;
Athirady Tamil News
Daily Archives

18 December 2018

பாம்பு குறுக்கே புகுந்ததால் பைக்கில் உறவினருடன் சென்ற இளம்பெண் பலி..!!

சென்னை போரூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த பெரியகருப்பன் மகள் கார்த்திகா (வயது21). இவர் 2 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே உள்ள சடைச்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது உறவினர் சச்சின்பிரான் (20) என்பவருடன்…

செல்போன் எண், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க சட்ட திருத்தம் – மத்திய மந்திரிசபை…

நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.…

சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்..!!

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ராகேஷ்…

செயினை அறுத்துகொண்டு கர்ப்பிணியை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய கொள்ளையர்கள்

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் திவ்யா. இவரது கணவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா பெங்களூரு செல்வதற்காக தனது மாமியாருடன்…

கோடையில் மின்தட்டுப்பாடு அபாயம் – 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு..!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரி கூறியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் இருப்பு இல்லாததால் அடிக்கடி உற்பத்தி பாதிக்கிறது. தற்போது 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி…

பேத்தாய் புயலின் கோரத்தாண்டவம் – ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்..!!

ஆந்திர மாநிலத்தை நேற்று சக்தி வாய்ந்த பேத்தாய் புயல் தாக்கியது. இதனால், விசாகப்பட்டினம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் வடக்கு கோதாவரி மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில்…

பண்ருட்டி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் 6 பவுன் செயின் பறிப்பு..!!

பண்ருட்டி அடுத்த ஆத்திரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சத்யா (வயது 30). இவர் பண்ருட்டி அருகே சேந்தநாடு பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல்…

மஹிந்தவின் உறுப்புரிமை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி!!

எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமைக்கு அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். சுதந்திர கட்சியை விட்டு விலகி பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சியுடன் இணைந்தவர்களுக்கு ஒரு மாத…

திருமலை முருகன் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பு! (படங்கள்)

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தென்னமரவாடி கிராமத்திலுள்ள முருகன் ஆலயம் மற்றும் அரச மலை முதலியவற்றை ஆக்கிரமிக்கும் முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபடுவதாக மக்கள் கூறுகின்றனர். இப் பிரதேசத்தை…

“கட்டமைப்பும்” கட்சியரசியலில் ‘சிறுபான்மையும்’ (கட்டுரை)

துஷ்யந்தன்.உ vol - 03 நாட்டில் தற்பொமுது நடைபெற்ற விட்டுக்கொடுப்பு மற்றும் 'தந்திரோபாயத்தன்மை கொண்ட பெரும்பான்மையினரின் செயற்பாடுகள்' மீண்டும் ஒர்வகை இனவாத அரசியல் வரலாற்றினை மீளவும் ஞாபகப்படுத்துகின்றது. 'இலங்கையில் நீதித்துறையின்…

திருக்கோவிலூரில் பள்ளி வளாகத்தில் 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்..!!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சைலோம் பகுதியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. அதே வளாகத்தில் தங்கும் விடுதியும் உள்ளது. இந்த பள்ளியில் கடலூரைச் சேர்ந்த மாணவி அங்குள்ள விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.…

ஆஸ்திரேலியா நாட்டு கடலில் மூழ்கி இந்தியாவை சேர்ந்த 3 பேர் பலி..!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கவுசுதீன், ராஹத், ஜுனைத் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டின் அடிலெய்ட் நகரின் அருகாமையில் உள்ள சுற்றுலாத்தலமான மோனா கடற்கரை பகுதிக்கு சென்றனர். நேற்று அங்கு கடலில் நீந்தி குளித்து கொண்டிருந்தபோது…

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 52 ஏக்கர் காணி இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இன்று மாலை முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற இராணுவத்தின் நத்தார் கரோல் கீத நிகழ்வின் போது, புதுக்குடியிருப்பு மற்றும்…

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் – ரணில்!!

அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வொன்றை வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(செவ்வாய்கிழமை) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும்…

எதிர்கட்சி பாத்திரத்தை கொண்டு செல்வதில் பிரச்சனை இல்லை – மஹிந்த!!

எதிர்கட்சி பாத்திரத்தை கொண்டு செல்வதில் தமக்கு பிரச்சனை இல்லை என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள்…

சபரிமலையில் இன்று 18ம் படி வழியாக சென்று ஐயப்பனை வழிபட்ட 4 திருநங்கைகள்..!!

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதை அமல்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்துள்ளது. ஆனாலும்…

வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை மரண தண்டனை..!!

மத்திய பிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டம் ஜவோரா நகரைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், 5 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை) கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை சரமாரியாக…

தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை – ரிஷாட்!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனும் தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை ஆயினும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசனும் அதே தீர்மானத்தை…

பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு !!

புகையிரத பிரதான மார்க்கத்திலான புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த கடுகதி புகையிரதம் ஒன்றில் அலவ்வ மற்றும் பொல்கஹவலை புகையிரத நிலையங்களுக்கு அருகில் வைத்து தொழில்நுட்ப கோளாறு…

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக வழக்கு – டெல்லி கோர்ட்டில் விசாரணை…

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி (ஊழல் தடுப்பு) அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை தொடங்கியதும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பி.குமார் தரப்பில்,…

கொலை வழக்கு: ஐக்கிய அரபு நாட்டில் இந்தியருக்கு 15 ஆண்டு ஜெயில்..!!

ஐக்கிய அரபு நாட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியாவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடந்து வந்தது.…

கேரளாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்..!!!

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா, (வயது 21). இவரது கணவர் மனு, (26). இவர்கள் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஏகலைவன் என்ற ஆண் குழந்தை இருந்தது.…

இங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் – எதிர்க்கட்சி கொண்டு…

ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தின் தனித் தன்மையை காப்பாற்றும் வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்தது. ஏற்கனவே இது சம்பந்தமாக மக்களிடம்…

அமைச்சு பொறுப்புக்களுடன் கல்வி தகமைகளையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்!!

புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களுக்கு மட்டுப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் அமைச்சு பொறுப்புக்களுடன் கல்வி தகமைகளையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள பெப்பரல் அமைப்பு , அமைச்சரவை தெரிவில் பின்பற்ற வேண்டிய 6…

சொர்க்கவாசல் திறப்பு: திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்..!!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜைகள் செய்யப்பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முதலில் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத…

திருமதி.சதாசிவம் தங்கம்மா (புங்குடுதீவு/கனடா) மரண அறிவித்தல்..

திருமதி.சதாசிவம் தங்கம்மா (புங்குடுதீவு/கனடா) மரண அறிவித்தல்.. திருமதி.சதாசிவம் தங்கம்மா பிறப்பு:- 14.03.1942 -புங்குடுதீவு மேற்கு இறுபிட்டி 5ம் வட்டாரம் இறப்பு:- 17.12.2018 -கனடா சந்திரவேனி (கனடா), குலசிங்கம் (டென்மார்க்),…

அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை!!

புதிய அரசாங்கத்தில் எவ்வித அமைச்சு பதவியையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை…

நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்..!!

இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம் ஆண்டில் பிறந்த கிரி, நேபாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை…

மணமக்களை ஏற்றி செல்வதுபோல் காரை அலங்கரித்து செம்மரம் கடத்தல் – 4 பேர் கைது..!!

திருப்பதி அருகே உள்ள மங்கலம் திருமலா நகரில் இருந்து சேஷாசலம் வனப்பகுதிக்கு செல்லும் மெயின்ரோட்டில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருமண அலங்காரத்துடன் பிடிபட்ட கார் அப்போது…

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை – சந்தேக நபர்கள் தப்பி…

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்ப்பட்ட புளியம்பொக்கனைக் காட்டுப் பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் சற்றுமுன் கிளிநொச்சி பொலிஸ் விசேட குழுவினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது கிளிநொச்சி பொலிஸ் விசேட குழுப்…

ஏமனில் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்..!!

ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ஹொடைடா மாகாணம் மற்றும் துறைமுக நகரமான ஹொடைடாவில்…

வடமராட்சி கிழக்கில் முதியவர் கடத்தல் – இராணுவச் சிப்பாய் கைது!!

யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் மடக்கப்பட்டபோது 3 போ் தப்பி சென்றுள்ள நிலையி ல் 4 போ் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்ட பின்னா் பொலிஸாாிடம்…

வவுனியா நகரசபைத் பாதீட்டில் திருநாவற்குளம் புறக்கணிக்கப்பட்டதாக மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா நகரசபையின் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரத்து 452 வாக்காளர்களைக் கொண்ட திருநாவற்குளம் கிராமம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையின் முதலாம் வட்டாரத்தில் உள்ள நகரசபை விடுதி, குருமன்காடு,…

வவுனியா மாவட்ட காணி முறைப்பாடுகளை கோரியுள்ளது விசேட காணி மத்தியஸ்தர் சபை!!

காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபை தவிசாளர் இரட்ணசிங்கம் நவரட்ணம் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் இன்று தெரிவித்ததாவது, வவுனியா…