பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (31.08.2018)

யால தேசிய வனத்துக்கு தற்காலிகமாக பூட்டு

யால தேசிய வனத்தை நாளை (01) முதல் இரண்டு மாத காலத்துக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற கடுமையான வறட்சி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.

அதன்படி யால தேசிய வனத்தின் 01ம் இலக்க வலயமான பலடுவான நுழைவாயில் மூடப்பட உள்ளது.

மூடப்படும் காலப்பகுதியில் வனத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்கள் என்பன மேம்படுத்தப்படும் என்று சூரிய பண்டார கூறினார்.

இதன் பின்னர் நவம்பர் மாதம் 01ம் திகதி மீண்டு யால தேசிய வனம் திறக்கப்படும் என்று வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார கூறினார்.

நான்கு தேரர்கனை கைது செய்ய உத்தரவு

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்காக நான்கு தேரர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார்.

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கு எதிராகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுபோக நெல் கொள்வனவின் அளவு அதிகரிப்பு

இம்முறை சிறுபோக நெற் பயிர்ச்செய்கை மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்வனவின் போது ஒரு விவசாயிடம் இருந்து பெறும் நெல்லின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவிர கூறியுள்ளார்.

அதன்படி 2000 கிலோ கிராமில் இருந்து 3000 கிலோ கிராமாக அது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அத தெரணவிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் வேண்டுகோள்

தற்காலிக வாக்காளர் இடாப்பில் தத்தமது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுடகோள் விடுத்துள்ளது.

வாக்காளர் இடாப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் கிராம சேவகர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இதுதவிர தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk இணையத்தளத்திலும் வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்று அந்த ஆணகை்குழு கூறியுள்ளது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்று

மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும்.

இன்றைய தினம் காலை 10.00 மணி முதல் நள்ளிரவு வரையில் கண்காட்சி திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள்.

கண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானது முதல் நேற்று இரவு வரை அதிகளவிலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

கண்காட்சி இடம்பெறுகின்ற வளாகத்தில் டிவி தெரண மற்றும் எப்எம் தெரண கூடங்களுக்கும் அதிக மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட வருகின்றனர்.

பணிப் பகிஷ்கரிப்புக்குத் தயாராகும் ஊவா மாகாணத் துணை மருத்துவர்கள்

ஊவா மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஆகியோர், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய, இவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனரென, ஊவா மாகாண மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவு வழங்காமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments (0)
Add Comment