செய்தித் துணுக்குகள் – 002..!!

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத ஆரியசிங்கவை மீள்நியமனம் செய்து அவர் தனது சேவையை தொடர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ.அனுமதி வழங்கியுள்ளார்

இந்த பணிப்புரை இன்று முதல் அமுலுக்கு வருமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் காலமானார்

முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன கண்டி தனியார் வைத்தியசாலையில் சற்று முன் தனது 88வது வயதில் காலமானார்.

இவர் உடல்நலக் குறைவுக் காரணமாகக் கண்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இந் நிலையில் பாராளுமன்ற தேர்தல் வரை 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.

“சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு தேவை”

நான் அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதி, எனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும், எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும். எனக்குத் தேவையானது அனைவரும் மதிப்புடன் வாழக்கூடிய சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கான உங்கள் ஆதரவு என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment