Add Comment