;
Athirady Tamil News
Daily Archives

5 October 2018

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்-குழந்தை பலி..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரேஷ்குமார். இவரது மனைவி ஹன்சிகா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கோப்பாய் தொகுதிக்கான கிராமிய அபிவிருத்தி தொடர்பான…

கோப்பாய் தொகுதிக்கான கிராமிய அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4.30 மணியளவில் யாழ். ஊரெழு மேற்கு திலீபன் வீதியில் அமைந்துள்ள பாரதி சனசமூக நிலைய முன்றலில் நடைபெற்றது. வலிகிழக்கு…

கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலய மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்..!!

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கினிகத்தேனை மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மாணவன் பசிந்து பாஷித்த ரணசிங்க 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். 2018ம் ஆண்டுக்கான…

யாழில் பல பகுதிகளில் இன்று மின்சாரத் தடை..!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளை சனிக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.…

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அனுராதபுரத்தில் போராட்டம்..!! (படங்கள்)

அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி அனுராதபுரம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (05.10) மதியம் 12.00 மணியளவில் 'அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.…

ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி..!!

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். கடைசியாக நடந்த இரண்டு கூட்டங்களின் முடிவில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது. கடைசியாக…

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி – ரூ.74.10 ஆக…

கச்சா எண்ணை விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணை விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி…

இடுக்கி அருகே பிரசவ வார்டுக்குள் பர்தாவுடன் சுற்றி திரிந்த போலீஸ் அதிகாரி கைது..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா குளமாவு போலீஸ் நிலையத்தில் சீனியர் சிவில் போலீஸ் அதிகாரியாக உள்ளவர் நூர் சமீர். இவரது நண்பர் பிலால். இவர்கள் இருவரும் சம்பவத்தன்று தொடுபுழா ஏலலூரில் உள்ள தனியார் ஆஸ்பதிரிக்கு பர்தா அணிந்து…

மகளுக்கு கல்லீரல் தானம் செய்த எய்ட்ஸ் பாதித்த தாய்..!!

தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க் நகரை சேர்ந்த ஒரு பெண் குழந்தை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாள். மாற்று கல்லீரல் ஆபரேசனுக்கு காத்து இருந்தாள். 180 நாட்களாகியும் அவளுக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை.…

மகாராஷ்டிராவில் பிரம்மாண்ட பேனர் விழுந்ததில் இருவர் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது தீடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.…

2018-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு – இரண்டு பேருக்கு பகிர்ந்தளிப்பு..!!

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று…

ஜாமின் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாத நிலையில் சாமியார் குர்மீத் ராம்…

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட…

ஆவணங்களில் இருந்து தந்தை பெயரை நீக்ககோரி பாகிஸ்தான் பெண் வழக்கு..!!

பாகிஸ்தானை சேர்ந்த பெண் ததீர் பாத்தீமா (18). தந்தை இவரை விட்டு பிரிந்து விட்டார். தாயுடன் சேர்ந்து வாழும் இவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் ‘‘எனது தந்தை நான் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.…

வவுனியா பாடசாலை ஒன்றில் 21 வருடங்களின் பின் மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார்..!!

வவுனியா வடக்கு சின்னப்பூவரசங்குளம் விக்னேஷ்வரா மகாவித்தியாலயத்தில் 21 வருடங்களுக்கு பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி சித்தி அடைந்து சாதனை. செல்வி ஜூவரட்ணம் ஆரணி தனது விடா முயற்சியினாலும் பாடசாலை அதிபர் திரு செல்வதேவன்…

லமைப்பரிசில் பரீட்சை: முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி..!!

இன்று வெளியான புலமைப்பரிசில் பரீட்சை புள்ளிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் நெடுங்கேணி மாமடு, பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள் 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று…

வேலைவாய்பின்மை – வெளிநாட்டுப் பணம் – தென்னிந்திய சினிமாத் தாக்கமே – ஆவாவின் தோற்றம்..!!

வடக்கில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இன்மை, யுத்த காலத்தில் வெளிநாடு சென்றோர் அனுப்பும் பணத்தில் இளைஞர்கள் வாழ்வது, தென் இந்திய சினிமா படங்களின் தாக்கம் போன்றவையே ஆவா போன்ற குழுக்களின் தோற்றத்துக்கு காரணம் என சிரேஷ்ட பிரதிக் காவற்துறை…

வவுனியா நகரசபையினால் சோலைவரி அறவீட்டு நடவடிக்கை ஆரம்பம்..!! (படங்கள்)

வவுனியா நகரசபையினரால் கடந்த பல வருடங்களாக சோலை வரி பெற்றுக்கொள்ளாத வர்த்தகர்களுக்கு எதிராக நேற்றும் இன்றுமாக நகர் பகுதிகளில் நகரசபை உத்தியோகத்தர்களினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை 2018.09.06.07 இலக்க சபை…

வவுனியா வர்த்தகர் சங்கம் முதலாமிடம் பெற்றுக்கொண்ட மாணவியின் கல்வி நடவடிக்கைக்கான நிதியை…

வவுனியா வர்த்தகர் சங்கம் முதலாமிடம் பெற்றுக்கொண்ட மாணவியின் கல்வி நடவடிக்கைக்கான நிதியை பொறுப்பேற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் வவுனியா மாவட்டத்தில்…

வல்வெட்டித்துறை நகரசபையினரால் பதற்ற நிலை..!! (படங்கள்)

வல்வெட்டித்துறை நகரசபையில் ஆளும் தரப்பினரால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தீருவில் பகுதியில் நிர்மானிக்கப்படவிருந்த குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை நிறுத்தக்கோரி ஆரப்பாட்டம் ஒன்று…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி யாழில் தேசிய ரீதியில் முதலிடம்..!!

வெளியாகியுள்ள ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 198 புள்ளிகளை பெற்று யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும்…

அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள்..!!

வெளியாகியுள்ள தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன. 71 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 15 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்…

இந்தியா-ரஷியா இடையே சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா…

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பி ஷாபாஸ் ஷரீப் கைது..!!

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரீப், முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆசியானா இ இக்பால் வீட்டுவசதி திட்டத்தில் விதிமுறைகளை மீறி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் அளித்ததாக புகார் இருந்தது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தம்பியான…

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி..!!

காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் போலீஸ் நிலையத்தை குண்டு வீசி தாக்கினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ஒரு…

மாஸ்கோவில் போர் விமானம் விபத்து – அதிஷ்டவசமாக விமானிகள் உயிர்தப்பினர்..!!

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகி டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.…

வவுனியாவில் சாரணியர்களின் வருடாந்த ஒன்றுகூடலின் ஆரம்ப நிகழ்வு..!! (படங்கள்)

வவுனியா வ/கோவில்குளம் இந்துக் கல்லூரி சாரணியர்களின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 05/10/2018 அன்று கல்லூரியில் சாரணியருக்கான பொறுப்பாசிரியர் திருமதி. நளினி கிஷோக்குமார் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம…

கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமர் ஆக தயார் – ராகுல் காந்தி..!!

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த தலைவர்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். இந்த…

லஞ்ச ஊழல் வழக்கில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 15 ஆண்டுகள் சிறை..!!

தென்கொரியாவில் லீ மயுங்-பாக் அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சியோல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.…

மனைவியை கொன்ற வழக்கில் டி.வி. அறிவிப்பாளரின் ஆயுள்தண்டனை ரத்து- டெல்லி கோர்ட்டு…

டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் வர்ணனையாளராக பணியாற்றியவர் சுகைப் இல்யாசி. இவர் ‘‘இண்டியாஸ் மோஸ்ட் வான்டெட்’’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார். இவரது மனைவி அஞ்சு கிழக்கு டெல்லியில் வசித்து வந்தார்.…

கதறக் கதற மணமகனை கட்டாயப்படுத்தி 17 வயது சிறுமியுடன் திருமணம்…வெளியாகியுள்ள வீடியோ…

தமிழ்நாட்டின் வேலூரில் காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரை கடத்தி வந்து மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. சதீஷ் (21) என்ற இளைஞர் வேறு ஜாதியை சேர்ந்த சுமதி என்ற 17 வயது…

யாழில் திடீரென உயிரிழந்த பெண்..!!

திடீ­ரென உடல் நடுக்­கம் ஏற்­பட்டுப் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். இந்­தச் சம்­ப­வம் நேற்று சர­சாலை வடக்­கில் நடந்­துள்­ளது. நேற்­றுக் காலை வளவு துப்­பு­ர­வாக்­கி­ விட்டு குளித்­து­விட்டு வந்த அவர் காலை உணவு அருந்­தி­யுள்­ளார்.…

இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய தேசிய வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு..!! (படங்கள்)

யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தின் தேசிய வெற்றியார்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றுமுற்பகல் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளை அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அருட்பணி யேசுரெட்ணம்…

அங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு..!!

அங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை…

நான் நெற்றிக்கண்ணை திறந்தால் சந்திரபாபு நாயுடு சாம்பலாகி விடுவார் – சந்திரசேகரராவ்…

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி ஆட்சி நடந்து வந்தது. கடந்த மாதம் அந்த ஆட்சியை சந்திரசேகரராவ் கலைத்து விட்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல்…