;
Athirady Tamil News
Daily Archives

8 February 2023

காரில் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் சென்ற தெருநாயை மீட்டு குட்டிகளுடன் சேர்த்த சிறுமி!!

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கபக்கா பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் காரில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் பால்பா பகுதியில் வந்தபோது,…

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்: குடியிருப்புகள், சாலைகளை சூழ்ந்த…

பொலிவியாவின் பல்வேறு நகரங்களில் கனமழை வெள்ளத்தால் குடியிருப்புகள், சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. முக்கிய நகரங்களின்…

வரலாற்று சாதனை: கடந்த ஆண்டில் கேரளாவுக்கு 1.88 கோடி சுற்றுலா பயணிகள் வருகை!!

கேரளாவில் கடந்த ஆண்டில் மட்டும் 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாகவும், இது ஒரு வரலாற்று சாதனை என்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் சட்டசபையில் நேற்று தெரிவித்தார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "2021-ல் பினராயி…

சீனாவோடு அல்லது உலகில் வேறு எவருடனும் போட்டியிடும் வலிமையான நிலையில் இருக்கிறோம்: அமெரிக்க…

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து செயல்பட முடியாது என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இழிந்தவர்களும், நாசக்காரர்களும் தவறு என்று நிரூபித்தோம். நாங்கள் நிறைய உடன்படவில்லை. ஆனால் மீண்டும்…

உத்தரபிரதேசத்தில் 50 ஆண்டுகளாக கருவூலத்தில் கிடக்கும் இந்திரா காந்தியின் வெள்ளி பரிசு!!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கிராம மக்கள் பரிசாக வழங்கிய 73 கிலோ எடை கொண்ட வெள்ளி உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கருவூலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கருவூல அதிகாரி…

இடிபாடுகளில் கிடைத்த பொருட்களை கொண்டு விளையாடும் சிறுவர்கள்: குடும்பம், வீட்டை இழந்து…

பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கி மற்றும் சிரியாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் தொடர்பான காட்சிகள் மனதை உலுக்குவதாக உள்ளன. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், எங்கும் மரண ஓலங்கள், தோண்ட தோண்ட பிணங்கள் என கடந்த 3 நாட்களாக மயான…

கல்விக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் !!

உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது. குறித்த இளம் பெண்களுடன் கைது செய்யப்பட்ட ஏனைய…

உயிர்களை பணயம் வைக்க மாட்டோம் !!

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தத்தால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் உயிரைப் பணயம் வைக்கும் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள்…

ரணிலின் ரிட் மனு குறித்த அறிவிப்பு !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா…

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு!!

ரெப்போ கடன் வட்டி விகிதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். மேலும், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 2023-24 நிதியாண்டில்…

பிரான்சில் கோர சம்பவம்- வீட்டில் தீப்பிடித்து 7 குழந்தைகளுடன் தாய் பலி!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள சார்லி-சுர்-மார்னே நகரில் 2 மாடிகளை கொண்ட வீட்டில் ஒரு தம்பதி தங்களது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். அந்த தம்பதிக்கு 5 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று…

இந்தியாவில் புதிதாக 96 பேருக்கு கொரோனா- உத்தரபிரதேசத்தில் ஒருவர் பலி!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பாதிப்பு 89 ஆக இருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 81…

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! (வினோத வீடியோ)

பிரமிடுக்குள் கேமரா அனுப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ் விபத்தில் படுகாயம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த…

2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போயிங் நிறுவனம்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு…

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட் ஆன்லைனில் இன்றும் நாளையும் முன்பதிவு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 22-ந் தேதி முதல் 28 ம் தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஆகிய கட்டண சேவைகளில் மெய் நிகர் அடிப்படையில் கலந்து கொள்ள தேவையான டிக்கெட்டுகள் நாளை…

பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல்!! (கட்டுரை)

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது. ஆனால், இனப்பிரச்சினை தீரவில்லை.…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

அமெரிக்காவில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இந்திய மாணவர் பலி !!

தெலுங்கானா மாநிலம் மதிரா நகரத்தை சேர்ந்தவர் அகில் சாய் (வயது25). இவர் அமெரிக்கா மண்டோக மெரியில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ உயர் படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வைத்து இருந்த துப்பாக்கி தவறுதலாக…

வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி உயர்கிறது- ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்!!

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இதில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையை அறிவித்தார். இதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வட்டி விகிதமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதத்தில்…

நொறுங்கிய ஆஸ்பத்திரிக்குள் தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட…

துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி விட்டது. சீட்டு கட்டுகள் போல் பொல, பொலவென சரிந்து விழுந்த கட்டிடங்களில் இருந்தோர், என்ன நடந்தது என தெரியாமலேயே உயிரை இழந்தனர். இதனை விட…

தலித் திருமண விழாவில் விலை உயர்ந்த ‘பைக்’ பரிசு வழங்கியதற்கு மிரட்டல் –…

உத்தரபிரதேசத்தில் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிபால் வால்மிகி-ஷீலாதேவி தம்பதியினரின் மகள் கவிதாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. தலித் சமூகத்தை சேர்ந்த இந்த குடும்பத்தினரின் திருமண விழாவின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் மணமக்களுக்கு…

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி – விடுக்கப்பட்டது வேலன் சுவாமிக்கு அழைப்பாணை!

தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் வடக்கில் இருந்து கிழக்கை நோக்கிய மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியை முன்னின்று நடத்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்…

சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை!!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை. மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த…

கூட்டாட்சி முறையை பெறாமல் விடமாட்டோம்!! (வீடியோ)

13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாட்டில்…

துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டும் ரொனால்டோ!!

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500-ஐ நெருங்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து…

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா 11-ந்தேதி தொடங்குகிறது!!

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடக்கிறது. அதையொட்டி 11-ந்தேதி காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்,…

’அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மொட்டுக்கு முரண்பாடு அல்ல’!!

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி…

உலக சாதனை படைக்கும் ஆசையில் ஜனாதிபதி – விமல்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இன்று(08) இதனை கூறியுள்ளார்.…

ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது – ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி!!

ஜனாதிபதியின் கொள்கை உரை பயனற்றது. கொள்கை உரையை மாத்திரம் முன்வைக்கிறாரே தவிர, நடைமுறைக்கு சாத்தியமான எதனையும் அவர் செயற்படுத்தவில்லை. நாட்டு மக்களின் பணத்தையும், எமது காலத்தையும் வீணடிக்க கூடாது என்பதற்காக ஜனாதிபதியின் அக்கிராசன உரை…

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் –…

ஒன்பதாவது ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு மற்றும் மரியாதை வேட்டு எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது…

மலையகப் பிரதிநிதிகளுடன் பேசப்போவதாக ரணில் சொல்வதை எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம்…

மலையக மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின்…

அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு – எம்.ஏ.சுமந்திரன்!!

ஒற்றையாட்சி அரச முறைமைக்குள் தீர்வு என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கோருகிறோம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு…

துருக்கியின் நூர்தாகி பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்…