;
Athirady Tamil News
Daily Archives

29 May 2022

அயோத்தி நோக்கிச் சென்ற சுற்றுலாப் பேருந்து லாரி மீது மோதி 7 பேர் உயிரிழப்பு..!!

பஹ்ரைச்- லக்கீம்பூர் நெடுஞ்சாலையில் இன்று கர்நாடகாவில் இருந்து 16 பேரை ஏற்றிக் கொண்டு சுற்றுலா பேருந்து அயோதிக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோதிபூர் பகுதுியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.…

திருப்பதியில் 24 மணி நேரமாகியும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் தரிசனத்திற்கு வரும்…

கேரளாவில் விபத்துக்குள்ளாகும் 214 பகுதிகள்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2 நாள் பிராந்திய அதிகாரிகளின் மாநாடு நேற்று தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயா மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- உலகத் தரத்தில்…

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம் !!

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு…

மணிப்பூர் கக்சிங் பகுதியில் தீவிரவாதி கைது..!!

மணிப்பூரின் கச்சிங் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அசாம் படையினர் மற்றும்…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின்…

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு…

அரச நிதியை கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் எடுத்துள்ள தீர்மானம்!!

அரச நிதியை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக 15 குழுக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நிகழ்த்திய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு…

’மருந்து நெருக்கடியை தீர்க்க WHO உதவும்’ !!

இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்…

50 ரயில்கள் மேலதிகமாக சேவையில் !!

பொதுப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்படும் என வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். போக்குவரத்து…

ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்த சதி !!

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை வெற்றிகொள்ள ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ராஜபக்ஷர்களை…

கேரளாவில் 1-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை..!!

கேரளாவில் வருகிற 1-ம்தேதி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி பகுதிகளில் நாளை (30-ந்தேதி)யும்,…

சூரிய சக்தியின் ஊடாக மின்சாரம் வழங்க நடவடிக்கை!!

வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சூரிய சக்தியின் ஊடாக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்…

ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தலும் நூல் வெளியீடும்!! (படங்கள்)

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாவலர் கலாச்சார மண்டபத்தில் மாலை 4 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் தலைவர்…

தினசரி பாதிப்பு சற்று அதிகரிப்பு- இந்தியாவில் புதிதாக 2,828 பேருக்கு கொரோனா..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 879,…

இந்தியா திராவிடர்களுக்கு, ஆதிவாசிகளுக்கு சொந்தமானது- அசாதுதீன் ஓவைசி பேச்சு..!!

மகாராஷ்டிரா மாநிலம் பாய்வாடியில் நடைபெற்ற, அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: இந்தியா என்னுடையதோ, தாக்கரேவின் உடையதோ, மோடியுடையதோ,…

மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்? – இன்று அறிவிப்பு வெளியாகிறது..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் உள்பட மாநிலங்களவையின் பல உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வு பெறுகிறார்கள். இதையடுத்து தமிழகம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரா உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை…

யாழில் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படவுள்ள முறை!!

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது…

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது: பாதுகாப்பு விடயத்தில் இந்தியா அச்சம் கொள்ளத்…

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (29.05) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…

போராட்டம் நடத்திய பலர் வரிசைகளில் நின்றவர்கள் அல்ல !!

எரிபொருள் விநியோகத்திற்கு எதிராக வீதிகளை மறித்து போராட்டம் நடத்திய பலர் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நின்றவர்கள் அல்ல என்பது தெரியவந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிதாக…

21 ஆவது திருத்தம் குறித்து மைத்திரி அவசர கடிதம் !!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுத்தியுள்ளார். அந்தக் கடிதத்தில்,…

செல்வங்களை தந்து விட்டே தந்தை விடைபெற்றார் – ஜீவன் !!

என் உயிரிலும் மேலான மக்கள் செல்வங்களை எனக்கு தந்துவிட்டே, எனது தந்தை விடைபெற்றுள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், எதிரணியில் இருந்தாலும் மக்களுக்கான எனது சேவைகள் தொடரும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…

இந்தியா-வங்காளதேசம் இடையே இன்று முதல் விரைவு ரெயில்கள் இயக்கம்..!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா வங்காளதேசம் இடையே மூன்று ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது இரு நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே பயணிகள் ரெயில்கள் மீண்டும் மீண்டும்…

அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்- வி.எச்.பி. தகவல்..!!

பாராளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கும் பணிகளில், இந்து அமைப்புகள் தீவிர காட்டி வருகின்றன. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில்…

CCTV யில் பதிவான தற்கொலை!! (வீடியோ)

வவுனியாவில் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் கடந்த 27 ஆம் திகதி இரவு கட்டிடமொன்றின் மேல் மாடியில் இருந்து குதித்துள்ளதாக பொலிஸார்…

ரூ.3500 மதிப்புள்ள 50 கிலோ யூரியாவை ரூ.300க்கு தருகிறோம்- பிரதமர் மோடி..!!

குஜராத்தின் காந்தி நகர் கலோலில் உலகின் முதல் நானோ யூரிவா திரவ ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டையின் விலை ரூ.3500 ஆக உள்ளது.…

மோடியிடம் பாதுகாப்பு கேட்ட இலங்கை எம்.பி !!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்பதால், தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, பாதுகாப்பு வழங்குமாறு இந்தியப் பிரதமர் ​ந​ரேந்திர மோடியிடம், இலங்கை…

செப்டெம்பருக்குப் பின்னர் அரிசி தட்டுப்பாடு?

பெரும்போகத்துக்கான விவசாய நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் செப்டெம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென பேராசிரியர் அருண குமார எச்சரித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள அரிசி செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பம்…

மொட்டு உறுப்பினர்கள் சிலர் விசாரணைக்கு அழைப்பு!!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் புதன்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் 9ஆம் திகதி “கோட்டா கோ கம” மற்றும் “மைனா கோ கம”…

சிறுமியை கர்ப்பமாக்கிய கோயில் ஐயர்!!

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கிய கோயில் ஐயரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பிணை வழங்கி கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பகுதி…

ஹம்பாந்தோட்டைக்கு சென்றார் நாமல் !!

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் ஹம்பாந்தோட்ட, சூரியவெவ, தங்காலை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்களை பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டி.வி.சனக ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.…

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் வார நாட்களில் இரண்டு…

பிரேசில் வெள்ள பாதிப்பு, நிலச்சரிவுக்கு 30 பேர் உயிரிழப்பு..!!

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடா் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் சனிக்கிழமை பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 28…

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் வெற்றி உலகிற்கு பல படிப்பினைகளை வழங்குகிறது-…

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரை மொத்தம் 193 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தகுதி வாய்ந்தவர்களுக்கு…

நைஜீரியாவில் சோகம் – சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர்…

நைஜீரியா நாட்டின் தென்கிழக்கே உள்ள போர்ட் ஹர்கோர்ட் நகரில் கிங்ஸ் அசெம்பிளி கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ளது. இதில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆலயத்தில் உணவு வழங்குகிறார்கள் என பரவிய தகவலை தொடர்ந்து, சிறிய…