பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (25.08.2018)

பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதில்லை

நாட்டில் பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரான படைப்புக்களை உருவாக்க அரசாங்கம் இடமளிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தாம் வன்மையான முறையில் நிராகரிப்பதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான தேசிய நல்லிணக்கத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தயாரித்த வானொலி நாடகங்களின் பெயர் தொடர்பிலான சர்ச்சை தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதில் ஒரு நாடகம் சமூக சீரழிவு பற்றி பேசுகிறது. இதன் பெயர் சார்ந்த அர்த்தத்தை தவறான முறையில் புரிந்து கொண்டு அரசாங்கத்தின் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சில உள்நுழைவு பகுதிகளில் பாரிய வாகன நெரிசல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடுவெல, பின்னதுவ, வெலிபென்ன மற்றும் மாத்தறை பகுதிகள் ஊடாக உள்நுழையும் பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

வார இறுதி நாட்கள் என்பதால் அப்பகுதி ஊடாக பயணிக்கும் வாகனங்களின் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 100,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதுவரை இன்று (25) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமிற்கு சென்ற பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்நாமிற்கு இன்று (25) விஜயம் ஒன்றை மேற்கொண்டு சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில், பல நாடுகள் கலந்து கொள்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தின் போது பலநாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment