;
Athirady Tamil News
Daily Archives

12 March 2019

தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை..!!

தக்கலையை அடுத்த கேரளபுரம், சங்கரன்காவு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 37). தொழிலாளி. குமாருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப…

பிரேசில் அணை உடைந்த விபத்தில் பலி எண்ணிக்கை 200 ஆனது.!!

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த…

முதல் மனைவியை ஏமாற்றிவிட்டு பெண் என்ஜினீயரை 2-வதாக திருமணம் செய்த மந்திரவாதி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 31). பில்லி, சூனியம் உள்ளிட்ட செயல்களை செய்து வந்த மந்திரவாதியான இவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் தும்பிவாடி பகுதியில் சிறியதாக கோவில் ஒன்றை கட்டி பூஜைகள் நடத்தி வந்தார். இந்த…

“இலங்கை தமிழ் சினிமா வரலாறு சிங்கள மொழியிலும்” புத்தகமாக வெளியீடு !! (படங்கள்)

நாளை 13.03.2019 நிகழவுள்ள இலங்கை தமிழ் சினிமா வரலாற்றை தமிழிலும் சிங்கள மொழியில் நூல் வெளியீட்டு நிகழ்விற்கான நூல் உருவாக்கம் பற்றி இவ்வாறு சமர்பணம் செய்திருந்தார் சிவலிங்கம் அனுஷா அவர்கள். இலங்கை சினிமா என்றால் , சிங்கள சினிமா தான் என…

பாராளுமன்ற தேர்தலில் சபரிமலை விவகாரம்தான் முக்கிய பங்கு வகிக்கும் – பாரதிய ஜனதா…

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்…

பெரு நாட்டின் பிரதமராக பிரபல நடிகர் பதவியேற்றார்..!!

தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக தோற்றமளிக்கிறது. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி…

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் நன்னீர் மீன் பிடி!! (படங்கள்)

நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் நுவரெலியா மாவட்டத்திற்க்கு பொறுப்பான நன்னீர் மீன் பிடி திணைக்களத்தினால் ஈடப்பட்ட மீன் குஞ்சுகள் பெரிதாகிய பிறகு 12.03.2019.செவ்வாய்கிழமை நுவரெலியா மாவட்டத்திற்க்கு பொறுப்பான நன்னீர் மீன்…

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா!! (படங்கள்)

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா, நேற்று(11.03.2019) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. "அதிரடி" இணையத்துக்காக திருகோணமலையில் இருந்து "கோணேஸ்வரன்"

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்..!!

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு…

குழந்தையை மறந்து ஏறிய தாய் – மலேசியா புறப்பட்டு சென்ற விமானம் சவுதி திரும்பியது..!!

சவுதி அரேபியா நாட்டின் ஜெட்டா நகரில் உள்ள மன்னர் அப்துல் அஜிஸ் விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சமீபத்தில் சவுதி நாட்டுக்கு சொந்தமான ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது…

ஆளுநர் தமிழர் நலன் சார்ந்து எந்த அளவுக்கு அங்கு பேசமுடியும் – சீ.வீ.கே. சிவஞானம்!!…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தமிழர் நலன் சார்ந்து எந்த அளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாக தோன்றுகிறது என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்…

தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் இந்த மட்டக்களப்பு – விவேக்!! (படங்கள்)

சுத்தமான தமிழ் உலகமெங்கும் வாழ்வதற்கு காரணம் இந்த மட்டக்களப்பு மண்ணில் இருந்துசென்றவர்களெ காரணம் என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்தார். அனைத்து வளங்களையும் கொண்டு ஆசிர்வதிக்கப்பட்ட பூமியாக இலங்கை…

51 நாள் அரசியல் சூழ்ச்சியே பிரதான காரணமாம் – மங்கள!!

51 நாள் அரசியல் சூழ்ச்சி காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அந்த நிலைமையை தற்போது நாங்கள் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்த நிதியமைச்சர் மங்கள சமரவீர, எதிர்காலத்தில் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த சகல…

“கால நீடிப்பு வேண்டாம்” முன்னணியின் பிரேரணை ஆர்னோல்டால் நிராகரிப்பு!! (வீடியோ)

இறுதிப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்கு நீதி கோரிய விசாரணையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால நீடிப்பு வழங்கக் கூடாது என்றும்…

“கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது” !!!

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டினை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட…

வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கும் வட்ஸ்அப் நிறுவனம் !

உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது. GB WhatsApp, Yo WhatsApp, FM WhatsApp என்ற…

மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஆதரவு !! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழ மாணவர்களின் போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் ஆதரவு காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிபடுத்தகோரியும், மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் எதிர்வரும்…

ஜம்மு காஷ்மீரில் ஏடிஎம் பாதுகாவலரிடம் துப்பாக்கி பறிப்பு- 2 பேர் கைது..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலையடுத்து, தற்போது காஷ்மீரின் எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் அனைத்து பகுதிகளிலும், விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய…

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இயக்க பிரிட்டன், மலேசியா…

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங்…

தேசிய ரீதியிலான குத்துச்சண்டையில் 15 பதக்கங்களை வென்ற வவுனியா வீரர்கள்! (படங்கள்)

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தனதாக்கி கொண்டுள்ளனர். வவுனியா ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான…

முறைப்பாடு மேற்கொள்ளச் சென்றவரை திருப்பி அனுப்பிய பொலிஸார்!!

அதிபருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளச் சென்ற பிரதேச சபை உறுப்பினரை திருப்பி அனுப்பிய பொலிஸார் வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்வதற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினரை முறைப்பாட்டினை…

அன்பு, நல்லிணக்கம் அடிப்படையில் அமைந்த இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது –…

பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் கட்சியில்…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு 65 இலட்சம் மின்பாவனையாளர்களிடம் மின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலவும் காலநிலைக்கு மத்தியில் மின்சக்தி அமைச்சு எதிர்க்கொள்ளும்…

ஆயுத தடுப்பு சட்டத்தில் கைதான பீகார் முன்னாள் பெண் மந்திரி ஜாமினில் விடுதலை..!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் இல்லம் ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.…

நிரவ் மோடியின் கணக்கில் உள்ள ரூ.934 கோடி வெவ்வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றம்..!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் உஷார்..!!

பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் நடந்து 2 வாரம் ஆகிறது இருந்தும் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி…

அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பெற்றோலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட…

நாளை ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!!

ஆசிரியர்-அதிபர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதேநேரம் நாட்டின் பிரதான நகரங்களில் நாளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்த…

பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. அதன்படி…

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற…

எமது நாட்டில் மக்கள் சமத்துவத்துடன் சமமாக நடத்தப்பட வேண்டும்!!

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அந்நாடுகளின் நேர்மை, சமத்துவம் என்பன இன்று அந்நாடுகளை அபிவிருத்தி அடைய செய்துள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு…

13வயது சிறுமி கர்ப்பம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்புக்கு அழைத்து சென்ற 13வயது சிறுமி கர்ப்பம் சந்தேக நபருக்கு விளக்கமறியல் பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள தோட்டபகுதி ஒன்றில் 13வயது சிறுமியை தொழிலுக்கு அழைத்து சென்ற நபர் ஒருவரால் கர்ப்பமாக்கபட்ட சம்பவம்…

நடுகல் நாவலுக்கு பாரிஸில் சிறப்பாக இடம்பெற்ற அறிமுக விழா! (படங்கள்)

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அறிமுக விழா நேற்றுமுன்தினம் (10.03.2019) சிறப்பான முறையில் இடம்பெற்றது. கடந்த 2019 சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியான நடுகல் நாவலுக்கு…

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்.!!

இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம்…