;
Athirady Tamil News
Daily Archives

15 November 2021

பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அறை தேரரால் முற்றுகை !!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையை, மட்டக்களப்பு, மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றார். இதன்காரணமாக, பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் இன்று…

யாழ் மாநகர மேயர் தனது கட்சி கட்டமைப்பை விஸ்தரித்தல் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்!!

யாழ் மாநகர மேயரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிக்கும் பொருட்டு வடக்கின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்களுடன் வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா நகரில் உள்ள விடுதி…

சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் !! (படங்கள்)

யாழ்ப்பாணம், அரசடி மற்றும் பழம் வீதியில் நேற்றிரவு சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு…

வவுனியா நகரில் உள்ள பெண்கள் பாடசாலை ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா நகரப்பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவு ஆசிரியருக்கும், அவரது கணவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யாப்பட்டுள்ளதாக சுகாதராப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் ஆரம்ப…

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்; நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

எல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன் பிடிப் படகு இரண்டையும் அரச உடமையாக்குமாறும், மீனவர்களிற்கு 10 வருடத்திற்கு ஒத்திவைத்த ஒரு வருட சிறைத்தண்டனையும் விதித்து பருத்தித்துறை நீதிமன்றம் இன்று…

மேலும் 382 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 382 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 524,311 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (வீடியோ, படங்கள்)

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று காலை 7 மணியளவில் முன்னெடுத்திருந்தனர். இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை…

பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவிக்கும் அரச உயரதிகாரிகள்!!

மனிதாபிமானமற்ற முறையில் குடியிருக்கும் பாதைக்குள் வெள்ள நீரை வெட்டிவிட்டு சேதம் விளைவிக்கும் அரச உயரதிகாரிகள் ,மக்கள் பிரதிநிதிகளை தடுத்து நிறுத்தகோரி வடக்கு மாகாண ஆளுநருக்கு மக்கள் கடிதம் எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23 கோடியை நெருங்குகிறது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23…

ஈகுவடார் சிறை கலவரம் – பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு…!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமாகவே சிறைச்சாலைகளின் நிலைமை மோசமான சூழலில் இருந்து வருகிறது. அங்கு அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது பல்வேறு பிரச்சினைக்கு வித்திடுகிறது. குற்ற வழக்குகளில் சிறைகளில்…

திருவுருச்சிலை உடைப்பு சம்பவம்; பெண்ணொருவர் கைது!!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் இருதயநாதரின் திருவுருவச் சிலை என்பன உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பெண் ஒருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக…

சமையல் எரிவாயு விநியோகம் நாளை முதல் வழமைக்கு!!

நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவின் விநியோகம் , நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் என்று லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார். தற்போது மேல் மாகாணத்தில் சமையல் எரிவாயுவின் விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு…

உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி பாடசாலை வாசலில் பலி!!

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை முகாம்!!…

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் இந்த…

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்று சந்திக்கிறார் அதிபர் ஜோ பைடன்…!!

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் ஒப்புதல்…!!

இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 13.77 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் 8,143 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…

வேகமெடுக்கும் கொரோனா – ஜெர்மனியில் 50 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு…!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 934 பேருக்கு…

லிபியா அதிபர் தேர்தலில் கடாபி மகன் போட்டி…!!

லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த…

பணி நயப்பு மணிவிழா!! (படங்கள்)

யாழ். மாவட்டத்தின் ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பணி நயப்பும் மணிவிழா மலர் வெளியீடும் அளவெட்டி மகாஜன சபை மண்டபத்தில் நேற்று(14) நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி. ஸ்ரீ சற்குணராஜா, வடமாகாண கல்வி…

நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று(15) முதல் எரிபொருள்…

அரச சேவையை கலைக்க முயற்சி !!

அரச சேவையானது நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பரந்து விரிந்துள்ளதாகவும் அது நாட்டுக்கு சுமை என நிதியமைச்சர் தெரிவித்துள்ளமையானது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் என நினைப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அந்த…

சிறில் காமினி பெர்ணான்டோ இன்று CID யில் ஆஜர்!!

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு…

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தங்கையை களமிறக்கும் நடிகர் சோனு சூட்…!!!

சமூக அக்கறை, ஏழைகளுக்கு செய்யும் உதவிகளால் மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகர் சோனு சூட் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக அவரது தங்கை மாளவிகாவை அரசியலில் களமிறக்குகிறார். பஞ்சாப் மாநிலம் மோகாவில்…

நேபாளத்தில் குளத்தில் விழுந்து மூழ்கிய கார்- 4 இந்தியர்கள் பலி…!!

நேபாளத்தின் ரவுதகத் மாவட்டம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கவுர்-சந்திராபூர் சாலையில் நேற்று இரவு சென்றுகொண்டிருந்த ஒரு கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்த மாவோயிஸ்டுகள்…!!!

பீகார் மாநிலம் கயா மாவட்டம், துமரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்து, சரயு சிங் போக்தா என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை படுகொலை செய்துள்ளனர். அப்போதும், ஆத்திரம் தணியாத மாவோயிஸ்டுகள்,…

கொரோனா வைரசுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு…!!

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து வேகமாக பரவியதால் தடுப்பு மருந்தின் 3-வது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) மக்களுக்கு செலுத்த சில நாடுகள்…

பழைய வர்த்தமானி அறிவித்தல் இரத்து…!!

மன்னார் பிரதேச சபையின் புதுக்குடியிருப்பு உறுப்பினராகவும் சபையின் தவிசாளராகவும் இருந்து நீக்கப்பட்ட சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் மீண்டும் தனது பொறுப்புக்களை ஏற்க இருக்கின்றார். முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி பி.ச.ம.சார்ள்ஸ் 2021.09.13…

இன்றும் மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீர் நிலநடுக்கம்…!!

ஆந்திர மாநிலத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள நகரும் விசாகப்பட்டினம். இங்கு துறைமுகம், உப்பு தயாரிக்கும் தொழிற்சாலை, மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்டவை உள்ளன. ஆந்திராவின் முக்கிய நகரமான விசாகப்பட்டினத்தில் இன்று காலை 7.13 மணியளவில் திடீரென…

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- 14 மாவட்ட காங். நிர்வாகிகளுடன் பிரியங்கா…

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைவதால் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்…

புதுவையில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கு – தனியார் நிறுவன ஊழியர்கள்…

புதுவையில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து உருளையன்பேட்டை போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அண்ணாநகர் மற்றும் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஸ்பாவில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 10 அழகிகள் மீட்கப்பட்டனர்.…

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா…

நெய்வேலி அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர் பலி…!!

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழைக்கு 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. 17 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமானது. இந்த நிலையில் நெய்வேலி அருகே நேற்று முன்தினம் இரவு கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து டிரைவர்…

‘ஜாம்’ வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ள பா.ஜனதா- சமாஜ்வாடி கட்சி…!!

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என யோகி ஆதித்யநாத் களம் இறங்கியுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பக்க பலமாக உள்ளார். அதேவேளையில் இழந்த…