;
Athirady Tamil News
Daily Archives

2 November 2023

கனடாவின் பொருளாதாரம் தொடர்பில் வெளியான தகவல்!

கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத…

பட்டியலின இளைஞர்களை ஆடை அகற்றி, சிறுநீர் கழித்து வன்கொடுமை – கொடூர தாக்குதல்!

இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் திருநெல்வேலி, மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன் (19). இருவரும்…

இன்று முதல் சீனிக்கான வரி அதிகரிப்பு

இன்று (02) முதல் சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (02) முதல் ஒரு வருடத்திற்குள் இது அமுலுக்கு வரும் என…

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்

2009 மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டு பதின் நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் விவகாரம் தொடர்ந்தும் பேசுபொருளாக இருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப நகர்வுகளை…

முச்சக்கரவண்டியை சுக்குநூறாக்கிய பேருந்து; சாரதி படுகாயம்

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (02) பகல் பஸ் ஒன்றின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி கவனக்குறைவாக…

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இலட்சக்கணக்கான ரூபா தேவை! இரான் விக்ரமரத்ன

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு இலட்சக்கணக்கான ரூபா பணம் தேவைப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற…

லங்கா சதொச வெளியிட்ட மற்றொரு விலைக்குறைப்பு

இன்று (02) முதல் பச்சைப்பயறு மற்றும் கடலை ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. பச்சைப்பயறு ஒரு கிலோ கிராம் 77 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிப்பு

சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…

கால கெடு முடிவு; கண்ணீருடன் வெளியேறும் அகதிகள் – பாகிஸ்தானுக்கு கோரிக்கை!

பாகிஸ்தானுக்கு, தலிபான் அவகாசம் குறித்த கோரிக்கையை வைத்துள்ளனர். கால அவகாசம் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1-ம் தேதிக் குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என…

இல்லத்தரசிகளுக்கும் தீபாவளி போனஸ்.. முன்கூட்டியே வரும் உரிமை தொகை – எப்போ தெரியுமா?

மகளிர் உரிமை தொகை இந்த மாதம் முன்கூடியே வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிமை தொகை தமிழ்நாட்டில் தற்பொழுது மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பெண்களுக்கு 2 தவணைக்கான பணம் வங்கி கணக்கில் வரவு…

வாகன இறக்குமதி: ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

வாகன இறக்குமதி மற்றும் திறந்த வாகன கொள்கைக்கு செல்வதா அல்லது வாகன இறக்குமதிக்கான குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உரிமங்களை வருடாந்தம் வழங்குவது தொடர்பான கொள்கையை தயாரிப்பதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக தேசிய…

மன்னாரில் போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை…

மீண்டும் ஒரு அனர்ந்தம்; பல வாகனங்கள் மீது விழுந்த மரம்

குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வாராபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பலசரக்கு கடை…

தாயார் வெளிநாட்டில்; தந்தையால் தமிழ் மாணவி தற்கொலை

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த பதின்ம வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை அடிப்பதால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்டவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.…

எதிர்காலத்தில் காசாவில் ஹமாஸின் ஆட்சி இருக்காது : அமெரிக்காவின் திட்டம் அம்பலம்

இஸ்ரேலுடனான போர் முடிவடைந்த பின்னர், காசா பகுதியின் எதிர்கால நிர்வாகத்தில் ஈரானுக்கு ஆதரவான பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் ஈடுபட முடியும் என்று அமெரிக்கா நம்பவில்லை என்று வெள்ளை மாளிகை புதன்கிழமை தெரிவித்துள்ளது. அதிபர் ஜோ பைடன்…

லண்டனில் இந்திய வம்சாவளி நபர் பொலிசாரிடம் சொன்ன தகவல்… ஆயுள் தண்டனை விதித்த…

லண்டனில் பேஸ்பால் மட்டையால் மனைவியை தாக்கி கொலை செய்ததாக கூறி பொலிசாரிடம் சரணடைந்த இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியை தாக்கி கொலை கிழக்கு லண்டனில் வசித்து வந்த 79 வயது தர்சமே சிங் என்பவரே, கடந்த மே மாதம்…

இனி மாதாந்த நீர்க் கட்டண சிட்டு வழங்கப்படாது: தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பாவனையாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த நீர் கட்டணச் சிட்டு நவம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படமாட்டாது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கு…

தாயக மண் மீட்புக்காய் மூன்று பிள்ளைகளை கொடுத்த கிளிநொச்சி தாயின் இன்றைய அவலம்!

மூன்று மாவீரர்களை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம்…

பணமோசடி வழக்கில் சிக்கிய நாமல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பணமோசடி வழக்கில் இருந்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஐவரை சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் ரூ.30…

இலங்கையின் நிலைப்பாட்டை ஐ.நாவில் மீளுறுதிப்படுத்தியுள்ள மொஹான் பீரிஸ்

இனவெறி ஒடுக்குமுறைகளை முற்றாக இல்லாதொழிப்பதும், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைளை முன்னெடுப்பதும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகும் என இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.…

கிணற்றில் தவறி வீழ்ந்து பறிபோன உயிர்!

பொலன்னறுவை பிரதேசத்தில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பொது கிணற்றில் தவறி வீழ்ந்ததனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பான தகவல் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.…

ஈரான் சிறையிலிருந்து இரகசியமாக சென்ற கடிதம்

வெளிநாட்டு ஊடக தகவல்களின்படி, 2023 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய ஆர்வலர் நர்கெஸ் முகமதி, அமைதிப் பரிசு வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எவின் சிறையிலிருந்து நோபல் குழுவுக்கு இரகசியமாக கடிதம்…

தொடரும் காசா பகுதி மோதல்: எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

காசா பகுதி தொடர்பில் இலங்கை எப்போதும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் நேற்றிரவு (01.11.2023) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…

யாழில் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாக புகுந்த திருட்டு

வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான சித்தன்கேணி பகுதியில் உள்ள…

இந்தியாவில் 6-ஆம் வகுப்பு முதல் AI பாடத்திட்டம் அறிமுகம்!

இந்தியாவின் கல்வி பாடத்திட்டத்தில் AI படிப்புகளை இணைக்கும் திட்டங்கள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தபட்டது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு அறிவியல் (Date Science) அறிவுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய,…

முடங்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்!

பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், நிர்வாக உத்தியோகத்தர் சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக்குழுவின் ஏகமனதான தீர்மானத்திற்மைவாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 2023.11.02 ஆம் திகதி தென்கிழக்கு…

வட மாகாணத்தில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை முதல் வேலை நிறுத்தம்

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை(03) காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மாகாண ரீதியாக…

விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை பத்திரிகையில் பிரசுரித்தமைக்காக விசாரணை

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம்…

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும்

முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்க வேண்டும். முன்பள்ளி ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் தொடர்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கிறார்கள் எனினும் அரசு கவனம் கொள்ளவில்லை என தமிழ்த் தேசிய இளைஞர்…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம்

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணமலையிலுள்ள திருக்கோணஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம்…

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதோடு, பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்…

காசாவிலிருந்து மக்கள் வெளியேற முதல்முறையாக அனுமதி

இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்டு, கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வரும் காசா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேற முதல்முறையாக நேற்று(01.11.2023)அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினா், காயமடைந்தோா் ஆகியோா் மட்டும் காசாவிலிருந்து எகிப்து செல்ல…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.செல்லமுத்து அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவாக விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் ஒன்பதாவது ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.திருமதி கந்தையா செல்லமுத்து புங்குடுதீவில் பிறந்து, புங்குடுதீவு,…

காஸாவில் சிக்கியிருந்த 17 இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…