;
Athirady Tamil News
Daily Archives

13 January 2019

சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது- 21 தொழிலாளர்கள் பலி..!!

சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் வெளியேற…

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- அல் பதர் பயங்கரவாத இயக்க தளபதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடமாடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில் குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.…

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் எரிந்த 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள்: 13-1-1939..!!

ஆஸ்திரேலியாவில் 1939-ம் ஆண்டும் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்பட்டது. இதில் 20 ஆயிரம் கி.மீட்டர் காடுகள் தீக்கிரையானது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- 1942 - ஹென்றி போர்ட் பிளாஸ்டிக்கினால் ஆன தானுந்துக்கான காப்புரிமம்…

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த, “புளொட்” செல்வபாலனின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஆரம்பகால உறுப்பினராக இருந்து வெலிக்கடைப் படுகொலையின் போது வீரமரணம் அடைந்த, சரசாலையைச் சேர்ந்த தோழர் ஜெயமுகுந்தனின் சகோதரியின் நிலை கருதி, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த "புளொட்" உறுப்பினர்…

நாமல் ராஜபக்ச இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் !! (படங்கள்)

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம்…

யாழ்ப்பாணத்தை கலக்கிய வழிப்பறி கொள்ளையன் கைது.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும்…

நான்கு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை!!

வாழைச்சேனை இந்துக் கல்லூரி, செங்கலடி மகா வித்தியாலயம், களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார்.…

கேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது!!

கேரளா கஞ்சா பொதிகளுடன் எட்டு மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பினுள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த இந்திய படகொன்றை கடற்படையினர் வழிமறித்து…

மாவெளி கங்கையில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 07பேர் கைது!! (படங்கள்)

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் மாவெளிகங்கையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த 07சந்தேக நபர்கள் 12.01.2019.சனிகிழமை இரவூ அட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் குற்ற தடுப்பு பொலிஸார்…

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த 15இளைஞர்கள் கைது!!

சிவனொளிபாதமலைக்கு போதை பொருள் கொண்டு வந்த 15இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் அட்டன் குற்ற தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர் இந்த கைது சம்பமானது 12;.01.2019.சனிகழமை இரவூ இடம் பெற்றுள்ளமை குறிப்பிடதகக்து. சிவனொளிபாத மலைக்கு வருகை…

யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது.!! (படங்கள்)

யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!! (படங்கள்)

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் முறிப்பு பகுதியில் 26 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று பனல் 12 மணியளவில் கிளிநாச்சி கரைச்சி…

உலக அரங்கில் ஆதரவு தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது – சுமந்திரன்!!

கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த…

விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம்: 13-1-1949..!!

ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் 1949-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி பிறந்தார். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8…

போலி கால்சென்டர் நடத்திய 2 பேர் கைது – அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்தனர்..!!

குஜராத் மாநிலம் கரஞ்ச் போலீஸ் நிலைய பகுதியில் உள்ள பங்கோர் நாகா என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தில் போலி கால்சென்டர் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த கட்டிடத்தின் மாடியில் இயங்கி வந்த அந்த அலுவலகத்துக்கு…

கல்லூரி மாணவ-மாணவிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை…

பா.ஜனதா தலைவரின் 13 நிறுவனங்களில் வருமான வரி சோதனை..!!

உத்தரகாண்ட் மற்றும் அரியானா மாநிலங்களில் பா.ஜனதா தலைவர் அனில் கோயல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் 13 நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ‘குவாலிட்டி ஹார்டுவேர்’, ‘உமாங் சேரீஸ்’, அலெக்சியா பேனல்ஸ்,…

மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் – டிரம்ப்…

மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார். ஆனால் இதற்கான நிதியை நாடாளுமன்றம்…

முச்சக்கர வண்டி இனம்தெரியாத நபர்களால் உடைக்கப்பு!!

முச்சக்கர வண்டி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த வாகனம் இனம்தெரியாத நபர்களால் இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் நடந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றை நபர் ஒருவரிடம்…

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானை ஆறு பேர் கொண்ட குழு தாக்குதல்!! (படங்கள்)

வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானை, முகத்தை மூடி வந்த குழு அடித்துச் சேதமாக்கியது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை கோவிலடிப்பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. மூன்று மோட்டார் சைக்கிளில் வாகனத்தகடுகளை…

கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் எங்கள் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை – பிரதமர்…

மத்தியில் ஆளும் பா.ஜனதாவின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தனது அரசின் செயல் பாடுகளை அவர் பெருமிதத்துடன் எடுத்துரைத்ததுடன், காங்கிரஸ் உள்ளிட்ட…

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பாலஸ்தீன பெண் பலி..!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே உள்ள காஸா முனைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது. தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் காஸா பகுதி போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலும் நடத்துவதை வழக்கமாக கொண்டு…

அட்டன் டன்பார் தோட்டத்தில் பாரிய தீ!! (படங்கள்)

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் டன்பார் தோட்டபகுதியில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் 12.01.2019.சனிகிழமை பிறகல் வேலையில் இனந்தெரியாதவர்கள் குறித்த தோட்டபகுதியில் உள்ள மானா செடிக்கு தீ…

பிரதமர் முன்மொழிந்த யோசனைக்கு அமைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உரிமை!!

அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதில் பிரச்சினைகள் இருப்பதாக வீடமைப்பு கலாசார மற்றும் கட்டுமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த யோசனைக்கு அமைய…

மழையுடன் கூடிய வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும்!

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை…

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை!!

புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என அஸ்கிர பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மாத்திரம் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானது எனவும் அவர்…

அகிலேஷ் – மாயாவதி கூட்டணி: காங்கிரசின் முடிவு இன்று அறிவிப்பு..!!

நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்த கட்சிகள் திடீரென தனிக்கூட்டணியை உருவாக்கி இருப்பது, காங்கிரஸ்…

கனடா நாட்டில் மேற்கூரை மீது மாடி பஸ் மோதி 3 பேர் பலி…!!

கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மாடி பஸ் வெஸ்ட்போரோ பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு வந்தது. அப்போது அந்த பஸ் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த…

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மகளை கடத்தப்போவதாக இமெயிலில் மிரட்டல்..!!

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அலுவலகத்துக்கு கடந்த 9ம் தேதி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கடத்தப்பட உள்ளதாக…

சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை- வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தல்..!!

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த…

பணிபுரிவதற்கு சிறந்த நாடுகளில் பிரித்தானியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? ஆய்வு..!!

பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் பிரித்தானியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. தங்கள் நாட்டை விட்டு வேறு நாட்டில் சென்று பணி புரியும் 22,000 பேரிடம் HSBC வங்கி மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பணிபுரிவதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில்…

பல வருடங்களுக்கு பின் மகளுடன் சேர்ந்த தந்தை: போதையில் செய்த காரியம்..!!

டென்மார்க்கில் திருமண நாளன்று போதையில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டென்மார்க்கை சேர்ந்த 50 வயதான தந்தை ஒருவர், மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து…

72 மணிநேரம் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்..!!

சீனாவின் ஃப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ…

தனியாக பார்க்கிறேன் என்ற பெயரில் நாட்டுக்கே ஆபாச படத்தினை ஒளிபரப்பிய நபர்: அதிர்ச்சியடைந்த…

சீனாவின் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலையில் சுமார் 90 நிமிடங்கள் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை…