;
Athirady Tamil News
Daily Archives

4 May 2018

ஜின்னா புகைப்பட விவகாரம் : அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில் இணைய வசதி துண்டிப்பு..!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னா புகைப்படம் இடம்பெற்றிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அலிகார் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக ஜின்னா புகைப்படம் இடம்பெற்றுள்ளது…

ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு மாவட்டத்தை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினர்..!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.…

பொது இடத்தில் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட இருவர் சுட்டுக் கொலை..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி மாவட்டத்தில் சாரநாத் அருகேயுள்ள ராஜ்நஹியா பகுதியில் நேற்றிரவு பசந்தா யாதவ் மற்றும் அவரது மருமகன் ராஜேஷ் ஆகியோர் தெருவோரம் கோழி முட்டை விற்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் முட்டை கடையின்…

சோமாலியாவில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை கடத்திய பயங்கரவாதிகள்..!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள மருத்துவ உதவி முகாமில் சேவையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த செவிலியரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடந்த சில…

ஆந்திரா சிறுமி கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை..!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் சுப்பையா நேற்று கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பெற்றோர்…

போலீஸ் அதிகாரியை தாக்கிய வழக்கில் இருந்து இம்ரான் கான் விடுவிப்பு..!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த 2013-ம் நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி மற்றும் தாஹிருல் காத்ரி தலைமையிலான பாகிஸ்தான் அவாமி…

ஆந்திராவில் சிறுமி கற்பழிப்பு – ரூ.5 லட்சம் நிதியுதவி..!!

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரிக்சா டிரைவர் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்ய வேண்டி…

அமெரிக்காவில் இடைக்கால நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்..!!

நியூயார்க் நகரில் அமைந்துள்ள சிவில் நீதிமன்ற இடைக்கால நீதிபதி மற்றும் குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளின் நியமனம் தொடர்பான அறிவிப்பாணையை நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ இன்று வெளியிட்டார். அதில் தீபா அம்பேகர் சிவில்…

ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ்க்கு 175 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கிங்ஸ் லெவன்…

ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (04.05.2018)

யானையின் உடற்பாகம் மீட்பு உயிரிழந்த யானையின் உடற் பாகமொன்று, பொலன்னறுவை-செவனப்பிட்டிய பகுதியிலிருந்து, வெலிகந்த வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளால், இன்று மீட்கப்பட்டது. குறித்த யானை, ஹக்க படஸ் என்ற வெடிமருந்தை உட்கொண்டே…

ஒரே மேடையில் 1000 பேர் மட்டக்களப்பில் சாதனை..!! (படங்கள்)

மட்டக்களப்பில் ஆயிரம் மாணவர்கள் ஒரே மேடையில் தோன்றி நடன நிகழ்வொன்றை நடத்தி சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பன்னாட்டு நடன தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம்…

மனைவியை கொடூரமாக கொலை செய்த சித்திரக் கலைஞர்..!!

இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.பிரபல…

ஹபாயா விவகாரம் யாழ் நகரில் முஸ்லீம்கள் பாரிய ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக்…

கிளிநொச்சியில் கடமை நேரத்தில் தாக்கப்பட்ட பாடசாலை அதிபர்..!!

ஒரு பாடசாலை அதிபர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றது என்பது ஒரு பாரதூரமான குற்றமாகும், இதற்குப் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பரந்தன்…

பள்ளிபாட புத்தகம் வாங்க சென்றபோது சுற்றுலா பஸ் மோதி கைக்குழந்தையுடன் தாய் பலி..!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நாரான்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சாத். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அன்சாத்தின் மனைவி நிசிதா (வயது 27). இவரது மூத்த மகள் அமனபாத்திமா (3), 2-வது மகள் 6 மாத கைக்குழந்தை நிதாபாத்திமா. நேற்று மாலை…

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆலோசகர் அமெரிக்காவுக்கு ரகசிய பயணம்..!!

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வந்த பதற்றம் சமீபத்தில் தணிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிய பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் விரைவில் சந்தித்து உயர்மட்ட…

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட சிங்களப் பெண்..!!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.…

22 ஆண்டுகளுக்கு பிறகு திருமண நிகழ்ச்சி நடந்த கிராமம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் டோல்பூர் மாவட்டத்தில் ராஜ்காட் என்ற குக்கிராமம் உள்ளது. சம்பல் ஆற்றங்கரையில் உள்ள இக்கிராமத்தில் 350 பேர் மட்டுமே வகிக்கின்றனர். இங்கு ரோடு வசதி இல்லை. மின்சாரம் கிடையாது. குடிநீர் குழாய்கள் மற்றும் மருத்துவ வசதி என…

கயானா நாட்டு மீனவர்கள் 12 பேர் கொன்று குவிப்பு- கடற்கொள்ளையர் அட்டூழியம்..!!

தென்அமெரிக்க நாடான கயானாவில் இருந்து 4 படகுகளில் 20 மீனவர்கள் வடஅட்லாண்டிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அண்டை நாடான சுரினாம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் கயானா…

கரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர் – (வீடியோ &…

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வேனில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கரடியை அந்த…

ஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு – மக்கள் அவசரமாக வெளியேற…

ஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழும்பு பரவியுள்ளது. மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி…

கோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் கோமா நிலையில் இருந்தார். கடந்த மாதம் அவரை மருத்துவமனையில்…

இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழக்கப்பட மாட்டாது – ஸ்வீடன் அகாடமி…

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது. இந்நிலையில், ஸ்வீடன் அகாடமியில் உறுப்பினராக…

நுண்கடன் வாங்கிய பெற்றோர் வெளிநாட்டில்: இளம்யுவதி தற்கொலை..!!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் யுவதி ஒருவர் கடன் தொல்லை காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (3) நண்பகல் வேளை சிவன் கோயில் வீதி பேத்தாழையில் இடம்பெற்றுள்ளது. பஞ்சாட்சரவடிவேல் நோஜிதா வயது 23…

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (04.05.2018)

விஷேட நீதிமன்றம் அமைப்பதற்கான சட்ட நடவடிக்கை இலஞ்ச, ஊழல் வழக்குகளை தீர்ப்பதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட நீதிமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…

லெபனானில் இருந்து 58 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்..!!

லெபனானுக்கு தொழிலுக்காக சென்ற இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த 58 இலங்கைப் பெண்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர்…

மக்களுக்கு கிடைத்த வாழ்வாதார திட்டத்தை திருப்பி அனுப்பிய துணுக்காய் பிரதேச செயலாளர்-…

துணுக்காய் பிரதேச செயலருக்கு எதிராக உயிலங்குளம் மாதிரி கிராம மக்கள் பிரதேச செயலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். தமது பகுதிகளில் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டு தடுப்பு…

கந்தபுரம் அம்பலப்பெருமாள் வீதி புணரமைப்பு பணிகள் இன்று ஆரம்பிப்பு..!! (படங்கள்)

வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி 85 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டின் கீழ் பல வருடங்களாக புணரமைகாது இருந்த கந்தபுரம் அம்பலப்பெருமாள் வீதி புணரமைப்பு பணிகள் இன்றுஆரம்பிக்கப்பட்டது. நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின்…

20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..!!

ஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். தெற்கு பிலிப்பைன்ஸ்சில் உள்ள மாராவியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக…

வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளை குறைக்க டிரம்ப் உத்தரவு..!!

வடகொரியாவில் உள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து முக்கிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், படை குறைப்பு குறித்து பரிசீலிக்கும்படி பென்டகனுக்கு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாகவும் பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி…

கற்பதற்கு பாடசாலை இன்றி தவிக்கும் இராணுவ வீரரின் மகள்..!!

இந்த ஆண்டு முதல் ஒரு பாடசாலை செல்ல ஆரம்பிக்க வேண்டி இருந்தும் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ள சிறுமி தொடர்பான செய்தி ஒன்று இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. ஆறு வயதுடைய குறித்த சிறுமி தொடர்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம்…

கிழக்கு மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலை..!!

கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும், முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.…

அசாமில் பணி முடிந்து வீடு திரும்பிய சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை..!!

அசாம் மாநிலம் கோக்ராஜகர் மாவட்டத்தில் காவல்துறையின் கலால் பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாராயண் போரல், கடந்த புதன்கிழமை பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது உல்தாபானி வனப்பகுதி அருகே அவரை வழிமறித்த மர்ம நபர்கள்,…

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்களை குவிக்கும் சீனா..!!

தென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு…