;
Athirady Tamil News
Daily Archives

3 March 2021

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது !!

கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மர ஆலையில் ஊழியர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை செலுத்தாதிருப்பதற்காக இவ்வாறு இலஞ்சம்…

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற கருஞ்சிறுத்தை..!!

நீலகிரி 60 சதவீதம் அடர்ந்த வனப்பகுதியை கொண்ட மலை மாவட்டமாகும் இங்கு சிறுத்தை, கரடி, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் மனித-விலங்கு மோதல்…

கட்டுநாயக்கவில் இன்றும் பலருக்குக் கொரோனா !!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று (03) 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சீதுவவில் இன்று 7 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால், அங்கு இதுவரையில் இனங்காணப்பட்ட…

81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை..!!!

இந்தியாவில் ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்பான இந்த தடுப்பூசியின்…

தடுப்பூசி போட தயங்க வேண்டாம்… நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றது. 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும்,…

நல்லுறவை பலப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்!! (கட்டுரை)

தெற்காசிய பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கைக்கும், அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் பிரதமர் இம்ரான் கான் வருகையையடுத்து புதியதொரு அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க…

கல்வி செயற்பாட்டுக்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வன்னி பகுதியில் கல்வி செயற்பாட்டு நடவடிக்கைக்காக மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் நீம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (03-03-2021) வழங்கி வைக்கப்பட்டது. என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலய மனிதநேய பணிகள் அமைப்பான 'தாயக…

கொடிகாமம் சந்தையில் COVID-19 கிருமித் தொற்று நீக்கம்!! (வீடியோ)

கொடிகாமம் சந்தையில் COVID-19 தொற்றையடுத்து, இன்று கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக சந்தைக்குப் பூட்டு. நாளை வழமை போல இயங்கும், ஆனாலும் PCR பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்,…

பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வதே ஜனநாயக பண்பு!!

தோட்ட அதிகாரிகள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கி கோரி போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியதாகும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தோட்ட அதிகாரிகள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி கோரும் பட்சத்தில், தொழிலாளர்களும் தமது…

ஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்! (மருத்துவம்)

கீரைகளில் தண்டுக் கீரைக்குத் தனியிடம் உண்டு. ருசியிலும் சரி, அரிய மருத்துவக் குணங்களிலும் சரி. தண்டுக்கீரைக்கு நிகர் தண்டுக்கீரைதான். * காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும்…

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு..!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பீவாண்டியை சேர்ந்தவர் சுக்தேவ். 45 வயதான இவர் கொரோனா தடுப்பூசி 2-வது டோசை போட்டுக்கொண்டார். தடுப்பு மருந்து செலுத்திய 15 நிமிடத்தில் அவர் உயிர் இழந்தார். அவரது இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத…

முச்சக்கர வண்டி சாரதியை இலக்கு வைத்து நூதன கொள்ளை!!

யாழில்.பெண் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது ,…

இரணைதீவில் அடக்கம் செய்யும் அறிவுறுத்தலை வழங்கும் சுற்றறிக்கை வெளியீடு!!

கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்களின் அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசெலா…

ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் COVID தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் !!

இம்முறை ஹஜ் யாத்திரை மேற்கொள்வோர் COVID தடுப்பூசியை கட்டாயம் ஏற்றியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. COVID தடுப்பூசி ஏற்றியவர்கள் மாத்திரமே இம்முறை ஹஜ் யாத்திரையில் கலந்துகொள்ள முடியுமென சவுதி அரேபிய சுகாதார அமைச்சு…

இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்பமையமானது 2021 இன்று முதல் மீண்டும் செயல்படத்…

கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக 2020 மார்ச் 13ஆம் திகதியிலிருந்து மூடப்பட்ட இல. 145, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய விசா சேவைகளுக்கான (IVS) விண்ணப்பமையமானது 2021 இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்திய விசா…

இலங்கை – இந்திய விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் கூட்டாக சாகசம்!!

இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமான சாகச நிகழ்வுகள் இன்று மாலை கொழும்பில் ஆரம்பமாகின. கொழும்பு காலிமுகத்திடலில் விமானப் படையினரின் விமான சாகசங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து ஆரம்பமாகின.…

கொரோனா தடுப்பூசி போட மேலும் பல தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி- மத்திய அரசு முடிவு..!!!

இந்தியாவில் ஏற்கனவே முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. அதில் 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் தடுப்பூசி…

மியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை… 7 பேர் உயிரிழப்பு..!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த 4 வாரங்களாக கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. உச்சகட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை…

இந்தியாவில் கொரோனா நிலவரம்: புதிதாக 14,989 பேருக்கு தொற்று- 98 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,39,516 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,989…

ஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 361 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால்…

கிளிநொச்சி கோவில் கிணற்றிலிருந்து 2 வயதுக் குழந்தை சடலமாக மீட்பு!! (படங்கள்)

கிளிநொச்சி வட்டக்கச்சி மாணிக்கப்பிள்ளையார் கோவில் கிணற்றிலிருந்து 2 வயதுக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டதுடன், தாயார் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் இரண்டு பெண் பிள்ளைகளை (5,8 வயதுடைய)…

காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை இந்த ஆண்டுக்குள் பொருத்த வேண்டும்- சுப்ரீம்…

விசாரணைக்கு வருபவர்கள் மற்றும் கைதிகள் மீதான சித்ரவதைகளை தடுக்க, அனைத்து காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை…

அமீரகத்தில் ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை..!!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 25 ஆயிரத்து 159 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – ஐ.நா. கூட்டத்தில் இந்தியா…

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில், இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. அதற்கு பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி, இந்தியா நேற்று பதில் அளித்தது. இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர…

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் இறுதியாக எழுதிய கடிதம்!!

கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான தற்கொலை உப பொலிஸ் பரிசோதகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் கடிதம்…

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்…

முல்லைப்பெரியாறு அணை வழக்கு விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு…

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த…

அமெரிக்காவில் ஜோ பைடன் உதவியாளராக இந்தியர் நியமனம்..!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர். தேர்தல் வெற்றிக்கு…

ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்…!!

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம் நாட்டில்…

மேகனுக்கு இங்கிலாந்து நாளிதழ் நஷ்ட ஈடு வழங்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு..!!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் A9 வீதியை மறித்து போராட்டம்! (வீடியோ, படங்கள்)

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியை மறித்து இன்று மதியம் தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து மூன்றாவது நாளாக…

ஜப்பானில்உருமாறிய கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!!

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. ஜப்பானில் சமீபநாட்களாக உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனவரி 29-ந் தேதி தொடங்கிய வாரத்தில், 173 பேருக்கு கொரோனா தாக்கியதில்,…