;
Athirady Tamil News
Daily Archives

11 December 2018

எழும்பூர் லாட்ஜில் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை..!!!

சென்னை செனாய் நகர் வெங்கடசலபதி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவரது மனைவி உமா. இவர்கள் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம்…

மதுரை கருப்பாயூரணியில் அரசு அதிகாரி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை..!!

மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப்ராஜா (வயது 31). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வேலை பார்த்த சிவகங்கை நடராஜபுரத்தை சேர்ந்த…

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்..…

சிறப்பாக நடைபெற்ற, "புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான "கலந்துரையாடல் கூட்டம்" ஒன்றியத்தின் தலைவர்…

பிணவறையில் வாலிபரின் முகத்தை எலி கடித்து குதறியது- உறவினர்கள் முற்றுகையிட்டதால்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சண்டேஸ்வரநல்லூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் வைத்தீஸ்வரன் (வயது 22). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் படித்தார். இவருடன் கல்லூரியில் படித்த சிதம்பரம் ஏ.ஆர்.எம். நகரை…

சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மற்றும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் இம்மாநிலங்களில் அடுத்த முதல் மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தி…

மூதூர் மட்டக்களப்பு வீதி விபத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு!! (படங்கள்)

மூதூர் மட்டகளப்பு வீதி பெரியபாலப்பகுதியில் அமைந்திருக்கும் ( Safe Rest, Mowsooth Hotal ) அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (11) இரவு 8 மணியளவில் இடம்பெற்றதுடன் மணல் லொறி ஒன்று…

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்..!!

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், மத்திய முன்னாள் நிதித்துறை…

யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த பிரித்தானிய துாதரக அதிகாாிகள்!!(படங்கள்)

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகர் முதன்மை செயலாளர் போல் கிறீன் மற்றும் அரசியல் மற்றும் யு.கே மிசன் ஜெனீவாவின் மனித உரிமைகள் குழுவின் பிரதித் தலைவர் பொப்…

சலுகை விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் – மைத்திரிபால!!

எதிர்வரும் உற்சவ காலத்தில் சந்தையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்பட இடமளிக்க வேண்டாமெனவும் விலை அதிகரிப்பு ஏற்படாது நியாயமான விலையில் உணவுப் பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறும்…

கருஞ்சீரகம்…சர்வ ரோக நிவாரணி!!(மருத்துவம்)

உணவே மருந்து சீரகம் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கருஞ்சீரகம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்றே சொல்லலாம். இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு. அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பதாலேயே…

இரணைமடு குளத்தின் வரலாறு திரிபுபடுத்தப்படுவதாக வெளியான குற்றச்சாட்டு மறுப்பு!!

நீர்ப்பாசன திணைக்களமானது இரணைமடு குளத்தின் வரலாற்றை திரிபுபடுத்துகின்றது என அண்மையில் சில ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அந்த திணைக்களம் மறுத்துள்ளதுடன், அது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது. இக்குற்றச்சாட்டு…

யாழ்ப்பாணம் பளைப்பகுதில் லொறி தடம்புரண்டது.!!(படங்கள்)

யாழ்ப்பாணம் பளைப்பகுதில் லொறி ஒன்று விபத்திற்குள்ளாகிய நிலையில் தடம்புரண்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வேகமாக பயணித்த குறித்த லொறி விபத்துக்குள்ளாக நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த விபத்தினைத்…

மட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு!!(படங்கள்)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் விசேட சந்திப்பு 09.12.2018 அன்று புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தாரத்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது. கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின்…

அஸ்தி கரைத்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது- 6 பேரின் உடல்கள் மீட்பு..!!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில், அஸ்தியை கரைப்பதற்காக வந்திருந்தனர். அஸ்தி கரைப்பு மற்றும் சடங்குகள் செய்தபிறகு படகு மூலம் கரை திரும்பினர். கீத்கஞ்ச் பகுதியில் மங்காமேஷ்வர்…

சிங்கப்பூரில் கர்ப்பிணியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு 7 ஆண்டு சிறை..!!

சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான…

இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் விஷேட மேன்முறையீட்டு!!

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் விஷேட மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ உட்பட…

உரும்பிராயில் வீதிகள் புனரமைப்பு – பா.கஜதீபன் ஆரம்பித்து வைத்தார்!!(படங்கள்)

தேர்தல் தொகுதிக்கு 100 மில்லியன் ரூபா எனும் திட்டத்தின் கீழ் உரும்பிராய் வடக்கு வட்டாரத்தின் வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபை உறுப்பினர் சி.அகீபனின் வேண்டுகோளின் பேரில், கோப்பாய்த்தொகுதிக்குப்பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்…

தொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா!!(படங்கள்)

பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைமைக் கிராம அலுவலர் எஸ். சிவலிங்கம்…

இன்றைய தலைமுறையும் அரசியல் அறிவின் அவசியமும்!- ஷம்ரான் நவாஸ்!!(கட்டுரை)

அரசு மற்றும் அதனுடைய தன்மை, அரசாங்கம், ஆட்சி முறைகள், அரசு முறைகள், மக்களுக்கும் அரசுக்கும் இடையிலுள்ள தொடர்பு முறைகள், அரசுக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பு முறைகள் போன்றவை பற்றிய அறிவை பெறுவதே அரசியல் கல்வி எனலாம். இன்றைய தலைமுறையினர்…

உயிராபத்திலிருந்து பாதுகாக்கும் படி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை!!

கிளிநொச்சி கரடிப்போக்கு பன்னங்கண்டி வீதியில் அமைந்துள்ள பாலத்தின் இருபக்க மதகுகள் அற்றநிலையில் காணப்படுவதினால் போக்குவரத்துக்கு பொது மக்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் என பலர் சிரமப்படுகிறார்கள். கிளிநொச்சி குளத்திலிருந்து…

காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 போலீசார் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட சைன்போரா பகுதியில் உள்ள காவல் சாவடியில் இன்று 4 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் காவல் சாவடிக்குள் இருந்த போலீசாரை நோக்கி…

மியான்மரில் ஆங் சான் சூகியுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு..!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக மியான்மர் வந்துள்ளார். மியான்மர் அதிபர் உ வின் மின்ட்-ஐ இன்று சந்தித்த அவர், மியான்மர்-இந்தியா இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினார். நீதித்துறை…

எம்.ஜி.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!!

எம்.ஜி.ஆ.ர் நகர் சூளைபள்ளம் மிசா ஆபிரகாம் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு மாலையில் திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டை…

பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி..!!

மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேமா (56). இவர் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். கேசவபுரத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு பொன்னேரி-மீஞ்சூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது மின்னல்…

பாதீடு சட்டத்திற்கு அமைவாக மீளவும் சபைக்கு வரவேண்டும் – பருத்துறை நகரசபை!!

பருத்துறை நகரசபையின் 2019ம் ஆண்டுக்கான பாதீடு சட்டத்திற் கு முரணாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி யிருக்கும் நகரசபை எதிா்கட்சி உறுப்பினா்கள், குறித்த பாதீடு சட்டத்திற்கு அமைவாக மீளவும் சபைக்கு வரவேண்டும் எனவும் கோரிக்கை…

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியல்!!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 19 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஒக்டோபர்…

ராகுல்காந்தி தலைவரான நாளில் கிடைத்த வெற்றி பரிசு..!!

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி கடந்த ஆண்டு இதே நாளில் அதாவது 2017 டிசம்பர் 11-ந்தேதி பதவி ஏற்றிருந்தார். அவர் தலைவராக பதவியேற்ற அதே நாளில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி…

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் பொலீத்தின் பிளாஸ்ரிக் பாவனைக்கு தடை.!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை கொண்டு வருவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வைத்தியசாலையின் அத்தியட்சகராக பொறுப்பேற்ற வைத்தியர் திருமதி தயாளினி மகேந்திரனே…

24 மணிநேரத்தினுள் மீளவும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுக்கல்!!(படங்கள்)

ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேன ஆளுநருக்கு விடுத்த அறிவுறுத்தலுக்கு அமைய இரணைமடுவில் அகற்றப்பட்ட நினைவுக்கல் 24 மணிநேரத்தினுள் மீளவும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் உத்தரவிற்கு அமைய ஆளுநர் செயலக அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில்…

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராயும் குழு நாளை கூடும்!!

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை (12) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குழு ஒன்று…

பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா ராஜினாமா..!!

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் 6 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் ஒன்றை பிரதமர் மோடி அமைத்தார். இந்த ஆலோசனை கவுன்சிலின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினரான தேப்ராய் பதவி வகிக்கின்றார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக…

வவுனியா; – பரீட்சை நிறைவுக்காக காத்திருக்கும் தந்தையின் இறுதிச் சடங்கு!!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கை பிறப்பிடமாகவும் வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் வேகாவனம் கடந்த 09.12.2018 அன்று உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் காலமானார் .. இவரது கடைசி மகளாகிய வே .விஸ்ணுகா இவ்வருடம்…

முல்லைத்தீவு பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து பலி!!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. நேற்று (10) மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிணற்றில் விழுந்த குறித்த குழந்தையை…

www.ineed.police.lk என்ற புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம்!!

இலங்கை பொலிஸார் www.ineed.police.lk என்ற புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தொலைபேசிகள் காணாமற் போனாலோ அல்லது திருடப்பட்டப்பட்டலோ குறித்த இணைய தளத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா…