பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (29.08.2018)

தபால் திணைக்கள ஊழியர்கள் எச்சரிக்கை

தபால் திணைக்களத்தின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் வழங்குகின்ற தீர்வு ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தபால் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் கூறுகிறது.

தபால் திணைக்களத்தை கட்டுப்பாட்டு சபையால் கட்டுப்படுத்தப்படுகின்ற அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அதுகாரிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் எச்.கே. காரியவசம் கூறினார்.

அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் என்று எச்.கே. காரியவசம் கூறினார்.

ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேர் விளக்கமறியலில்

மின்னேரிய தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹிங்குராங்கொட பிரதேச சபை உறுப்பினர் உட்பட 10 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று (28) காலை இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை ஹிங்குராங்கொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் சம்பவம் தொடர்பில் மேலும் 10 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு

பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டளை மற்றும் பொலிஸ் மா அதிபரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையையடுத்து சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த வாரம் நடைபெற உள்ள அரசிலமைப்பு பேரவையின் கூட்டத் தொடரில் இரு தரப்பையும் அழைத்து கலந்துரையாடப்பட உள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment