பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (29.08.2018)

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் மனைவிமார் மேற்கொண்டுள்ள அர்ப்பாட்டம் காரணமாகவே அவ்வீதி மூடப்பட்டுள்ளது.

ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் இலங்கையில்

ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுசுகி நகானே உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நேற்று (28) இரவு 10.15 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வந்ததாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

இரு நாடுகளயுக்கும் இடையில் காணப்படுகின்ற உறவை மேலும் பலப்படுத்துவது ஜப்பானின் வௌிவிவகார அமைச்சரின் விஜயத்தின் நோக்கம் என்று இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தில் கடற்படை ரோந்து கப்பல்கள் இரண்டு ஜப்பானின் உதவியுடன் வழங்கப்பட உள்ளது.

இதேவேளை ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கசுசுகி நகானே பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை நடத்த உள்ளார்.

கடந்த வாரம் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை கூறத்தக்கது.

ஜயசுந்தர, லலித் வீரதுங்க ஆணைக்குழுவில் ஆஜர்

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகிய இருவரும் இலங்கை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

Comments (0)
Add Comment