பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (30.08.2018)

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் கதிரையே பிரதருக்கு வசதியானது

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தற்போது கேளிக்குரிய பாத்திரமாக மாறியுள்ளதாகவும் அது அவருக்கு பொருத்தமாக இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்டர்பிரைஸஸ் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் மூலம் மக்களுக்கு பணம் கிடைக்காது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வியங்கொட ஆகியோரின் மருமகன்களுக்கே பணம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் வசதியான கதிரை எதிர்கட்சித்தலைவரின் கதிரை என்பதனால் இந்த வருடம் முடிவதற்குள் அந்த கதிரையை பிரதமருக்கு திருப்பி வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலத்தில் இந்தியாவுக்கு செல்ல வேண்டி இருப்பதாக சரத் குமார குணரத்ன சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்காரணமாக தற்போது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை குறித்த காலத்தில் விலக்கிக் கொள்ளுமாறு சட்டத்தரணி கோரினார்.

இந்தக் கோரிக்கைக்கு சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு வௌியிட்டார்.

எவ்வாறாயினும் சரத் குமார குணரத்னவுக்கு வௌிநாட்டுப் பயணத்துக்கான அனுமதியை வழங்கி நீதிபதி சசி மகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு சென்றுள்ள அவர் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.

Comments (0)
Add Comment