;
Athirady Tamil News
Daily Archives

9 May 2020

தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினரை அனுப்பி வைக்க சுகாதாரத்துறை அமைச்சகம்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் நாடு முழுவதும் 59 ஆயிரத்து 662 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 39 ஆயிரத்து 834 பேர் சிகிச்சை பெற்று…

ஊரடங்கால் சொந்த ஊருக்கு சைக்கிளில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கி பலி..!!

சத்தீஸ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா சாகு. இவர் தனது மனைவி பிரமிளா, குழந்தைகள் நிகில் மற்றும் சாந்தினியுடன் உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலையின்றி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக…

வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி..!!

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்க குடியிருப்புக்கு கீழ் கழிவு நீர் தொட்டி…

முஸ்லிம்களின் இறுதி கிரியை தொடர்பில் ரிசாத் பதியூதீன் ஜனாதிபதிக்கு கடிதம்!!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் கொவிட் 19 வைரஸால் பீடிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டிய முறைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெளிவுப்படுத்தியுள்ளார். கொவிட் 19 வைரஸால் தொடர்ந்தும்…

சண்டிலிப்பாய் பகுதியில் பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!! (படங்கள்)

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி புகுந்த பொலிஸார் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் வேலி, மதில் என்பவற்றையும் சேதமாக்கி உள்ளனர். சண்டிலிப்பாய்…

அமித்ஷாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய 4 பேர் கைது..!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியான செய்தி போன்று ஸ்கீரின் சாட் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த ஸ்கீரின் சாட்டில், தனக்கு எலுப்பு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் நாட்டிற்கு…

சீனாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா..!!!

சீனாவில் புதிதாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 16 பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா வந்துள்ளது. 16 பேரும் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள். ஜிலின் மாகாணத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நான் பூரண உடல் நலத்துடன் தான் இருக்கிறேன் – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த…

இந்தியாவில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆயிரத்து 981 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

வெறுப்பு பேச்சுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்..!!!

ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறி இருப்பதாவது:- பெருந்தொற்று நோயான கொரோனா பல்வேறு நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இந்த…

3 நாட்களுக்கு பின் வந்த ரிப்போர்ட்.. விசாகப்பட்டினம் விஷவாயு கசிவுக்கு என்ன காரணம்?.. என்ன…

விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவு விபத்துக்கு என்ன காரணம் என்று எல்ஜி பாலிமர் நிறுவனம் முதல்கட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில்…

வி‌ஷ வாயு கசிவால் 12 பேர் பலி: ரசாயன ஆலைக்கு ரூ.50 கோடி அபராதம் – தேசிய பசுமை…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை வி‌ஷ வாயு கசிவு ஏற்பட்டது. தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. கிராமங்களுக்கு வி‌ஷ வாயு…

இந்தோனேசியாவில் பரவும் மாறுபட்ட கொரோனா வைரஸ்..!!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் சுமார் 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.…

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது !!

ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 75 மாவட்டங்களில் ஆய்வு- மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு..!!

கொரோனா பாதிப்பு சமூக பரவலாகிறதா என்பதை கண்டறிவதற்காக இந்தியா மருத்துவ கவுன்சில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 75 மாவட்டங்களில் தொற்று அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து சமூக பரவல் ஆகிறதா…

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் வீசா ஜூன் 11 வரை நீடிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே…

ஏழை நாடுகளுக்கு ரூ.50,250 கோடி நிதி – உலக நாடுகள் வழங்க ஐ.நா. வேண்டுகோள்..!!!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. ஆனால் இதற்கு எதிராக போதுமான நிதியின்றி ஏழை நாடுகள் அல்லாடுகின்றன. கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிற ஏழை நாடுகளுக்கு உடனடி தேவைகளை கவனிப்பதற்கு 6.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.50…

அதிவேக வீதிகளை மே 11இல் திறக்க ஏற்பாடு!!

வாகனப் போக்குவரத்திற்காக அதிவேக வீதிகள் நாளை மறுதினம் (11) முதல் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிப்புற சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை…

மம்தா கட்சி எம்.பி.க்கு பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டினர்..!!

மேற்கு வங்காள மாநிலம், ஆரம்பாக் தொகுதி பெண் எம்.பி. அபருபா பொத்தார். இவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவரது கணவர் முகமது ஷகீர் அலி. இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த நிலையில், அபருபா…

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு, கிம் ஜாங் அன் பாராட்டு..!!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. உலகளவில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சென்று…

தனியார் போக்குவரத்து சேவை குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை!!

பெரும்பாலான அரச, தனியார் துறையினரது சேவை நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. இருப்பினும் போக்குவரத்து சேவையில் தனியார் பேருந்துகளை ஈடு படுத்துவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அரசாங்க தரப்பினருடனான…

பாராளுமன்றம் கலைப்பு எதிராக நீதிமன்றில் மேலும் இரு மனுக்கள் தாக்கல்!!

பாராளுமன்றம் கலைப்பு மற்றும் ஜூம் 20 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம…

கொரோனா அறிகுறி மிதமான பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் காத்திருக்க தேவையில்லை-…

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு 2 கட்ட சோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்கள் 14 நாட்களுக்கு பிறகு மீண்டும் சோதனை செய்து கொள்ள வேண்டும் என…

கொரோனாவால் பரவும் காசநோய்: அடுத்த 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் –…

கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்ததுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் அப்படியே புரட்டி போட்டுவிட்டது. கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு…

மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பறிமுதல்!!

புத்தளத்தில் விற்பனைக்காக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் போதை ஒழிப்பு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை…

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 844ஆக…

சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணை!!

உடுவில் அம்பலவாணர் வீதியில் கடந்த கடந்த 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புள்ளவர் என முறைப்பாட்டாளரால் அடையாளம் காட்டப்பட்ட கொள்ளைச் சந்தேக நபரை சுன்னாகம் பொலிஸார் விடுவித்தமை தொடர்பில் விசாரணைகளை…

மே 11ஆம் திகதி தொடக்கம் வடக்கு மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வின் போது பொதுமக்களினால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அமெரிக்க துணை அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது..!!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும்…

வடமாகாண அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள்!!

கோவிட் -19 நோயினை எதிர்கொள்வதற்கு அலுவலகங்களில் பின்பற்றவேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பில் வடக்கு மாகா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் தாக்குதல்!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று ( 8) வெள்ளிக்கிழமை பின்னிரவு…

பாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31க்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் – சுப்ரீம் கோர்ட்…

பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் வெடித்த கலவரத்தால் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அப்போதைய உத்தர…

உலகை அச்சுறுத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது..!!!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து…

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்கு !!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு…

யாழ்.வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் கொள்ளை!! (வீடியோ, படங்கள்)

யாழ்.வயாவிளான்- குரும்பசிட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன், வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. இரவு பதினோரு மணியளவில் வீடு…