;
Athirady Tamil News

30 வருட விடுதலைப்போராட்ட காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க பிரதமருக்கு அருகதையில்லை…

கடந்த 30 வருடங்களாக தமிழர் தாயகத்தில் தமிழ் இளைஞர் யுவதிகள் பிரபாகரன் தலைமையில் போராடினர். அத்தகைய 30 வருட விடுதலைப்போராட்டத்திற்கான காலத்தை இருண்ட யுகமென விமர்ச்சிக்க இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு அருகதை இல்லை என அகில இலங்கை…

நிலத்தினை ஆக்கிரமிக்க வருபவர்களுக்கு பூமாலை அணிவிப்பது இனத்திற்கு இழைக்கும் துரோமாகும்!!

எங்களின் நிலத்தை ஆக்கிரமித்து அதனை பௌத்தமயமாக்க வந்தவர்களை எங்களின் ஒட்டுண்ணிகள் வரவேற்று பூமாலை அணிவித்து இருக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு அவர்கள் செய்யும் துரோகம் ஆகும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா…

இலங்கை வரும் விக்டோரியா நுலாண்ட்!!

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வு !!

Inter Parliament Union இன் 144 ஆவது அமர்வானது இந்தோனோசியாவின் பாலியில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த அமர்வானது நேற்று (20) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குறித்த அமர்வில் பங்கேற்கும்…

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்க வேண்டும்!!

ஜனாதிபதியுடனான சந்திப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது!! (படங்கள்)

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று, தடை செய்யப்பட்ட போதை பொருள் மாத்திரைகளுடன் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளர். உப பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு…

மின்கட்டணம் 500% அதிகரிக்கும் அபாயம் !!

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500% அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மின்சார…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி !

சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.

சர்வக் கட்சி மாநாட்டை மனோ அணியும் புறக்கணித்தது !!

சர்வக் கட்சி மாநாட்டைப் புறக்கணிப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு…

யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் உலக காடுகள் தினம்!! (படங்கள்)

உலக காடுகள் தினத்தை ( 21. 03 2022) கொண்டாடும் முகமாக இன்று யாழ்/விநாயகர் ஞானக்குழந்தை இல்ல மாணவர்களுடன் எதிர்காலத்தை நோக்கிய சுற்றுசூழல் கழகமும் இணைந்து ஞானக்குழந்தை ஆசிரியர் திருமதி கா.மதுஷாந்தினி அவர்களின் தலமையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.…

விபத்தில் ரஷ்ய பெண் உயிரிழப்பு!!

காலி – மாத்தறை வீதியில் அஹங்கமவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறையிலிருந்து காலி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்…

​கோட்டாபய ராஜினாமா: பேச்சாளர் விளக்கம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அந்த செய்திகள் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்சிலி ரத்னாயக்க விளக்கமொன்றை கொடுத்துள்ளார். “நெருக்கடியான நேரத்தில்…

இரண்டு புதிய பாலங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய கிராமிய பாலம் நிர்மாணத்…

கண் சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

தேனி சஞ்சிகை மற்றும் தேனி இணையதளத்தின் ஆசிரியர் அமரர் கணேஷ் கெங்காதரன் (ஜெமினி) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் எழுவைதீவு தோமையார் முன்பள்ளிக்கு மேலைத்தேய வாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தமிழீழ…

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறப்பு!!…

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு…

வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக மோசடி – அவதானம்!

வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து , வடமாகாணத்தில் பண மோசடியில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகின்றது. சுமார் இரண்டு வருட காலங்களுக்கு மேலாக குறித்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில் கும்பலுக்கு எதிராக உரிய தரப்புக்கள்…

பொரளை கைக்குண்டு சம்பவம் – சந்தேக நபர் பிணையில் விடுதலை!!

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான ஓய்வுபெற்ற வைத்தியர் தாக்கல் செய்த…

சீனாவிடம் உதவி கோரும் இலங்கை !!

சீனாவிடம் இலங்கை கோரிய கடன் உதவி தொடர்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினார். 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்…

80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு!!

80,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று (21) சந்தைக்கு வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு இன்றும் கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து சந்தைக்கு வௌியிடப்பட்டுள்ளதாக…

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்!!

அனைத்து கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனைத்து கட்சிகள் மாநாட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீசல் / எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மற்றுமொரு சிக்கல் !!

நாட்டில் நிலவும் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மரக்கறி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் தட்டுப்பாட்டால்…

ரயில் கட்டணம் குறித்து இன்று பேச்சு !!

ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்களுக்கும், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் அரசாங்கத்திடம்…

லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள்,…

லண்டன் மீரா பாபுவின் பிறந்ததினக் கொண்டாட்டத்தில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள் நிகழ்வும் மாணவர்களுக்கான கற்றல்…

பரீட்சைகள் திட்டமிட்டபடி நடக்கும்!!

தாள் தட்டுப்பாடு காரணமாக ஒத்திவைக்கப்படவிருந்த மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தவணைப் பரீட்சைகளை மீண்டும் நடாத்துவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான…

எரிபொருள் வாங்க சென்றவர் கொலை செய்யப்பட்டார்!!

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (20) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் வாங்குவதற்காக வந்த…

இன்று பல தடவைகள் மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்…

எமது பால்மாவின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது !!!

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம் கவனத்திற்கொள்ளாது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது…

’கண்ணை இமைபோல் காப்போம்’ !! (மருத்துவம்)

மனித உடலின் கண்கள் என்பது, மிகவும் முக்கியமான ஓர் உறுப்பாகும். நாம் இந்த உலகத்தை, கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோம். அதில் ஏற்படும் சிறிய பிரச்சினையும், நமது அன்றாடச் செயல்களில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நாம் செய்யும் சில…

மகிழ்ச்சி பட்டியலில் இலங்கையின் இடம் !!

உலகளாவிய ரீதியில் 149 நாடுகளைக் கொண்ட, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை 129ஆவது இடத்திலுள்ளது. கடந்த பட்டியலில் 130 ஆவது இடத்தில் இருந்து இலங்கை முன்னேறியிருந்தாலும் பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவுகள் மற்றும் நேபாளம்…

’முஸ்லிம்களின் சாபத்தையே அரசாங்கம் அனுபவிக்கிறது’ !!

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளதாக தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது…

பயணிகள் பேருந்து கவிழ்ந்ததில் பலர் காயம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் பலர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்ட நபர் கைது!!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு 120 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட நபரொருவரை ஆர்மர் வீதி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்…

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் விஜயம்!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (20) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய…