;
Athirady Tamil News
Daily Archives

4 August 2022

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்: இந்தியா உறுதி!!

இந்தியாவின் நம்பகமான நண்பர் மற்றும் நேர்மையான பங்காளி நாடு என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். கம்போடியாவில் இடம்பெற்று வரும்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம்!! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

சீனாவின் ஆத்திரமூட்டல்!! (கட்டுரை)

ஆபத்தில் இலங்கை துடித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் எவ்விதமான தயவுதாட்சியம் இன்றியும் எதிர்ப்பார்ப்புகள் இன்றியும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டிய, நீடிக்கொண்டிருக்கின்ற நாடு என்றால் அது இந்தியாதான். அதனால்தான் என்னவோ இந்தியாவை இலங்கையின்…

ரணிலுக்கு வாக்களித்த கறுப்பாடுகளை கண்டுபிடிங்கள்- இன்றேல் 10 பேரும் ராஜினாமா செய்யுங்கள்…

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள். இது கட்சிக்கும் மக்களுக்கும் செய்த துரோகம். முடியாவிட்டால் நீங்கள் 10 பேரும் ராஜினாமா செய்யுங்கள் என…

ஷண்முகா ஹபாயா வழக்கு – கல்லூரி அதிபர் லிங்கேஸ்வரி பிணையில் விடுதலை!!

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் கல்லூரி அதிபர்…

மழைக்கு மத்தியிலும் QR Code முறை மூலம் எரிபொருள் விநியோகம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய QR Code திட்டத்தின் ஊடாக வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கல்முனை ஓ.எம்.அலியார் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் கல்முனை பி.எம்.கே.ரஹ்மான் எரிபொருள்…

நாயை கொடூரமாக வெட்டிக் கொன்ற கும்பலில் இருவர் சிக்கினர்; ஒருவர் தலைமறைவு –…

புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்து சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்ட கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் முதன்மை சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை…

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளரின் கைது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பொலிசாரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியர்கள், இன்று (04) ஆர்ப்பாட்டம் ஒன்றை…

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லையேல் அரசாங்கம் பாரிய விளைவினை…

ஜோசப் ஸ்டாலின் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் அரசாங்கம் பாரிய விளைவினை சந்திக்கும் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். யாழ் ஊடக…

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய பொலிஸ்!!!

யாழ்ப்பாணம் கைதடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்ப காத்திருந்த சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினருக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதாக…

யாழில் நாய் ஒன்றினை கொடூரமான முறையில் படுகொலை செய்த நபர்களுக்கு வலை வீச்சு!!

யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் குழுவை பொலிஸார் தேடி வருகின்றனர். நான்கு இளைஞர்கள் நாய் ஒன்றின் நாலு கால்களையும் கைக்கோடாரி ஒன்றினால் துண்டித்து,…

எரிபொருளுக்கான QR தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

எரிபொருளுக்கான தேசிய அனுமதிப்பத்திரத்தின் QR முறையை ஏனையோருக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டாம் எனவும், அவ்வாறு காட்சிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அதனை சட்டவிரோதமாக வேறு நபர்கள் பயன்படுத்தக்கூடும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர…

விழுந்த விமானத்தை சுளியோடிகள் தேடுகின்றனர்!!

விமானப் படையின் ஆளில்லா விமானம் (Air Force Drone) தியவன்னா ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டபோது பாதுகாப்புக்கான பயன்படுத்தப்பட்ட விமானமே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்கு உள்ளானது…

நாங்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறோம்? – மாநிலங்களவையில் ஹர்பஜன் சிங் கேள்வி..!!

தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார்.…

அந்த ஒருவரை தேடும் பொலிஸார்!!

கொழும்பு பெரேரா மாவத்தையில் மே.10ஆம் திகதியன்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அவரை கண்டுப்பிடித்தால், 071-8591735, 071-8592735 071-8591733 என்ற​தொலைபேசி…

பஸ் கட்டணங்கள் குறைந்தன!!

இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் குறைவடையவுள்ளதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தற்போது…

கேர்னருக்கு பிணை: பயண தடை!!

கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது; அவருக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி- சீன தூதுவர் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீனத் தூதுவர் Qi Zhenghong க்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த சீனத் தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான…

அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைந்தன!!

பருப்பு, சீனி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு ஒரு…

சீன கப்பலுக்கு சிவப்பு கொடி எச்சரிக்கை!!

இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.…

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை – ராகுல் காந்தி…

சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் நலன் பாஜகவுக்கு தேவையில்லை, பாஜகவுக்கு பெருமுதலாளிகளின் நலன் மட்டுமே தேவைப்படுகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது:-…

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக சுரேஷ் படேல் பதவி ஏற்பு..!!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில், ஒரு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரும், 2 ஊழல் கண்காணிப்பு ஆணையர்களும் பதவி வகித்து வருகிறார்கள். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த சஞ்சய் கோத்தாரி கடந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி ஓய்வு பெற்றார்.…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை..!!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆஜரான சுப்பிரமணியசாமி, 'தனது மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. எனவே விரைந்து…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் நடைபெற்றது.!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை…

ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் பாடசாலைகளின் முன்னால் போராட்டம்!!! (படங்கள்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளின் முன்னால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10:30 மணியளவில் ஒன்று கூடிய அதிபர் மற்றும்…

நல்லூர் ஆபரணங்களுடன் வருவதை தவிருங்கள்!!

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எனவும், திருட்டுக்களில் ஈடுபட வெளிமாவட்ட கும்பல்கள் ஊடுறுவி உள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ்…

நீதிமன்றத்துக்குள் துப்பாக்கிச் சூடு !!

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த போது, உள்நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் எவ்விதமான அனர்த்தமும்…

‘சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்’ – காங். தலைவர்கள்…

'யங் இந்தியன்' அலுவலகத்துக்கு 'சீல்' வைத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வீட்டு முன்பு போலீசும் குவிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், அஜய் மாக்கன், அபிஷேக் சிங்வி ஆகியோர் கட்சியின் தலைமை…

மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் – ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில்…

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய கட்சியாக விளங்குகிறது. மாநிலங்களவையில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினரான ஆர்.சி.பி.சிங், சமீபத்தில் பதவிக் காலம் முடிந்து வெளியேறினார். இதையடுத்து…

உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு வரி உயர்வு..!!

பெட்ரோல், டீசல் ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அவற்றின் ஏற்றுமதி மீது மத்திய அரசு ஒரு மாதத்துக்கு முன்பு ஆதாய வரி விதித்தது. 2 வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று டீசல்…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்.. கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்)

கனடா சங்கீத் பிறந்த நாள் கொண்டாட்டமும்.. கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்) ########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் சங்கீத் அவர்களின்…

5 ஆண்டுகளில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்..!!

துணை ராணுவ பிரிவுகளான சி.ஆர்.பி.எப், பி.எஸ்.எப், சி.ஐ.எஸ்.எப். ஐ.டி.பீ.பி., எஸ்.எஸ்.பி., அசாம் ரைபிள் மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவை மத்திய ஆயுதப் படைகளின் அங்கமாகும். இவற்றில் சுமார் 10 லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த…

ஜனாதிபதியை த.மு.கூ வியாழன் சந்திக்கும் !!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஓகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில்…

பொலிஸாரின் எச்சரிக்கையும் மீறி தொடரவுள்ள போராட்டம் – கொழும்பில் வன்முறை வெடிக்கும்…

காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்தும் தங்கியிருக்கவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தங்கியுள்ள அனைவரையும் நாளை மாலை…