;
Athirady Tamil News

“உமா வீட்டுத் தோட்ட” உதவியுடன், புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின்…

"உமா வீட்டுத் தோட்ட" உதவியுடன், புங்குடுதீவு கனடா நிலவன் அவர்களின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) §§§§§§§§§§§§§§§§ கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளான புங்குடுதீவைச் சேர்ந்த உதயராஜா ரதீஸ்வரி தம்பதிகளின் ஏகபுதல்வனான…

ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானம் -மீண்டும் நிராகரித்தது இலங்கை!!

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை கடந்த வருடம்நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கை மீண்டும்தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 52 அமர்வில்இடம்பெற்ற கூட்டமொன்றின் போது ஜெனீவாவில் உள்ளஇலங்கையின்…

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீட்பு!! (PHOTOS)

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்றைய தினம்…

மூன்று உலக சாதனைகளைப் படைத்த இந்திய வம்சாவளி சிறுமி! குவியும் பாராட்டுக்கள் !!

கனடாவின் மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மமதி வினோத் என்ற 9 வயது சிறுமி வளைய நடனத்தில் மூன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட மமதி வினோத் மூன்று…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி – நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!!

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: கடலூர் மாவட்டம் மற்றும்…

மட்டு மயிலந்தனையில் சிங்கள மயப்படுத்தல் மாதுறு ஓயா திட்டத்தை நிறுத்தவேண்டும் –…

மட்டக்களப்பு மயிலந்தனைமடு மாதந்தனை மேய்ச்சல்தரை பகுதியில் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம் நிலம் கூட வழங்க முடியாது என்பதுடன், நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச…

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துங்கள் – ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதியிடம்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டுப்பற்று உண்மையாக காணப்படுமாயின் அவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும். மக்களாணை இல்லாத இந்த அரசாங்கத்திற்கு சர்வதேசம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என…

பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது –…

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது. கட்சிக்கு யாப்பு, நிறைவேற்று சபை, செயற்குழு என்பதொன்று கிடையாது. ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும…

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா வழங்கிய நிதியுதவி உயிர் கொடுத்ததற்கு…

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியா வழங்கிய உதவி ஏனைய நாடுகள் வழங்கிய உதவிகளை விட பலம் மிக்கதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார…

தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் எல்பொட…

ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்று தீர்ப்பு!!

SHUT UP AND SIT DOWN என இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்திய ஜனாதிபதிக்கு நீதிமன்றம் SHUT UP AND SIT DOWN என்ற வகையிலான தீர்ப்பை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கும்…

ஓட்டுனர்கள் இன்றி ரத்தாகும் ரயில்கள்!!

ஓட்டுனர்கள் பற்றாக்குறையினால் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஓட்டுனர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட்டதாகவும் ஆனால்…

பூரு மூனாவுக்கு அடைக்கலம் வழங்கிய தம்பதி கைது!!

ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை கொலை செய்தமை உட்பட 13 கொலைகளுடன் தொடர்புடைய, “பூரு மூனா” என்ற சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்த பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த கணவன் - மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். "பூரு மூனா" என்ற…

குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்களின் அறிவிப்பு!!

முதல் 6 மாதங்களுக்குள் சிறு குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் அடையாளம் காண முடிந்தால், சிகிச்சை மற்றும் குணப்படுத்துவதற்கான நிகழ்தகவு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு…

காதலியைச் சந்திக்கச் சென்ற இளைஞர் பலி!!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மோரகஹவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோத்தபொல, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜபக்ச நிவங்க ரொமேஷ் என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்…

உக்ரைன், ரஷியா போரை நிறுத்த எனக்கு ஒரு நாளுக்கு மேல் ஆகாது – முன்னாள் அதிபர்…

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா, உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது: தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை. நான் அதிபராக இருந்திருந்தால் ரஷியா, உக்ரைன்…

நான் வேண்டுமா, ஏக்நாத் ஷிண்டே வேண்டுமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் – உத்தவ்…

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ரத்னகிரியில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது: எனது ஆதரவாளர்களுக்கு வழங்க என்னிடம் எதுவும் இல்லை. உங்கள் ஆசிர்வாதத்தையும் ஆதரவையும் பெற மட்டுமே இங்கே வந்துள்ளேன். மக்களை முட்டாளாக்கும் போலி…

சர்வதேச நீர் எல்லையில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்பந்தம்!!

சர்வதேச கடல் பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க உலக நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.கடல்சார் குறித்த ஐநா.வின் விதிகள் கடந்த 1994ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. சர்வதேச நீர் எல்லையில், அதாவது எந்த நாட்டின் அதிகார எல்லைக்கும் உட்படாத கடல்…

முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது முன்னாள் முதல்-அமைச்சர்-நாராயணசாமி கடும் தாக்கு!!

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து தொகுதி வாரியாக பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொகுதியில் பாதயாத்தரை நடைபெற்றது. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகாவீர் நகரில்…

சீன ராணுவத்துக்கான நிதி 7.2 சதவீதம் உயர்வு!!

2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ராணுவத்துக்கான நிதியை 7.2 சதவீதம் கூடுதலாக ஒதுக்கி சீன அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் மிகபெரிய ராணுவ பலம் கொண்ட நாடாகவும், ராணுவத்துக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்…

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம்!! (படங்கள்)

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில்…

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருந்து டிரம்ப் விலகலா?: பிரசாரத்தில் அதிரடி…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ஒருபோதும் விலக மாட்டேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி…

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி!!

பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற தம்பதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுவை லாஸ்பேட்டை நாவற்குளம் மோதிலால் நகரை சேர்ந்தவர் சண்முகம்(வயது44). கட்டிட…

நகைகளை திருடியவர்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றினை இளவாலை பொலிசார் கைது செய்துள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடந்த உற்சவத்தில் சங்கிலி…

யாழ்ப்பாணத்தில்போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான்…

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

தெல்லிப்பழை -கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என்பவரே உயிரிழந்துள்ளார். கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும்…

இன்றைய வானிலை குறித்த முக்கிய அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில்…

சிறுதானிய லட்டு பிரசாதம் காசி கோயில் நிர்வாகம் முடிவு: 9 எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர்…

காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்களுக்கு சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்தியாவின் பரிந்துரையைை ஏற்று 2023ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. சிறுதானிய உணவை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரதமர்…

இந்த வாரத்தில் முட்டை இறக்குமதி!!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி…

மார்ச் 17-ந்தேதி டெல்லி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்- கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார்!!

டெல்லி சட்டசபையின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 17-ந்தேதி தொடங்குகிறது. 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 21-ம் தேதி டெல்லி வருவாய் துறை மந்திரி கைலாஷ் கெலாட் தாக்கல் செய்கிறார். டெல்லியில் கடந்த 2021-ம்…

உஸ்பெக்கில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமான இருமல் மருந்து தயாரித்த நிறுவனத்தின் உரிமம்…

உபி மாநிலம், நொய்டாவில் மரியான் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு உஸ்பெகிஸ்தானில் இந்நிறுவனத்தின் இருமல்…

காதலினால் விபரீத முடிவு எடுத்த இளைஞன்!!

யாழ்ப்பாணம் - பாசையூர் ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை…

மத்திய வங்கி ஆளுநரின் மகிழ்ச்சிகர செய்தி!!

நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான அந்நிய செலாவணிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத்…

நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும்!!

இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே…