;
Athirady Tamil News
Daily Archives

28 September 2022

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கினார்கள். அவர்கள் கூறியதாவது:…

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல லாலு பிரசாத் யாதவுக்கு அனுமதி..!!

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது. இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக…

சினிமா விளம்பர நிகழ்ச்சியில் 2 நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை- சமூக வலைத்தளத்தில் கருத்து…

கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பிரபல வணிக வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சினிமாவின் விளம்பர நிகழ்ச்சி நடந்தது. இதில் சினிமாவில் நடித்த நடிகர்கள், நடிகைகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள…

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது !!

சட்டவிரோதமான முறையில் வயிற்றில் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் போதைப்பொருடன் உகாண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாரின் டோஹா நகரம் ஊடாக இலங்கைக்கு வந்த 43 வயதுடைய உகாண்டா பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 12…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்கள் மீது அடுத்த மாதம் விசாரணை- சுப்ரீம்…

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில்…

இப்போ இதை கேட்பீங்க… பிறகு அதையும் எதிர்பார்ப்பீங்க… மாணவி கேட்ட சிம்பிளான…

பிகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு, பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலந்துரையாடலின்போது, குறைந்த…

பங்கு சந்தை முறைகேடு- சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன்..!!

தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன்…

ரூ. 650 கோடி கடனை செலுத்தியது லிட்ரோ !!

எரிவாயு விநியோகத்தை பராமரிக்கப்பதற்காக உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 70 மில்லியன் டொலர் (ரூ. 2600 கோடி) கடனில் 650 கோடி ரூபாய் திறைசேரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், இன்று (28) தெரிவித்தார்.…

10இல் 4 குடும்பங்கள் பசியில் வாடுகின்றன !!

தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் இலங்கையில் உள்ள பத்தில் நான்கு குடும்பங்கள், போதிய உணவுகளை உட்கொள்வதில்லை என்றும் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.…

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு வெளியானது!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (28) தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சபையை நியமிப்பதற்கு முன்னர் ஜனாதிபதி தேசிய சபையை நியமித்திருக்க வேண்டும் என…

ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி வழங்க வழிவகை செய்யும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 3,615 பேருக்கு கொரோனா..!!

கொரோனா பாதிப்பு நேற்று 3,230 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து…

டிஸ்லெக்சியாவை வெல்வோம்!! (மருத்துவம்)

டிஸ்லெக்சியா இன்று பரவலாகக் குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகைக் கற்றல் குறைபாடு. நன்றாகப் பேசக்கூடிய திறன் உள்ள குழந்தைகள் எழுதும் போது எழுத்துகளை முன்னும் பின்னுமாக மாற்றிப் போட்டு எழுதுவதும், ஓரிரு எழுத்துகளைத் தவறவிட்டு எழுதுவதும்…

ரணிலுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். போராட்டம் ஊடாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, காகத்துடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக…

உக்ரைன் போர் மனிதநேயம் சார்ந்த இந்தியாவின் அணுகுமுறை தொடரும்: ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய…

உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரானது ஆறு மாதங்களை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இரு தரப்பிலும், பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த சூழலில், இரு நாடுகளும் தீவிர மோதலில்…

ஆடம்பர உணவாக மாறிய அப்பம் !!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக…

போதைப்பொருள் பாவனை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பேரணி!!

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் நாளை வியாழக்கிழமை…

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு -கல்வித்துறை தகவல்..!!

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும்? அதற்கான விடுமுறை எப்போது விடப்படும்? என்பது தொடர்பான தகவல் பள்ளிக்கல்வியின் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் நாட்காட்டியில் காலாண்டு விடுமுறை குறித்த…

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்துக்கு சரிந்தார் கவுதம் அதானி..!!

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வாரம் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 2-வது இடத்துக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் 'டாப்10' பணக்காரர்கள் பட்டியலில் எலொன் மஸ்க்கிற்கு அடுத்தப்படியாக கவுதம் அதானி இருந்து வந்தார். இந்த…

நிறை கு​றைந்த குழந்தைகள் ஓகஸ்டில் அதிகரிப்பு !

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில், நிறை குறைந்த அதிகமான குழந்தைகள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாடுபூராகவுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால்…

தந்தையை கொன்று தீ வைத்து எரித்த மகன் !!

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியில் இளைஞன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார்…

விஞ்ஞானிகளுக்கு ‘நோபல்’ போன்ற புதிய விருது – மத்திய அரசு திட்டம்..!!

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தினார். விருதுக்குரியோரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதன் மூலம், விருது மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த…

கிராமத்திற்கு தகவல் சட்டம் என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!!…

"கிராமத்திற்கு தகவல் சட்டம் " என்னும் தொனிப்பொருளில் வெகுஜன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை…

யாழ் மாவட்டத்தில் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற்ற, சமூக நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று (27) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.…

மின்துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வெளியீடு – புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள்…

யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்…

சுற்றுலா துறை சார்பில் ரூ.6.57 கோடியில் தங்கும் விடுதி-புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர்…

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருச்சிக்கு வருகைபுரியும் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக வசதிகளை…

காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்; கிராம மக்கள் பீதி..!!

ஹாசன் மாவட்டம் ஆலூர் தாலுகா கித்தகளலா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் கிராமத்திற்குள் இரைதேடி காட்டுயானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அவை அருகே உள்ள தோட்டத்திற்குள் நுைழத்து…

அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் !!

அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) இந்த…

கொள்ளைச் சம்பவம்; உறுப்பினரை நீக்குகிறது மொட்டு கட்சி !

தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேசச​பை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் கட்சி அறிக்கை ஒன்றை…

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி…

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விரைவில் டெல்லி செல்ல உள்ளார். மந்திரிசபை விஸ்தரிப்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. பசவராஜ்…

யானைகளை விரட்ட 2,800 மில்லியன் ரூபாய் செலவு !!

காட்டு யானைகளை விரட்டுவதற்கு தேவையான வெடி மருந்துகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2800 மில்லியன் ரூபாவை செலவிடுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம்…

‘சிங்களவர் எவரையும் குடியேற்ற மாட்டேன்’ !!

முல்லைத்தீவு- குருந்தூர் மலைப் பகுதியில் இடம்பெற்றுவரும் தொடர் நிகழ்வுகள் தவறான புரிதலால் இடம்பெற்றதாக நம்புவதாகத் தெரிவித்துள்ள புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்விதுர விக்ரமாநாயக்க, ஒரு நாட்டில் உள்ள தொன்மைகள் அந்த நாட்டிற்கு…

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி- அசோக் கெலாட் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ்..!!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந்தேதி நடைபெறும் நிலையில் இதில் போட்டியிட ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் முடிவு செய்துள்ளார். இதனால் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரசில் கடும் கருத்து மோதல்…