;
Athirady Tamil News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோல்விக்கான (இழுபறிக்கான), பகீர்க் காரணம் அம்பலம்..! (கட்டுரை)

0


சாவகச்சேரி நகரசபைத் தேர்தல் தோல்விக்கு அருந்தவபாலன் – சயந்தன் பிரச்சனை என்றுதான் பெரும்பாலானவர்கள் இங்கு நினைக்கிறார்கள்; இங்கு சயந்தன் அம்பு மாத்திரமே, என்னவொன்று சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கும் அம்பு.

அடிப்படை பிரச்சினை அருபந்தவபாலன் சுமந்திரன் இருவருக்குள்ளும் உள்ளது. இருவருக்குள்ளும் பொருந்த, சரிசெய்ய முடியுமா என தெரியாதளவிலான ஈகோ..! விக்னேஸ்வரன் சுமந்திரன் இடையிலும் இதுதான்.

இதுவொரு சீனியர் ஜூனியர் ஈகோ, விக்னேஸ்வரன் விசயத்தில் கட்சிக்கு வெளியானதும், அருந்தவபாலன் விசயத்தில் கட்சிக்கு உள்ளானதும்.

இந்த ஈகோக்கள்தான் சாவகச்சேரி எனும் தமிழரசு கோட்டையில் நகரத்தளவில் ஓட்டை விள வைத்தது.

மாவை சிறீதரன் போன்ற சீனியர்கள் விசயத்தில் கூட சுமந்திரன் ஆதிக்கம், நிச்சயம் எரிச்சலை கொடுத்தாலும் அவர்கள் சகித்து செல்வதாகவே தோன்றுகின்றது.

தலைவர் சம்பந்தர் இந்த விடயத்தை சரியாக கையாள வேண்டிய தருணம் இது.

சுமந்திரன் தவிர்த்து தமிழர் அரசியலில் உச்ச மதினுட்ப ஆளுமை இப்போதைக்கு வேறெவரும் இல்லை, சுமந்திரனின் தேவை பேச்சுமேடைக்கும், வெளிநாட்டு தொடர்பிற்கும், தீர்வு நகர்வுக்குமே தேவை.

முன்னர் அதைமட்டும் செய்யும்போது எல்லாம் சுமூகமாக இருந்தது; அதைவிட்டு கட்சி விவகாரம், மக்கள் தொடர்பு என அவர் தலையில் பாரம் வரும்போது கட்சியில் சறுக்கல் நிகழ்ந்து விட்டது.

இதில் சுமந்திரனில் தவறென்று மட்டும் கைகாட்ட முடியாது. சுமந்திரன் செயற்படுவதை சரியான விளக்கத்துடன் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கு தெளிவு படுத்த கூட்டமைப்பு அடுத்த நிலை உறுப்பினர், தலைமை தவறிவிட்டது.

சுமந்திரன் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார் என முனகுபவர்கள் பக்கம் நியாயம் உண்டு, எனனில் அவர்கட்கு நடப்பவை ஏதும் போய் சேர்வதில்லை.

அதேநேரம் சுமந்திரன் அரசியல் தியரியை அடிமட்டம்வரை கொண்டு செல்லப்படும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தலைவர் சம்பந்தர், சுமந்திரன் தலையில் இருக்கும் கட்சி உள் விவகாரப் பொறுப்பை மாவை போன்ற ஒருவரிடம் உச்ச அதிகாரத்துன் ஒப்படைக்க வேண்டும், அவர் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும். சுமந்திரன் மீதான எம் தேவை வேறு, அதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

சயந்தன், சுகிர்தன் இருவரும் மக்கள் அறியும் வண்ணம் குறைந்தபட்சமேனும் தண்டனை கட்சியால் கொடுக்கப்பட வேண்டும்.

அருந்தவபாலன் காயம் போன்றவர், ஆற்றப்பட வேண்டும். விக்னேஸ்வரன் கான்சர் போன்றவர், வெட்டி அகற்றப்பட வேண்டும்.

மாகாண சபை தேர்தலுக்குள் கட்சி வட்டார அளவில் விரிவடைந்து இயங்கு நிலைக்கு வரவேண்டும்.

சரியான வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர் களமிறங்க வேண்டும்.

இந்த உள்ளூராட்சி முடிவுகள் ஒரு எச்சரிக்கை மணி, இதில் விழித்துக்கொள்ள வேண்டும்.

சரியாக மக்களுடன் இறங்கி க்ரவுண்ட் வேர்க் செய்யும் இளைஞர்களை இனங்கண்டு களமிறக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் கூட்டமைப்புக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை, பத்து பைசாகூட லாபமில்லை..!

என் சுயநலம் எல்லாம் என் பிள்ளையின், அவளின் பிள்ளையின் எதிர்காலம், அதற்கு அரசியல் ரீதியாக கூட்டமைப்பு தவிர எனக்கு வேறேதும் பாதுகாப்பு இல்லை என்கின்ற மனநிலை.

எனவேதான் கூட்டமைப்பை வலுவாக்க வேண்டிய அவசியம் உந்துகிறது, அதிலும் தென்பகுதி இனவாதம் தலைதூக்கும் நிலையில், கூட்டமைப்பின் பெரும் பலத்தோடான மீள்வருகை அவசியம்.

-அருளானந்தம் ஜீவதர்சன்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*