;
Athirady Tamil News
Daily Archives

18 February 2021

தடுப்பூசி போட்டு கொண்டாலும் கொரோனா தாக்கும்: தொற்று நோயியல் நிபுணர் தகவல்..!!

பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய் பிரிவு டாக்டரான தொற்று நோயியல் நிபுணரும், கர்நாடக அரசின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினருமான டாக்டர் ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-…

பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள்!!

குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். இது…

கொரோனா நோயாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு!!

இலங்கையில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

விழுப்புரத்தில் 28-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட தேர்தல் பிரசார மாநாடு..!!

தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தலிலும் இதே கூட்டணி தொடருவது உறுதியாகி விட்டது. பா.ஜனதா…

O/L பரீட்சை விடைத்தாள் மறு பரிசீலனை முடிவுகள் வெளியீடு!!

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மறுபரிசீலனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lk என்ற இணையதளத்தில் பரீட்சை பெறுபேறுகளை…

பட்டமளிப்பு விழாவை நடாத்துவதில் சிரமங்கள் இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, நடாத்தலாம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள்…

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல்…

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு.!!

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை…

கேரளாவில் மின் இணைப்பை துண்டித்ததால் தற்கொலை செய்த தொழிலாளி..!!

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பெருங்கிடவிளா தோட்ட வாரம் பகுதியை சேர்ந்தவர் சணல்குமார் (வயது39). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசுவாசியான இவர், கேரளாவில்…

அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் – மருத்துவ நிபுணர்கள்…

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:-…

யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி!! (படங்கள்)

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந் தொற்று அபாயத்தை அடுத்து, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி…

“கூப்பிட்டாத்தான் வரும்”: குரங்குகளுக்கு உணவளிக்கும் ‘காருண்யப் பெண்’ !! (கட்டுரை)

“ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்ளாமல், ஒவ்வொரு குரங்காக வந்து உணவை எடுத்துச் செல்வது, என்னை வியப்புக்குள்ளாக்கியது. சில குரங்குகள், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும். நான், உணவைக் காட்டி அழைக்கின்ற போது, ஒவ்வொன்றாக வந்து, உணவைப்…

மாணவர் சமூகம் எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது –…

மாணவர் சமூகம் என்பது எமது வளங்களை நிர்ணயிக்கின்ற சக்திகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. கிழக்கு மாகாணத்தில் எமது மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் எதிர்காலத்தில் எமக்குப் பாரிய சவாலாக…

சிறுவன் பாலியல் வன்கொடுமை- குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த டேனிஷ் படேல் என்ற நபர் கடந்த 2019-ம் ஆண்டு மனநலம் குன்றிய சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் டேனிஷ் படேல் மீது வழக்கு பதிவு செய்து கைது…

மார்ச் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: மந்திரி சுதாகர்..!!

கர்நாடக மாம்பழ விவசாயிகள் மற்றும் அதன் விற்பனையாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:- மாம்பழத்திற்கு உடனடி சந்தை தேவைப்படுகிறது. அதை நீண்ட காலம்…

ஈரானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- 40 பேர் காயம்…!!

மக்கள் தொகை பெருக்கம் அதிகம் உள்ள இந்த காலகட்டத்தில் இயற்கை சீற்றங்களும் அதிக அளவில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சுனாமி சூறாவளி காற்று போன்ற மற்ற இயற்கை சீற்றங்களை விட நிலநடுக்கம் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக ஏற்படும் கொண்டே…

நகரசபை ஊழியர்களின் போராட்டத்தால் களேபரமானது சபை அமர்வு!! (படங்கள்)

தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வவுனியா நகரபை ஊழியர்கள் சிலர் முன்னெடுத்துவரும் போராட்டத்தால் இன்று இடம்பெற்ற சபை அமர்வு களேபரமானது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் கௌதமன் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது…

மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா!!

மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட…

பருத்தித்துறை இளைஞன் விடுவிப்பு!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார். இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரின் தாயாரிடம்…

தேவாரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் வெட்டிக் கொலை- கணவர் கைது..!!

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். முனியம்மாள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு…

தெலுங்கானா முதல்-மந்திரி பிறந்தநாள்: இரண்டரை கிலோ எடையில் அம்மனுக்கு தங்கப் புடவை…

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர ராவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற பால்கம்பேட் கோவிலில் எழுந்தளியிருக்கும் அம்மன் எல்லம்மாவுக்கு இரண்டரை கிலோ எடை கொண்ட தங்கப் புடவை காணிக்கையாக…

பிணை முறி வழக்கு விசாரணைக்கு இரண்டு ட்ரயல் எட் பார் நீதிபதி குழாம்கள் நியமனம்!!

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2016 மார்ச் மாதம் இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறி மோசடி வழக்குகள் குறித்து விசாரணை செய்ய இரண்டு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமை நியமிக்க நீதியரசர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, முதலாவது ட்ரயல்…

யாழ்.மாநகர முதல்வர் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!! (படங்கள் & வீடியோ)

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகள் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கான…

Fly Dubai விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையுடன் விமானப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த டுபாய் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ப்ளை டுபாய் (Fly Dubai) விமான சேவையின் முதலாவது விமானம் 58 பயணிகளுடன்…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றதாக இளைஞன் ஒருவர் பருத்தித்துறையில்…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்…

சபரிமலை கோவிலில் ஆறாட்டு திருவிழா மார்ச் 19-ந்தேதி தொடங்குகிறது..!!!

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 12-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 13-ந்தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து ஐயப்பன் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டது. பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்…

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.!!!!

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பானுபிரியா (வயது 25). இவருக்கும் திருவள்ளூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 27) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

தொலைத்தொடர்பு சாதன உற்பத்திக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஊக்கத்தொகை – மத்திய மந்திரிசபை…

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தொலைத்தொடர்பு சாதனங்கள்…

தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கம்!!

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…

கொரோனா மேலாண்மை மாநாடு : இந்தியா இன்று நடத்துகிறது – 9 நாடுகளுக்கு அழைப்பு..!

கொரோனா நோய்த்தொற்று மேலாண்மை தொடர்பான பிராந்திய மாநாட்டை இந்தியா இன்று நடத்துகிறது. ‘கொரோனா மேலாண்மை, அனுபவம், நல்ல நடைமுறைகள், முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பிலான இம்மாநாட்டுக்கு, தெற்காசிய பகுதியைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்,…

மீண்டும் பிசிஆர் மேற்கொள்ளுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!!

உயிரிழந்த பின்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபரொருவரின் சடலத்தை மீண்டும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.…

புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு!!

தற்போதுள்ள கோவிட் -19 நிலைமைகளுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா துறை நாட்டின்…

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பட்டமளிப்பு விழாவை நடாத்தத் தீர்மானம்?

நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்று அபாயத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடாத்தி முடிப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அநேகமாக பட்டம் பெறுபவர்களைத் தவிர ஏனைய விருந்தினர்களைப்…