பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (27.08.2018)

சீனி மிட்டாய்களை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது

ஐக்கிய தேசிய கட்சியினால் முன்னெடுக்கப்படும் கம்பெரலிய வேலைத்திட்டம் ஒரு தோல்வியடைந்த திட்டமாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய மற்றும் சிறு கடன்கள் போன்ற சீனி மிட்டாய்களை வழங்கி மக்களை ஏமாற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருடைய பிணைக்காக முன்னின்ற அவரின் மனைவி மற்றும் அவரின் உறவுக்கார சகோதரியையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த தனது 77 வயதில் காலமானார்.

மக்கள் எதிர்ப்பார்த்த பொருளாதார வளர்ச்சியை நெருங்க முடியாது

கடந்த மூன்று வருடங்களுக்குள் மக்கள் எதிர்ப்பார்த்த பொருளாதார வளர்ச்சியை தற்போதைய அரசாங்கத்தால் நெருங்க முடியாதுள்ளதாக சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் எடுத்த கடன்களை செலுத்துவதே இதற்கு முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (26) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment