செய்தித் துணுக்குகள்001!!!

நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய மங்கள

நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று (17) தான் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

கோட்டபாயவின் வெற்றியை அடுத்து பல்வேறு பிரதேசங்களில் கொண்டாட்டங்கள்
ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கோட்டபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

குறிப்பான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பிரதேசங்களில் குறித்த வெற்றியை கொண்டாடும் முகமாக இனிப்புப்பொருட்கள் வீதியில் சென்றவர்களுக்கு பகிர்ந்து வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இது தவிர பட்டாசு கொளுத்தி தத்தமது மகிழ்ச்சியை முன்னெடுத்தவர்கள் புதிய ஜனாதிபதி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என ஊடகங்களிடம் கருத்துக்களை முன்வைத்தனர்.

இப்பகுதியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்பட்டதுடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் இவ்வெற்றி கொண்டாட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment