;
Athirady Tamil News

மிஸ்டர் சந்திரமௌலி உருவான விதம்..!!

0

கௌதம் கார்த்திக், ரெஜினா ஜோடி இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

படம் எதைப் பற்றியது என்பதை ரசிகர்களுக்கு முன்னமே உணர்த்தும்விதமாக டீசர், ட்ரெய்லர் வெளியிடுவதுபோல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை வெளியிடுவதும் தற்போது வாடிக்கையாகி உள்ளது.

இதன் மூலம் படக்குழு எந்தெந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர், ஒவ்வொரு காட்சிக்கும் பின் எத்தனைப் பேரின் உழைப்பு உள்ளது என்பதை ரசிகர்கள் அறியமுடிகிறது. தற்போது வெளியாகியுள்ள மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் மேக்கிங் வீடியோவில் கார் விபத்து காட்சி, பாக்ஸிங் காட்சி, கடற்கரையில் எடுக்கப்பட்ட பாடல் காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன; அதற்கான அரங்குகள் எவ்வாறு அமைக்கப்பட்டன என்பது குறித்து அறிய முடிகிறது.

அப்பாவும் மகனுமான கார்த்திக்கும் கௌதம் கார்த்திக்கும் முதன்முறையாக இணைந்திருக்கும் இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார். ரெஜினா, வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். ரெஜினா முதன்முறையாக இதில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.

‘பாஃப்டா’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. ஜூலை 6ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 11 =

*