;
Athirady Tamil News
Daily Archives

7 January 2020

நிர்பயா வழக்கு: 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றபோது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும்…

வெளிநாடு ஒன்றில் இந்த தவறு செய்தால் 7 கோடி அபராதம்… 5 ஆண்டு சிறை! நீதித்துறை அதிரடி…

எந்த மதங்களையும் அவதிக்கும் படி நடந்து கொண்டால் 7 கோடி ரூபாய் வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அபுதாபி நீதித்துறை அதிரடியாக தெரிவித்துள்ளது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள…

பீடி வாங்கி தராததால் போலீஸ்காரரை விலங்கால் தாக்கிய கைதி..!!

கேரள மாநிலம் திருச்சூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளவர்கள் ஜோயி கே. ஜோகி (வயது 34). மற்றும் மனுகிருஷ்ணன் (32). இவர்கள் நேற்று திருச்சூர் வியியூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எர்ணாகுளத்தை சேர்ந்த எண்ணஷா (30) என்பவரை திருச்சூர்…

பெர்லினில் அதிக வாடகையால் தவிக்கும் 340,000 குடும்பங்கள்: அரசு அதிரடி..!!

பெர்லினில் சுமார் 340,000 குடும்பங்கள் அதிக வாடகையால் தவிப்பதையடுத்து அவர்களுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பெர்லின் மாகாண அரசு சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்தை ஒப்புக்கொண்டது. அதன்படி, ராக்கெட் வேகத்தில் ஏறும் வீட்டு வாடகைகளை…

டெல்லி சட்டசபை தேர்தல் முஸ்லிம்கள் ஓட்டை ‘குறி’ வைக்கும் காங்கிரஸ்..!!

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஓட்டுகள் 11-ந்தேதி எண்ணப்படுகிறது. டெல்லியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்…

ரஷிய அதிபர் புதின் சிரியாவுக்கு திடீர் பயணம்: அதிபர், அதிகாரிகளுடன் சந்திப்பு..!!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில், அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ்…

வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு!!

வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்டு சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!!

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி தலைவர் விராட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க கொள்கையளவில் இணக்கப்பாடு!! (படங்கள்)

மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதனால் அதனைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பில் ஆராய்ந்து காற்றாலைகளில் முன்னெடுக்கப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவது…

‘சுதந்திர காஷ்மீர்’ பதாகைக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்..!!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று முன் தினம் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மாணவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஹிந்து ரக்‌ஷா தளம் என்ற…

ஈரான் ராணுவ தளபதி இறுதி ஊர்வலத்தில் நெரிசல்- 35 பேர் பலி..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட காசிம் சுலைமானியின் உடல் ஈராக்கில் இருந்து ஈரானுக்கு…

துவாதசி விழா: திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம்…

‘என்னை வெளியே விடு’ என கீச்சிட்ட கிளியை காப்பாற்ற வந்த போலீசார்..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ளது லேக் வொர்த் பீச் நகரம். சம்பவத்தன்று இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 'என்னை வெளியே விடு என்னை வெளியே விடு' என மெல்லிய குரலில் தொடர்ந்து சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட பக்கத்து வீட்டு பெண்…

கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!!

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நாவற்குழியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தரம் 2 இல் கல்வி கற்கும் சசிதரன் எட்வேட் சாமுவேல் (வயது 7) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். நேற்று…

நாரி வலி காரணமாக முதியவர் சிகிச்சை பயனின்றி பலி..!!

பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவர் நாரி வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அத்தியடிப் பகுதியைச்…

தடயவியல் கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படமாட்டாது!!

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

சர்வதேச மொழித் திறமை மேம்பாட்டுக்காக புதிய பல்கலைக்கழகம்!!

நாட்டிலுள்ள மாணவர்களிடையே சர்வதேச மொழித்திறமையை மேம்படுத்துவதற்காக விரைவில் புதிய பல்கலைக்கழகமொன்று ஸ்தாபிக்கப்படுமென உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பு 07 இல் அமைந்துள்ள சிங்கள அகராதி அலுவலக விஜயத்தின் போது அங்கு…

வைக்கம் அருகே இன்று காலை விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!!

கேரள மாநிலம் கோட்டயம் வைக்கத்தை சேர்ந்தவர் லிங்கராஜன். இவரது மனைவி கிரிஷா. இவர்களது மகன் சுரஜ். உறவினர் அஜிதா. இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை காரில் கோட்டயம் புறப்பட்டனர். காலை 5 மணிக்கு அங்குள்ள பேரும்சுவடி என்ற ஆத்துப்பாலத்தில்…

அமெரிக்க படையினர் அனைவரும் பயங்கரவாதிகள்- ஈரான் அறிவிப்பு..!!

அமெரிக்கா ஈரான் இடையேயான பிரச்சினைகள் ஏராளம். அணு ஆயுத தவிர்ப்பு விவகாரம், யூரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக இரு நாடுகளிடையே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 3ம்…

இஸ்ரோ அனுப்பும் விண்வெளி வீரர்களுக்கு பிரியாணி, அல்வா உள்பட 30 வகை உணவு..!!!

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான பயிற்சி…

சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து மது அருந்திய பன்றிகள்..!!

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் கண்டிருப்போம். அது உண்மை என்றாலும் பலர் அதை பொருட்படுத்துவது இல்லை. பண்டிகைக் காலங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற சமயங்களில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.…

வன்முறை கும்பலால் காயம் அடைந்த டெல்லி மாணவர் சங்க தலைவி மீது வழக்கு..!!!

டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ந்தேதி முகமூடி அணிந்த கும்பல் தடியுடன் வந்து தாக்குதல் நடத்தியது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர்.…

52 என குறிப்பிட்ட அமெரிக்காவிற்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும் – ஈரான்…

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்…

ரஞ்சனின் குரல் பதிவுகளின் ஊடாக சட்டத்தை மடக்கிய விதம் தெளிவாக தெரிகின்றது!!

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கம் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் கைது செய்து ஊடகங்களில் காட்டுவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்ட பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…

கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை !!

3 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண…

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம் – இலங்கை ஆழ்ந்த கவலை !!

மூத்த ஈரானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிவெட்டி பிரதேசம் ஆசாத் நகரில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை தாம் இன்று கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…

டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!!

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் பீ.ஜீ குமாரசிங்க தனது பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். குறித்த பதவி விலகல் நேற்று (06) முதல் நடைமுறையில் இருப்பதாக டெலிகொம் நிறுவனத்தின்…

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம் !!

குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து குழந்தை பலி..!!!

சென்னையில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் ஏற்கனவே பலர் பலியாகி உள்ளனர். சமீபத்தில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு சிறுவன் பலியானான். இதேபோன்ற சம்பவம் ஆந்திரா மாநிலம் குண்டூரிலும் இப்போது நடந்துள்ளது. அந்த ஊரை…

வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் ரத்து – ஈரான் அதிரடி அறிவிப்பு..!!!

அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ர‌ஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.…

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்- கருத்துக் கணிப்பில் தகவல்..!!

70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப்போட்டி உருவாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில்…

அமெரிக்காவில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன – சிறந்த படமாக ‘1917’…

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 77-வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்…

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுஷ்டிப்பு!!

மலையக தியாகிகள் தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி (10.01.2020) பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் இடம்பெறும் என மலையக சிவில் அமைப்புகள் அறிவித்துள்ளன. மஸ்கெலியா பஸ்தரிப்பிடத்துக்கு…