;
Athirady Tamil News
Daily Archives

24 May 2020

அமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும்…

பியாங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேற்று முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். மீட்டிங் வந்தார்…

கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான…

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தௌபீக் உமருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரே நேரடியாக ஒரு தொலைக்காட்சிக்கு பேசி உறுதி செய்துள்ளார். மேலும், அவர் தான் இந்த நோயில் இருந்து மீள அனைவரும் வேண்டிக்…

வவுனியா மதுரநகர் மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்)

வவுனியா மதுரநகர் மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்) 24/05/2020 இன்று காலை மதுர நகர் மக்களுக்கான தொடரும் இடர்உதவி நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 20 பேர் இன்று ( 24) ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

“அரசுடன் பேசித்தான், சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” -புளொட் தலைவர்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளொட் அமைப்பின் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டி.. கேள்வி:- அரசியல் தீர்வு இந்த அரசாங்கத்தினாலேயே சாத்தியப்படும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது கடந்த…

உடுவில் அம்பலவாணவர் வீதியில் வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்று மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மற்றும் மிளகாய்த் தூள் கரைசல் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணயளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்ற வீட்டில் யாரும் வசிக்கவில்லை.…

சட்டத்தரணி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறைக் கும்பல்!!

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தைத் வெளியிட்டுள்ள மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும்…

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எலி காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக கண்டி பொது மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் குலரத்னே எச்சரித்துள்ளார். கண்டியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய அவர், அறிகுறிகளைக் கண்டறிந்து மருத்துவ…

இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக மூவருக்கு விளக்கமறியல்!!

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில்…

டெல்லியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் கொரோனாவுக்கு பலி..!!

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் கொரோனா தாக்கி வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட…

பைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண…

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் மூன்று மாத கர்ப்பிணி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த அரங்கமங்கலம் ஊராட்சி ஓணாங்குப்பம் ஏரிக்கரை தெரு வைச்…

தன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த…

டெல்லியில் மனைவியுடனான குடும்பச் சண்டையில் தன்னைத் தானே காதில் துப்பாக்கியால் சுட்ட போது அவரது தலை வழியாக பயணித்த புல்லட் அருகில் அமர்ந்திருந்த மனைவியின் கழுத்தில் பாய்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஃபரீதாபாத்திலிருந்து டெல்லியில்…

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps – மனைவியிடம் சிக்கியது எப்படி…

கூகிள் மேப் பொய் சொல்லாது டா என்று நண்பர்களுக்குள் வசனம் பேசுவது போல, ஒரு குடும்பத் தலைவியும் இதே வசனத்தைச் சொல்லி அவரின் கணவரை சும்மா லெப்ட் ரைட் என்று வாங்கி கிழித்து இருக்கிறார். கூகிள் மேப்ஸ் இல் லொக்கேஷன் ஹிஸ்டரி தகவலை ஆராய்ந்து…

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!! (படங்கள்)

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (24.05.2020) மாலை மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22.05.2020) முதல் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச்…

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் கிருமி நீக்கும் செயற்பாடு!! (படங்கள்)

வவுனியா சிவன் முதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு வவுனியா எல்லர்மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு இன்று (24.05.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.…

7 மாநிலங்களில் உள்ள 11 மாநகராட்சி பகுதிகளில் 70 சதவிகித கொரோனா பாதிப்பு..!!!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 54 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 73 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில்…

அட்டனில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!! (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24.05.2020) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால்…

3 லட்சத்து 43 ஆயிரம் பேர் பலி – அதிரும் உலக நாடுகள்..!!!

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும்…

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 12 பேர் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

4 மாதங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு!!

நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் 10 மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய டெங்குநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா,…

தேர்தல் தொடர்பான முடிவு குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்!!

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல் வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாக கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு இரண்டையும் கருத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள்…

பல்கலைக்கழக விண்ணப்பத்தை அத்தாட்சிப்படுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு!!

கொரோனா தொற்றின் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால், பாடசாலை மூல விண்ணப்பதாரிகளாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்ற மாணவர்களின் விண்ணப்பத்தினை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை…

சிதம்பரபுரம் கற்குவாரியில் வீழ்ந்து 8வயதுடைய சிறுவன் பலி!! (படங்கள்)

சிதம்பரபுரம் கற்குவாரியில் வீழ்ந்து 8வயதுடைய சிறுவன் பலி வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார். இன்று (24.05.2020) மதியம் 12.30…

பொலிஸாருக்கே பிளைக்கில் சாராயம் வித்த முதியவர்!! -கோப்பாயில் சம்பவம்!!

சிவில் உடையில் சென்ற பொலீஸாருக்கே முதியவர் ஒருவர் 500 ரூபாவுக்கு சாராயம் விற்பனை செய்துள்ளார். கோப்பாய் மத்திய பகுதியில் வீட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.…

யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலை – மாவட்டச் செயலாளர்!!

யாழ்ப்பாண மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…

யாழ்ப்பாணத்தில் காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு – மாவட்டச் செயலாளர் !!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது உள்ள நிலமைகள் தொடர்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு…

வவுனியா கூமாங்குளம் மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்)

வவுனியா கூமாங்குளம் மக்களுக்கான, தொடரும் இடர்உதவி நிவாரண பணிகள்..! (படங்கள்) நேற்று (23/05/2020 அன்று) மாலை கூமாங்குளம் மக்களுக்கான இடர்உதவி நிவாரண பணிகள் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக…

கொரோனா அப்டேட் – உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…

கொரோனாவை கட்டுப்படுத்த இனி நாடு தழுவிய ஊரடங்கு உதவாது – வைரஸ் வல்லுனர்..!!

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அல்லாடி வருகிறது. இந்த நோய்த்தொற்றின் பரவலைத்தடுக்க உலக அளவில் கை கொடுக்கும் முதல் வழி ஊரடங்குதான் என கூறப்பட்டு வருகிறது. இதனால்தான் உலக நாடுகள் பலவும் மாதக்கணக்கில் ஊரடங்கை அமல்படுத்தி…

ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 3 நாள் போர் நிறுத்தம் – தலிபான் அறிவிப்பு..!!

ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு – மாயாவதி அதிரடி…

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,…

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1100-ஐ கடந்தது..!!!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால்…

ஊரடங்கு சட்டதை மீறிய 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு !!

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 19,582 பேர்…

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து செவ்வாய் முதல்!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை தொடக்கம் முழுமையாக மீள ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சுகாதாரத்…