;
Athirady Tamil News

பாஜக நிர்வாகி படுகொலை- இறுதி ஊர்வலத்தில் பாஜக தலைவரின் கார் மீது தாக்குதல்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா, நெட்டாறு பகுதியில் பாஜக இளைஞரணி நிர்வாகி பிரவீன்(வயது 32), நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு- சாலை துண்டிப்பால் மக்கள் அவதி..!!

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மணாலி தாலுகாவில் உள்ள நேரு குண்ட் அருகே இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநில…

மேல்சபையில் அமளியில் ஈடுபட்ட மேலும் ஒரு எம்.பி. இன்று சஸ்பெண்டு..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர்,…

கார்கில் வெற்றி தினம் ராணுவத்துக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம்..!!

கார்கில் வெற்றி தினம் ராணுவத்தின் அசாதாரண வீரத்தின் அடையாளம். தாயகத்தைக் காக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் என்றும் கடன்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு புகழாரம் சூட்டியுள்ளார். லடாக்கின் கார்கிலில்…

ரூ.28 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்..!!

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், இந்திய ராணுவத்துக்கு ரூ.28 ஆயிரத்து 732 கோடி மதிப்புள்ள ராணுவ சாதனங்கள் மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.…

பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்..!!

மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2…

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு: சோனியா காந்தி இன்று மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை…

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை…

மாநிலங்களவையில் தொடர் அமளி: தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் உள்பட 19 எம்.பி.க்கள்…

நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஒத்திவைப்பு இந்நிலையில், மாநிலங்களவை நேற்று…

புதிய விமான நிலையத்தை எங்கே அமைப்பது? – மத்திய மந்திரியுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று அவர், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை சந்தித்து தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்தனர்..!!

'செஸ் விளையாட்டின் ஒலிம்பிக்' என்று அழைக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக கடைசி இரு போட்டிகள் 'ஆன்-லைன்' மூலம் நடத்தப்பட்டன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷிய தலைநகர்…

பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, முதல்-அமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை…

சென்னையில் 2 நாள் சுற்றுப்பயணம் பிரதமர் மோடி வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசார் குவிப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். 2 நாட்கள் அவர் சென்னையில் சுற்றுப்பயணம் செய்கிறார். நாளை மாலை சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை தொடங்கி வைக்கிறார். நாளை மறுநாள்…

“அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக உத்தரவிட முடியாது” –…

மீண்டும் பணி வழங்கக்கோரி மக்கள்நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 13 ஆயிரத்து 500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான…

‘சி.பி.ஐ., அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது’ –…

சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்க்கட்சித் தலைவர்களின் தொடர் குற்றச்சாட்டு. இது தொடர்பாக…

மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதல்-அமைச்சர் எச்சரிக்கை..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து முழு அளவுக்கு உடல்நலம் பெற்று வரவில்லை என்று சொன்னாலும், இடையிலே சில நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை பெற்று வருகிறேன். கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காரணத்தால், என்னுடைய தொண்டை…

கர்நாடகாவில் பாஜக இளைஞரணி உறுப்பினர் படுகொலை- முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்..!!

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த ஆளும் பாஜகவின் இளைஞரணி உறுப்பினர் பிரவீன் நெட்டாரு நேற்று மாலை பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த படுகொலையை செய்து…

நாடு முழுவதும் 68 நகரங்களில் 2,877 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு மத்திய அரசு…

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி கிரிஷன் பால் குர்ஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: மின்சார வாகனங்களின் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்பை…

உள்நாட்டு சுற்றுலாவுக்கு மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர்…

நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த 8 மாநிலங்களில் இருந்து 5 பெண்கள் உள்ளிட்ட 75 மோட்டார் சைக்கிள் வீரர்கள், 18 மாநிலங்களுக்கு இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டனர். நடமாடும் வடகிழக்கு என்ற பெயரிடப்பட்டு நடைபெற்ற இந்தப் பயணத்தில்…

பாஜக அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் சிறையில் அடைக்க சொல்கிறார்- பிரதமர் மோடி மீது…

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில்…

குஜராத்தில் சோகம் – கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு..!!

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை…

தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன்: அமெரிக்கவாழ் சென்னை மாணவிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி…

சென்னையை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் வசிக்கும் லோகன் ஆஞ்சநேயுலு, ராம் பிரியா தம்பதியரின் 8-ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரிணி, அந்நாட்டில் நடைபெற்ற 'ஸ்கிரிப்ஸ் தேசிய உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில்…

சென்னையில் 66-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 65 நாட்களாக சென்னையில் ஒரு…

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு..!!

மிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் ரத்து செய்யப்படும். மயிலாப்பூர்:…

தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர்…

கடந்த 20-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து படகில் மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடி படகுகள்…

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்: ஜனாதிபதியாக முர்மு பதவி ஏற்றார் -தலைவர்கள்…

இந்திய திருநாட்டின் 15-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திரவுபதி முர்மு (வயது 64). திரவுபதி முர்மு தேர்வு ஒடிசாவின் சந்தால் பழங்குடியின குடும்பத்தில் பிறந்து நாட்டின் மிகப்பெரிய பதவியை அலங்கரித்துள்ள அவர், கடந்த 18-ந்தேதி நடந்த…

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.323 கோடியில் விலையில்லா சைக்கிள் முதல்-அமைச்சர்…

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.…

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை..!!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. புகார் கூறியது. மேலும் இதுதொடர்பாக தி.மு.க.…

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், இளையராஜா சந்திப்பு..!!

விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களை பாராளுமன்ற மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கும் நடைமுறைப்படி, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் சிறப்புக் கவனம்- மத்திய அரசு உறுதி..!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு, மத்திய சுற்றுச்சுழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்…

ட்ரோன் உதிரி பாகங்கள் உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்- மத்திய அரசு விளக்கம்..!!

ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சிவில்…

20 ஆண்டுக்கு முன்பே கட்டிய கல்லறையில் முதியவர் உடல் அடக்கம்; இறுதிச்சடங்கு, திதி செலவுக்கு…

விவசாயி பொதுவாக சாமியார்கள், மடாதிபதிகள் தான் தாங்கள் இறப்பதற்கு முன்பே தங்களுக்கு சமாதி கட்டி வைத்து இருப்பார்கள். அதுபோல் கர்நாடகத்தில் விவசாயி ஒருவர் தனக்கு தானே கல்லறை கட்டி வைத்திருந்ததும், அதிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட…

கப்பலில் இருந்து விழுந்த நபர் 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு! இரவு முழுவதும் கடலில் தவித்த…

சீனாவைச் சேர்ந்த கடற்பயணி ஒருவர் சுறா மீன்கள் அதிகம் உலாவும் கடலுக்குள் கப்பலில் இருந்து தவறுதலாக விழுந்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் நடந்துள்ளது. அவர் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு பின்…

‘உயிருடன் செல்லும் எந்த உயிரினத்திற்கும் நிச்சயம் மரணம்’ – கடலுக்கடியில்…

உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் உப்புத்தன்மை அதிகம் நிறைந்தது செங்கடல். இக்கடல் மத்திய கிழக்கு நாடுகள் - ஆப்ரிக்கா இடையே அமைந்துள்ளது. இது மத்திய தரைக்கடலை இணைக்கும் கடலாகவும் உள்ளது. இந்நிலையில், செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் மியாமி…

சித்தாந்தங்களுக்கு தனி இடம் உண்டு, ஆனால் நாடு தான் முதன்மையானது – பிரதமர் மோடி…

மறைந்த கல்வியாளர், சமூக சேவகர், மற்றும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு நாளைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் நாட்டின் நலன்களை விடஅரசியல்…