பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (24.08.2018)

புகையிரத ஊழயர்கள் தொடர்வேலை நிறுத்தத்தில்..!!

அனைத்து புகையிரத சேவை தொழிற்சங்கங்களும் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதம்பிட்டிய வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டது

கிராண்ட்பாஸ் மற்றும் மோதரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய வீதி, இன்று முதல் 27 ஆம் திகதி வரை போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் குழாய் திருத்த வேலைகள் காரணமாக இவ்வாறு குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் இன்று இரவு 9 மணி முதல் 27 ஆம் திகதி மாலை 5 மணி வரையில் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது.

எனவே, மோதரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த வீதி மற்றும் தவலசிங்காராம வீதியையும், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹேனமுல்ல வீதியையும் மாற்று வீதிகளாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்டாபயவிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபை எல்லை நிர்ணய தொடர்பில் வாக்கெடுப்பு

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று (24) விவாதம் நடைபெறுகிறது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்ல கட்சி தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதாக சபைத்தலைவர் லக்‌ஷமன் கிரிஹெல்ல தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment