மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.!! (படங்கள்)

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பாலமோட்டை கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, இவ் வட்டாரத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர், கிராம சேவையாளர், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் விளையாட்டு கழகங்களை சேர்ந்த உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு உபகரணங்கள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இன்று தெரிவு செய்யப்பட்ட மூன்று விளையாட்டுக்கழகங்களிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment