;
Athirady Tamil News
Daily Archives

11 February 2019

டெல்லி ஆந்திரா பவன் அருகே விஷம் குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை..!!

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.…

காதலர் தினத்துக்காக 12 வெளிநாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி..!!

ஓசூர் சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் பாலசிவபிரசாத் கூறியதாவது:- நடப்பு ஆண்டு காதலர் தினத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஜப்பான் உள்பட 12 நாடுகளுக்கு 45 லட்சம் ரோஜாக்கள் வரை ஏற்றுமதி செய்து விட்டோம். கடந்த ஆண்டு ஒரு ரோஜா, 10…

300 கோடி குழந்தைகளின் பசிப்பிணியாற்றிய சாதனையை உணவு பரிமாறி கொண்டாடிய மோடி..!!

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் 'அக்‌ஷயா பாத்திரம்' என்ற தொண்டு நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவியர்களுக்கு இலவசமாக பகல் உணவு வழங்கி, நாட்டில் கல்வியறிவின் வளர்ச்சிக்காக சேவை புரிந்து வருகிறது. பள்ளிகளில்…

கொன்று புதைக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவி !!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள புதுவெங்கடாபுரம் ஒட்டர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரிதா (15). 10-ம் வகுப்பு மாணவியான இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திடீரென மாயமானார். அன்று காலையில்…

நாட்டின் பொருளாதார துறையை மாற்றுவதற்கு ஜனாதிபதி அழைப்பு !!

தேர்தல் வருடமான இவ்வருடத்தில் அரசியல்வாதிகள் தத்தமது தேர்தல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள வேளையில் நாடு என்ற வகையில் நாம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை அதிகரிக்கும் சவாலுக்கு முகங்கொடுத்து, இவ்வருடத்தை நாட்டின் பொருளாதார துறையில்…

கோவாவில் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்த பெண் சிக்கினார்..!!

கோவா விமான நிலையத்தில் இன்று காலை சுங்க அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணின் உடமைகளை முழுமையாக சோதனையிட்டனர்.…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் முறையே 6 ரூபா மற்றும் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

ஆட்சியை கவிழ்க்க சதி – எடியூரப்பா பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு..!!

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அத்துடன் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு…

யாழ்ப்பாணத்தில் இந்திய கல்விக் கண்காட்சி 2019!! (படங்கள்)

இன்று (11.02.2019) காலை வலம்புரி hotel நடைபெற்ற இந்தியக் கல்விக் கண்காட்சியினை வடமாகாண ஆளுனரின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட வணக்கத்திற்குரிய யாழ் மாநகரசபை முதல்வர் திரு இமானுவேல் ஆர்னோல்ட் தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் கௌரவ…

யாழ். பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி!! (படங்கள்)

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த நினைவு தூபி நேற்று நிறுவப்பட்டுள்ளது. கடந்த வருடம்…

பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான குழுமம் இலங்கையில் ஆரம்பம்..!! (படங்கள்)

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான இலங்கைக்கான குழுமம் வத்தளை ஹுணுப்பிட்டிய ஸாஹிரா முஸ்லிம் வித்தியாத்தில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவின் போது பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியர் திரு.அமீன்…

கரைச்சி பிரதேச சபையின் செயற்பாட்டுக்கு பொது மக்கள் சிலர் எதிர்ப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினரால் கரடி போக்குச் சந்திக்கருகில் வழங்கப்பட்ட வியாபார நிலையங்கள் தொடர்பில் பொது மக்கள் சிலர் இன்று (11.02.2019) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். இன்று முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி கரடிபோக்கு…

உத்தரப்பிரதேசத்தில் ராகுல், பிரியங்கா நடத்திய பிரமாண்ட பேரணி – காங். தொண்டர்கள்…

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக சோனியா, ராகுலை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலுக்கு வந்து உள்ளார். பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல்…

பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்..!!

உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது. இந்த பெண் ரோபோட்டிற்கு ஐடா என…

சிகரெட் பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை- பிளவுபட்ட உதட்டுடன் குழந்தை பிறக்கும்..!!

ஆசிய மக்கள் தொகையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.7 சதவீதம் குழந்தைகள் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இதுகுறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 35 ஆயிரம் குழந்தைகள் பிளவுபட்ட உதடு மற்றும்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறேன் – நடிகை சுமலதா..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சொந்தமான காலபைரேஸ்வரா கோவிலில் நடிகை சுமலதா சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்னுடைய கணவர் அம்பரீஷ் அரசியலில் வெற்றி…

இந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த போலீசார்..!!

இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் பப்புவா போலீசார் வாலிபரை கைது செய்தனர். விசாரணையின்போது அந்த வாலிபர் குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் இருந்துள்ளான். இதையடுத்து மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த போலீசார்,…

புத்தளம் – சிலாபம் தனியார் பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில்!!

சிலாபம் முதல் புத்தளம் வரை சேவையில் ஈடுபடும் சகல தனியார் பஸ் ஊரியர்களும் இன்று (11) இரண்டாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சிலாபம் - புத்தளம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில் கடமைபுரியும் மூன்று ஊழியர்கள்…

முதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழங்களில் கிளைகள்!!

பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழங்களில் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச…

ஐதேக வின் 6 புதிய தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்!!

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேர்தல் அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இன்று இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் புதிய தேர்தல் அமைப்பாளர்களின் விபரம் வருமாறு, ரூகாந்த…

பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூபானி ஆலயத்தின் முத்தேர் பவணி!! (படங்கள்)

பொகவந்தலாவ நகரில் எழுந்தருளி இருக்கும் பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூபானி ஆலயத்தின் வருடாந்த முத்தேர் பவணி 11.02.2019.திங்கள் கிழமை காலை 11மணிக்கு ஆரம்பமானது இதன் போது முருகபெருமான் விநாயகர் அம்பாள் ஆகியோர் முத்தேர் பவனியில் எழுந்தருளி ஊர்வலமாக…

மோட்டார் சைக்கிலை செலுத்திய இருவர் மீது குளவி தாக்குதல்!! (படங்கள்)

அட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிலில் பயனித்த இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் இந்த சம்பவம் 11.02.2019.திங்கள் கிழமை மாலை 04.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ…

நாயன்மார்கட்டு பகுதியில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் வாகனம் எரிந்து நாசமாகியது. 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை…

திருப்பதியில் நாளை ரதசப்தமி விழா 7 வாகனங்களில் ஏழுமலையான் வலம் வருகிறார்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரேநாளில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்கள் வீதிஉலா நடக்கின்றன. அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி, சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில்…

அபுதாபி கோர்ட்டுகளில் இந்தி 3-வது அலுவல் மொழியாக சேர்ப்பு..!!

அபுதாபி நீதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அபுதாபி நீதித்துறை செயல்பாட்டில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் வாதி, பிரதிவாதிகளுக்கு ஆவணங்கள் அரபி மொழியில்…

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் –…

அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ…

விமான விபத்து- சலாவுடன் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து…

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ…

இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் பொதுக்கூட்டமும், தெரிவும்!!

வவுனியா வரலாற்றில் முதன் முதலாக ஆரம்பமான இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் பொதுக்கூட்டமும் ,பழைய மாணவர் சங்க புதிய நிர்வாக தெரிவும் வவுனியாவில் பழைமைவாய்ந்த பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் (V/CCTMS)…

இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்.!! (படங்கள்)

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து…

சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – டக்ளஸ்! (படங்கள்)

சரணாகதி அரசியல் செய்வது யார் என்பதை மக்கள் இன்று உணர்ந்துள்ளனர் – யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எந்நேரத்திலும் தேர்தல்கள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனாலும்…

யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம்!!…

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக விமர்சையாக நடைபெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் மஹா கும்பாபிஷேகம்!(படங்கள்)!!

வவுனியா வைரவப்புளியங்குளம் அருள்மிகு ஆதி விநாயகர் ஆலய புனராவர்த்தன நவகுண்ட பக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நேற்று 10.02.2019.ஞாயிற்றுக்கிழமை காலை 8.57 முதல் 10.09 வரையுள்ள சுப முகூர்த்தவேளையில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக…

குருவாயூர் கோவிலில் 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம்..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர்…

லண்டன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள் – பிப்.11 1826..!!

லண்டன் பல்கலைக்கழகம் என்பது மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் சுமார் 1,30,000 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இது 1826-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய…