;
Athirady Tamil News
Monthly Archives

July 2022

கேரளாவில் வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் திடீர் மரணம்..!!

கொரோனாவை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த நோய் கேரளாவைச் சேர்ந்த 35 வயது வாலிபருக்கு முதலில் ஏற்பட்டது. கடந்த 14-ந் தேதி வெளிநாட்டில் இருந்து வந்த அவருக்கு நடத்தப்பட்ட…

டீசல் இல்லாததால் திரும்பி வந்த நோயாளர்கள் !!

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட இரு நோயாளர்கள் டீசல் பிரச்சினைகளால் மீண்டும் புத்தளம் வைத்தியசாலைக்குகே…

வவுனியாவில் எந்தவித குழப்பமுமின்றி 1081 சமையல் எரிவாயு வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியா ஊடக அமையம் மற்றும் உக்குளாங்குளம் சீர்திருத்தம் விளையாட்டு கழகம் என்பன இணைந்து 1081 லிற்றோ சமையல் எரிவாயுக்களை எந்தவித குழப்பமுமின்றி அமைதியான முறையில் மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருந்தன. வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில்…

யாழில் தேவாலயம் மீது மின்னல் தாக்கியது!! (படங்கள்)

யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்றைய தினம் காலை ஆராதனை இடம்பெற்றபோதே…

கொலைக்கு தயாரான நபர் கைது !!

நபர் ஒருவரைக் கொலை செய்வதற்காக சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றையும் நான்கு ரவைகளையும் வைத்திருந்த 49 வயதுடைய நபரை களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னர் 19 வருடங்கள் சிறை தண்டனை…

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் !!

கடற்றொழிலை தங்குதடையின்றி, கிரமமாக முன்னெடுப்பதற்கு போதியளவு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி கல்முனைப் பிரதேச ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்முனை ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின்…

காலி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி !!

காலி ரத்கம கம்மெத்தே கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (31) பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ஒரே நேரத்தில் அமைச்சர் ரோஜாவை 3 ஆயிரம் பேர் போட்டோ எடுத்து சாதனை..!!

ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை…

திருப்பதியில் 3 வாரங்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத அளவு இருந்தது. தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்…

கேரளாவில் கனமழை காரணமாக மாவட்டங்களுக்கு மஞ்சள் – ஆரஞ்சு எச்சரிக்கை..!!

தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக…

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை- பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து,…

வெளியிடங்களில் இருந்து ஆளுநர்களை இறக்குமதி செய்வதனால் தான் சர்வதிகார போக்கு நிகழ்கின்றது!!…

வடக்கு ஆளுநரின் சர்வதிகார போக்கினை கண்டிப்பதுடன் உடனடியாக ஆளுநரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க பொது ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் சனிக்கிழமை (30) மாலை ஊடகவியலாளர் சந்திப்பு…

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை..…

தங்களது நாட்டுக்கு சீனாவின் உளவுக் கப்பல் வருவதை இதுவரை மறைத்துவந்த இலங்கை, இப்போது திடீரென ஒப்புக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு சீனாவின் உளவுக் கப்பல் வருவது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இலங்கையில்…

மத்தியபிரதேசத்தில் 883 கிலோ கஞ்சா பறிமுதல்- 5 பேர் கைது..!!

மத்தியபிரதேசத்தின் சேகோர் மாவட்டத்தில் 2 வாகனங்களில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அங்குள்ள ஒரு சுங்கச்சாவடியில் ஒரு காரையும், லாரியையும் நேற்று முன்தினம் அவர்கள்…

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

ஸ்திரமற்ற அரசியல் சூழல், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் இலங்கை திடமான முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. எனவே, இலங்கைக்கு எதிர்வரும்…

அமைதி இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது –

மோசடி, விரயம், ஊழல் போன்றவற்றைக் குறைத்தல் உள்ளிட்ட சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான விடயங்களை ஏற்படுத்தாமல் நெருக்கடிக்குள் சென்ற நாடு என்பதற்கு இலங்கையே உதாரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கோவிலை அடித்து சென்ற ஆற்று வெள்ளம்..!!

கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அம்மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கோதாவரி ஆறு பொங்கிப்பாய்கிறது. இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் புருசோத்தபட்டின…

வருமான வரிதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிதாக்கல்…

சில பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை இழிவாகப் பார்க்கின்றன- குடியரசு துணைத் தலைவர்…

ஐதாராபாத்தின் ராமந்தபூர் நகரில் பள்ளி பொன்விழா கொண்டாட்டங்களை தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசியக் கல்விக் கொள்கை-ஐ முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான…

போராட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது !!

கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு…

புதிய சவால்களை எதிர்கொண்டு மோடி தலைமையிலான ஆட்சி வலுவாக உள்ளது- மத்திய மந்திரி உறுதி..!!

ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மோடி @ 20 - ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மத்திய மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், தெரிவித்துள்ளதாவது: முதலில் முதலமைச்சராக இருந்து பின்னர்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55.14 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி !

கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்…

கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஜோடி கைது !!

கல்கிஸையில் கொலை ஒன்றை செய்து விட்டு, நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த இளைஞனும் யுவதி ஒருவரும் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். 31 வயது இளைஞனும் 19 வயது யுவதி ஒருவருமே டுபாய்க்கு…

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்டவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் !!

பதுளை பிரதேச அரசியல்வாதியொருவருக்கு எதிராக, தமது பேஸ்புக்கில் பதிவேற்றிய ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே , மேற்படி சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பதுளைக்கு…

சென்னையில் 71-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 70 நாட்களாக சென்னையில் ஒரு…

அந்த 8 நபர்கள் யார்?; பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புயை 8 பேரை கண்டுப்பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் தொடர்பான தகவல்களை 011 251 4217 அல்லது…

பாலியல் தொழிற்றுறை 30 சதவீதமாக அதிகரிப்பு !!

பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இலங்கையில் பெண்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் இவர்களுள் பலர் தமது வாழ்வாதாரத்துக்காக பாலியல் தொழில்களை நாடுவதாகவும் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ANI செய்தி…

யாழில் கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்துள்ளார். !!

வடமராட்சி பகுதியை சேர்ந்த 91 வயதான முதியவர் கடந்த 21ஆம் திகதி சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி…

நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இருபாலையூர் தவ.தஜேந்திரனால் நல்லூரான் மீது பாடப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் நல்லூர் துர்க்கா…

ஏரியை காணவில்லை எனக்கூறி விவசாயிகள் போராட்டம்..!!

சிக்பள்ளாப்பூர்: கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா பெல்லாலம்பள்ளி கிராமத்தில் நேற்று விவசாயிகள் ஒரு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர்கள் கிராமத்தையொட்டி இருந்த ஏரியை காணவில்லை என்றும், அதை போலீசார்…

நான் பேசத் தொடங்கினால் பூகம்பம் வெடிக்கும் – உத்தவ் தாக்கரேவை எச்சரித்த ஏக்நாத்…

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியை பிளவுபடுத்திய ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாகி உள்ளார். இதனால் சிவசேனா 2 ஆக உடைந்துள்ளது. ஷிண்டே அணியினர் உத்தவ் தாக்கரேயை விமர்சிக்கக் கூடாது என பா.ஜ.க.வை எச்சரித்தனர். ஆனால் கடந்த…

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும்…

புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்தது சி.பி.ஐ..!!

17 வங்கிகள் கூட்டமைப்பை ஏமாற்றி ரூ.34,615 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குனர் கபில் வதாவன், இயக்குனர் தீபக் வதாவன்…