;
Athirady Tamil News

கலர்ஃபுல்லான கடத்தல் உலகம்..!!

0

ஆந்திரா மெஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருப்பதோடு அதன் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் கும்பலைச் சுற்றி நடைபெறும் கதையை அழகியல் தன்மையுடன் புதுமையான பட உருவாக்கத்துடன் சித்தரித்த படம் ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய அந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடித்தது. ஒரு படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதே ஜானரில் படங்கள் வெளிவருவது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடைமுறையாக உள்ளது. ஆரண்ய காண்டத்தைத் தொடர்ந்து பல படங்கள் அந்த ஜானரில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் போனபோது ஆந்திரா மெஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் வெளியீடு எப்போது என ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் எதிர்பார்க்க, அந்த எதிர்பார்ப்பை மூன்று வருடங்கள் கழித்து படக்குழு பூர்த்திசெய்யவுள்ளது.

விளம்பரப் படங்களை இயக்கிவந்த ஜெய் இயக்குநராக அறிமுகமாகும் ஆந்திரா மெஸ் படத்தின் ட்ரெய்லர் 2015ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ராஜ் பாரத் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தேஜஸ்வினி நடித்துள்ளார். பூஜா தேவாரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கிடையே நடக்கும் மோதல்களையும் முரண்களையும் வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது சில கதாபாத்திர உருவாக்கங்கள், காட்சியமைப்புகள் போன்றவை ஆரண்ய காண்டம் படத்தை நினைவுபடுத்துகின்றன. நான்கு ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரான இவர் இந்தியில் வெளியான ’சைத்தான்’,’ டேவிட்’ மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ‘ஆமென்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். பிரபாகர் படத் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + two =

*