;
Athirady Tamil News
Daily Archives

25 March 2020

கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின்..!!!

கொரோனா வைரசுக்கு ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் கண்டறியப்பட்ட சீனாவில்தான் பலியானோர் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்ல…

கொரோனா வைரஸ்(?) தொற்றுக்குள்ளாகி, சுவிஸில் தமிழர் ஒருவர் பலி..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, சுவிஸில் தமிழர் ஒருவர் பலி..! உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம்தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி…

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..!!

உலத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இங்கலாந்திலும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. சதாரண மனிதன், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என யாரையும் விட்டு வைக்காத இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது இங்கிலாந்து மகாராணி எலிசபெத் குடும்பத்தையும்…

காபூல் குருத்வாராவில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 27 பேர் உயிரிழப்பு..!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க படைகளுக்கு எதிரான தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள்…

Pick me உடன் சதோச இணைந்து பொருட்களை விநியோகிக்க வேலைத்திட்டம் !!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு சதோச நிறுவனத்தின் ஊடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிக் மீ நிறுவனத்துடன் இணைந்து இந்த செயற்றிட்டத்தை…

ரஷ்யாவில் 7.5 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!!

ரஷ்யாவின் குரில் தீவுகளில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. ஜப்பானிய நகரமான சப்போராவில் இருந்து…

இணையத்தளத்தில் மாணவர்களுக்கான இலவச கல்வி நடவடிக்கைகள்!!

நடைமுறையில் உள்ள விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயத்தின் ஊடாகவும் கட்டணமின்றி e –தக்ஸலா இணையதளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

சட்டத்தை மீறி செயற்பட்ட சுமார் 3,000 பேர் பொலிஸாரால் கைது!!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் சட்டத்தை மீறி செயற்பட்ட சுமார் 3,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (25) மாலையுடன் ஐந்து நாட்களாக…

மீன்பிடியில் ஈடுபட்ட எம்மை இராணுவத்தின் மூலம் தடுத்துள்ளனர் – முல்லைத்தீவு…

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை…

வவுனியா கற்குளி பகுதியில் மக்கள் உணவுக்காக உதவி கோரியுள்ளனர்!! (படங்கள்)

வவுனியா கற்குளி பகுதியில் புகையிரத வீதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் உணவுக்காக உதவி கோரியுள்ளனர்! கூலித் தொழிலாளர் ஆகிய எங்களுக்கு நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என ஆதங்கம்!! வவுனியா புகையிரதப்பாதை ஓரமாக வசித்துவரும் மக்கள்…

கொரோனா.. குணமானவர் மூலம் வைரஸ் பரவுமா?.. எத்தனை நாள் தனியே இருக்க வேண்டும்? உண்மை என்ன?…

கொரோனா வைரஸ் தாக்கிய நபர் குணமான பின்பும் கூட அவர் சில நாட்களுக்கு தனியாக இருக்க வேண்டும், என்று மருத்துவர்கள் அறிவித்து உள்ளனர். இதற்கான காரணங்களை சீனா ஆராய்ச்சியாளர்கள் அடுக்கி இருக்கிறார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில்…

ஸ்பெயினில் கைவிடப்பட்ட முதியோர் இல்லங்கள் – 12 முதியவர்கள் படுக்கையிலேயே உயிரிழந்து…

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரசால் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதியோருக்கு கொரோனா வைரஸ் எளிதாக…

எங்கு பார்த்தாலும் பிணம்.. சீனாவை மிஞ்சி திகிலடிக்கும் இத்தாலி.. கொத்து கொத்தாக மரணம்..…

சீனாவை விட மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலிதான். வூஹானில் தொடங்கிய கொரோனாவைரஸின் அட்டூழியம் உண்மையில் இங்குதான் கோர தாண்டவமாடியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே வயதானவர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதும் இத்தாலிக்கு இந்த அளவுக்கு அடி விழ…

டெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை…

கொரோனா காரணமாக ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியது ஸ்பெயின். கொரோனாவால் ஸ்பெயினில் இதுவரை 3,434 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க அசுர வேகத்தில் பரவி வருகிறது. உலகம் முழுக்க மொத்தம் 158 நாடுகளை கொரோனா பாதித்து…

சமூக விலகல் ஒருபுறம்… அலட்சியம் ஒருபுறம்- கொரோனாவை விரட்ட ஊரடங்கு கைகொடுக்குமா?..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என மத்திய அரசு…

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையால் நடமாடும் மருத்துவ சேவை!! (படங்கள்)

முல்லைத்தீவு நகரில் உள்ள பிரதேச வைத்தியசாலையால் நடமாடும் மருத்துவ சேவையொன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா சிரேஸ்ட தாதியர்…

வைரசை தடுக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!! சத்தியலிங்கம்!!

கொரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் வடமாகாண சுகாதாரஅமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் ஆளுனருக்கு…

கொரோனா வைரசை அழிக்கும் திறன் அந்த நாட்டுக்குதான் உள்ளது – உலக சுகாதார நிறுவன…

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியதாவது:- 2 மெல்லக்கொல்லும் நோய்களை நாட்டில்…

மீன் ரின்னை பதுக்கிய வியாபாரிக்கு எதிராக வழக்கு தாக்கல்!!

வவுனியா கள்ளிகுளம் பகுதியில் தகரத்தில் அடைக்கபட்ட மீன் உணவு மற்றும் பருப்பினை பதுக்கிய வியாபாரநிலைய உரிமையாளருக்கு எதிராக பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்குதாக்கல் செய்யபட்டுள்ளது. கொரனோ வைரஸ்தாக்கம் தாக்கம் காரணமாக சில அத்தியவசிய…

குறித்த மாவட்டங்களி நாளை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களையும் வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களையும் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பிரதான சந்தைகள் மூடப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். இதற்கு மாற்றீடாக பொது மைதானங்கள், பொது இடங்கள் போன்றவற்றில் பரந்த வெளியில்…

திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்!!

நல்லூர் பிரதேச எல்லைக்கு உட்பட்ட பிரதான பொதுச் சந்தையான திருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம் செய்யப்பட்டு பல குழுக்களாக வெவேறு இடங்களில் இயங்கவைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்…

இலங்கையில் இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை!!

இன்றைய தினம் (25) மாலை 4.30 மணி வரையில் எந்தவொரு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளரும் நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் அமைச்சர்…

கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி கூடியது!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையின் விசேட செயலணி இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் பி.ப 4 மணியளவில் இன்று கூடியது. தற்போது உலகத்தையே பாரிய அச்சுறுத்தலுக்கு ஏற்படுத்தியுள்ள கோரோனா வைரஸ் காரணமாக நாடு பூராகவும் தற்போது ஊரடங்குச்…

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

கொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டிற்குள் தொற்று மூன்று கட்டங்களாகப் பரவும் அபாயமுள்ளதாகவும் தற்போது சிறு குழுவொன்றினூடாக பரவும் நிலை காணப்படுவதாகவும் அரச…

ஊரடங்கானது அர்த்தமற்றதாகி விடுகின்றது – ஆர்னோல்ட்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கானது அது தளர்த்தப்படும் காலப்பகுதியில் அர்த்தமற்றதாகி விடுகின்றது என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற…

வவுனியாவில் 137 பேர் சுய தனிமைபடுத்தலில்!!

கொரனா வைரஸ்தாக்கம் இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் இதுவரை 208 பேர் வருகை தந்துள்ளதுடன் அவர்களில் 137 பேர் சுஜ தனிமைபடுத்தப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் வவுனியா சுகாதார வைத்திய…

கொரோனா வைரசை கட்டுப்படுத்த 123 ஆண்டுகள் பழமையான சட்டம்..!!!

எதை தின்றால் பித்தம் தெளியும்? - தமிழில் இப்படி ஒரு பழமொழி உண்டு. அதே போன்றுதான் என்ன செய்தால் இந்த படுபாவி கொரோனா வைரசை ஒழிக்க முடியும் என்றுதான் ஒட்டுமொத்த உலகமும் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை…

டிரம்ப் மனைவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை..!!!

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று…

கொரோனா பாதிப்பு- உலகளவில் பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியது..!!!

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 197 நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதலில் சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு,…

வவுனியாவில் 13 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!! (படங்கள்)

வவுனியாவில் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இளைஞர்கள்!! வவுனியாவில் ஜந்து நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 13…

நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு – பலி 157..!!!

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. அங்குள்ள பிரபல நகரமான நியூயார்க்கில் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகும் 2 பேரில் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவராக இருப்பதாக…

ரஷியாவில் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தது எப்படி?..!!

“அட.. இதெப்படி இவர்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?” - இப்படித்தான் உலக நாடுகளையெல்லாம் இன்றைக்கு அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது புதின் ஆளுகிற ரஷியா. உலக நாடுகளில் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் தொற்று நீக்கும் செயற்பாடு!! (படங்கள்)

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் வவுனியா பிரதேச செயலகத்தில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலாளர்…