செய்தித் துணுக்குகள் – 001.!!

பெரும்பான்மை சிங்கள மக்களின் நிலைப்பாடானது தமிழ் மக்களின் நிலைப்பட்டிலிருந்து வேறுபட்டு நிற்கின்றது- ரெலோ

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள ரெலோ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மோடியின் அழைப்பை ஏற்ற கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மைத்திரிபால

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் ஜனாதிபதி பதவியின் கடமைகளை நிறைவுசெய்து கொண்டார். இதன்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவரது எதிர்கால நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெற தனது ஆசிர்வாதங்களையும் தெரிவித்தார்.

இதேவேளை அனைவருடனும் இணைந்து தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் தனது பொறுப்புக்களை எதிர்காலத்திலும் நிறைவேற்றுவதற்கு உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ருவன் விஜேவர்த்தன பதவி விலகினார்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தனது பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

Comments (0)
Add Comment