பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (07.11.2018)

நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்ப்டுகிறது

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் கூறியுள்ளனர்.

பஸ் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

பத்தரமுல்ல திசையில் இருந்து பொரள்ளை வரையான பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ராஜகிரிய, ஆயுர்வேத சந்தியில் கொழும்பு பல்கலைகழகத்தின் தேசிய வைத்திய பீட மாணவர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைகழகத்தின் தேசிய வைத்திய பீடத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க முடியாது

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக சரித ஹேரத் நியமனம்

வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கலாநிதி சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச தகவல் திணைக்களம் இதனைக் கூறியுள்ளது.

Comments (0)
Add Comment