;
Athirady Tamil News

க்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..!!

0

கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ள சைனா படத்தின் ட்ரெய்லர் நேற்று (ஜூன் 18) வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

துணை நடிகராகப் பல படங்களில் வலம் வந்த கலையரசன் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து கதாநாயக வாய்ப்புகள் வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் என்றால் துணை நடிகராக நடிக்கவும் சம்மதித்துவருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான ஹர்ஷவர்தனா சைனா படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாகக் கலையரசனும், கதாநாயகியாக ரிது வர்மாவும் நடித்துள்ளனர். சென்னை பர்மா பஜாரில் சிறிய கடை வைத்திருக்கும் கலையரசனின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தால், அவர் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிலை கடத்தல் தொழில் திரைக்கதையில் முக்கியபங்கு வகிப்பதை ட்ரெய்லரைப் பார்க்கும் போது உணரமுடிகிறது. மர்ம நபரிடம் இருந்து கலையரசனுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வருகிறது. தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளில் கலையரசன் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சிக்கலில் இருந்து எப்படி வெளியே வருகிறார். தொலைபேசியில் மிரட்டல் விடுக்கும் நபர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர். ‘வீட்டுல நடக்குறதுலாம் பார்த்தா இது மனுசங்க செஞ்சது மாதிரி தெரியல’ உள்ளிட்ட வசனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டுள்ளன.

சூது கவ்வும் படத்தில் நடித்த யோக் ஜபீ போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கலையரசன் நண்பனாக டேனியல் நடித்துள்ளார். வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − four =

*