;
Athirady Tamil News

கௌதம் கார்த்திக்கின் வெற்றி ஃபார்முலா..!!

0

பட வெளியீட்டிற்கு முன் படம் குறித்த புகைப்படங்களை வெளியிடவும் படக்குழு தயக்கம் காட்டிவந்த நிலை இன்று மாறிவிட்டது. படத்தின் பாடலைக் காட்சிகளுடன் வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ‘ஏதேதோ ஆனேனே’ பாடல் காட்சிகளுடன் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

கௌதம் கார்த்திக் நடிப்பில் வசூல் ரீதியாக வெற்றியடைந்த படங்களாக ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய இரு படங்களையும் கூறலாம். அடல்ட் காமெடி வகையைச் சேர்ந்த அப்படங்கள் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவர் நடிப்பில் வெளியாகவுள்ள மிஸ்டர் சந்திர மௌலி படத்திலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகள் அமைத்திருப்பது தற்போது வெளியாகியுள்ள பாடலில் இருந்து தெரிகிறது.

தெலுங்கில் மட்டுமே கவர்ச்சியாக நடித்துவந்த ரெஜினா தமிழிலும் கவர்ச்சியாக நடிக்க இறங்கிவிட்டார் என்பது மிஸ்டர். சந்திரமௌலியின் புகைப்படங்கள் வெளியான போதே தெரிந்தது. தற்போது வெளியாகியுள்ள ‘ஏதேதோ ஆனேனே’ பாடல் அதை உறுதி செய்துள்ளது.

சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் கௌதம், ரெஜினாவின் நெருக்கமான காட்சிகளுடன் முழுவதும் கடற்கரைப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது.

“நீ கண்ணாமூச்சி காட்டாதே

பட்டாம் பூச்சி ஏறி போற ஏனோ

உன் வெட்கம் சிதறும் வட்டத்தில்

நிக்கவைச்சு போற என்னை ஏனோ”

என விவேக் வரிகளை எழுதியுள்ளார். வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்துள்ளார் சாம். கிராஃபி, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்கரையில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

திரு இயக்கத்தில் பாஃப்டா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*