;
Athirady Tamil News

1,137 உறுப்பினர்களை விரட்டியடித்தது யானை!!

உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சியின் செயற்குழு நேற்று (21) தீர்மானித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் 341 மாநகர…

இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் :பிரிட்டன் அரசு!!

இந்தியர்கள் 2,400 பேருக்கு விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.இளைய தொழில் வல்லுநர்கள் திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

இலங்கையில் நிலநடுக்கம்!!

புத்தள பிரதேசத்தில் சில கிராமங்களில் இன்று (22) பிற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன. ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள்…

சிவசேனாவின் பாராளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு!!

சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவை…

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் :அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை !!

எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா மீது பழிபோடுவது மற்றும் வெறுப்பை திணிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இன்று உக்ரைன், நாளை தைவான் என்ற அறிக்கைகளுடன் சீனா…

யாழில் 21ஆயிரம் கடலட்டைகளுடன் 12 பேர் கைது!!

யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் , 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் , 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 12 பேரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்…

சிவசேனா கட்சி விவகாரம் – உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று…

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர். இதற்கிடையே, தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முதல் மந்திரி ஷிண்டே மற்றும்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக்…

அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய-அமெரிக்கர் விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை…

21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை…

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைப்பு !!

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காமை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் காலமானார் !!

மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கரீம் முஹம்மது ராசீக், இன்று புதன்கிழமை (22) காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 56 ஆகும். திடீர் மாரடைப்பு காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு !!

கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் இயக்குபவர் என…

நான்கில் ஒருவருக்கு நீரிழிவு – புதிய ஆய்வு !!

இலங்கையில் உள்ள வயது வந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு (23%) நீரிழிவு நோய் உள்ளதுடன், மூவரில் ஒருவருக்கு (31%) உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இலங்கை பல்கலைக்கழகங்கள், அவர் கொழும்பில் உள்ள மருத்துவ…

இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடா முறை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!!

இந்தியாவில் 'யு.பி.ஐ.' (ஒருங்கிணைந்த பண பட்டுவாடா முறை) என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் உள்ளது. இதேபோன்று சிங்கப்பூரில் 'பே நவ்' என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவின் 'யு.பி.ஐ.'…

உக்ரைன் ஒருபோதும் ரஷியாவிற்கு வெற்றியாக இருக்காது – அதிபர் ஜோ பைடன் பேச்சு!!

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.…

கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 101 கிலோ தங்கம் பறிமுதல்!!

இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டி.ஆர்.ஐ.) நேபாள எல்லை வழியாகச் நடந்த சூடான் நாட்டினரின் தங்கக்கடத்தலை முறியடித்துள்ளது. பாட்னா, புனே மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வெவ்வேறு வழித்தடங்களில் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.…

சில அரசியல் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன !!

சில அரசியல் கட்சிகள், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகளை முன்வைக்காமல் மக்களிடம் பொய் சொல்லி அரசியல் நாடகம் ஆடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் மக்களினதும்…

நிதி வழங்க திறைசேரி செயலாளருக்கு அனுமதி !!

அதிகாரமளிக்கபட்ட கடன்பெறுகை எல்லைக்குள் தேவையான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திறைசேரி செயலாருக்கு அதிகாரமளிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டத்தின்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு மாகாணத்திலும்…

இன்று தேசிய எதிர்ப்பு தினம்: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு !!

புதிய வருமான வரி திருத்தத்தை மீளப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்துவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் பிரதான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில்…

உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் பேச்சு !!

உக்ரைன் மீதான போரை நிறுத்த முயற்சிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மீண்டும் சொல்கிறோம் போரைத் தொடங்கியது அவர்கள்தான். நாங்கள் போரை நிறுத்தவே பலத்தை பிரயோகித்தோம் என அவர் தெரிவித்தார். உக்ரைன் நாட்டுக்கு…

சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரேயை கைவிட்டதா கூட்டணி கட்சிகள்? !!

சிவசேனா கட்சி மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜனதாவுடன் நட்பு பாராட்டி கூட்டணி வைத்து இருந்தது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவியை பங்கிடுவதில் சிவசேனா, பா.ஜனதா இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து மாநிலத்தில்…

பாலிவுட்டில் நடிக்க கூப்பிட்டாங்க! சினிமா ஆசை குறித்து சோயிப் அக்தர் விரக்தி!!

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் சோயிப் அக்தரை, பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் நடிக்க அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படுபவருமான சோயிப்…

பயங்கரவாதிகள், சமூக விரோத கும்பல்களை ஒடுக்க 72 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!!

தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடு முழுவதும் 50 இடங்களில் நடத்திய சோதனையில் பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோத கும்பல்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நடந்த விசாரணையின் மூலம் பாகிஸ்தான்…

எம்மி விருது பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்த ஹாலிவுட் மூத்த நடிகை பார்பரா போசன் (83), கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர்…

ஆக்ராவில் களைகட்டும் “தாஜ் மஹோத்சவ்”- 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் அம்மாநில உயர்கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாய் நேற்று தாஜ் மஹோத்சவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 கைவினை கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். மஹோத்சவை தொடங்கி வைத்த…

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறியது ரஷியா!!

அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல்…

சீர்வரிசையாக பழைய பர்னீச்சர் பொருட்களை கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது வாலிபர். இவர் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற…

பாகிஸ்தானில் தற்கொலைப்படை பெண் பயங்கரவாதி கைது- விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள்…

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில் மஹால் பலூச் என்ற பெண்ணை பயங்கரவாத ஒழிப்பு படை சமீபத்தில் கைது செய்தது. அவரது கைப்பையில் இருந்து, தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தும் கவச உடை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட நிலையிலான…

நட்பாக பழகிய நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது…

பிச்சையெடுக்கச் சுதந்திரம்? (கட்டுரை)

“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்” இப்படிப் பேசியிருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது.…

ரஷியாவுக்கு உதவ சீனா ஆயுதங்களை வழங்கலாம்: அமெரிக்காவின் கருத்தை எதிரொலித்த நேட்டோ தலைவர்!!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு ஆயுதங்களை வழங்கினால் அது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்…

திருமண விழாவில் கைத்துப்பாக்கியால் விருந்தினர்களை மிரட்டிய ஆன்மிகவாதியின் சகோதரர்!!

மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இந்த…