;
Athirady Tamil News

வவுனியாவில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வகுக்கும் வியூகமும்; பேரினவாத கட்சிகளின் நிலைப்பாடும்!! (சிறப்பு கட்டுரை)

0


வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க வகுக்கும் வியூகமும்; பேரினவாத கட்சிகளின் நிலைப்பாடும்!! (சிறப்பு கட்டுரை)

வவுனியா நகரசபையில் ஆட்சி அமைக்க தமிழரசுக்கட்சி ஐக்கியதேசியக் கட்சியுடன் ரகசிய பேச்சுவார்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் ரசியமாக அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளரை சந்தித்து பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலானது தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2010 ஆம் நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வவுனியா நகரசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையை பெற்று வவுனியா நகரசபையை கைப்பற்றி ஆட்சி அமைத்திருந்தது.

இருந்த போதும் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வழங்கிய ஆதரவானது கூட்டமைப்பின் தலைமையின் கண்களை மறைத்ததுடன் எதேச்சதிகாரப்போக்கு, ஆட்சியில் மக்கள் சேவை புறக்கணிப்பு சுயநல அரசியல், அடிமட்ட தொழிலாளர்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, பதவி மோகம் போன்ற காரணங்கள் நகரசபை ஆட்சி தொடர முடியாத நிலையில் கலைக்கப்பட்டது.

ஆட்சி பறிபோன நிலையிலும் அதனை படிப்பினையாக கொள்ளாத தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையும் அன்றாடப்பிரச்சனைகளையும் புறந்தள்ளி சர்வதிகாரப் போக்குடன் செயற்பட்டமையானது இன்று பேரினவாதக்கட்சி ஒன்றுடன் பேரம் பேசவும் தமிழ் மக்களின் ஆட்சியை பங்குபோடும் நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.

வவுனியா நகரசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், ஐக்கியதேசியக்கட்சி 4 ஆசனங்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 3 ஆசனங்களையும், இலங்கை சுதந்திரக் கட்சி 3 ஆசனங்களையும், இலங்கை பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும், ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி 1 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ள நிலையில் வவுனியா நகரசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒரு கட்சிக்கு 12 ஆசனங்கள் தேவையாக இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வவுனியா மாவட்ட இணைப்பாளருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன் அக்கட்சியின் இணைப்பாளர் தங்களுக்கு உப நகரபிதா தலைமையை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை எப்போதும் எச்சந்தர்ப்பத்திலும் பேரினவாதிகளின் கைகளில் ஒப்படைத்தவர்கள் இல்லை தங்கள் உயிரை, உடமைகளை கடந்தகால யுத்தம் கொள்ளையடித்த போதும் தமது உரிமையை விட்டுக்கொடுக்காது போரடி வருகிறார்கள்.

சகோதர இனத்தவர்களின் அரசாங்கத்துடனான இணக்க அரசியல் அவர்களின் சமூகங்களையும் கிராமங்களையும் அபிவிருத்தி செய்துள்ளதுடன் அவர்களின் கல்வி, அரசியல், சமூகப் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

இறுதி யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சரணாகதி அரசியல் எந்தவிதமான நன்மைகளையும் தமிழ் மக்களுக்கு வழங்கியிருக்கவில்லை.

தமிழ் பேசும் மக்களின் ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவெடுத்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவிதமான அரசியல் காய் நகர்ததல்களிலும் ஈடுபடாமல் இதயத்துக்கும் இதயத்தக்குமான புரிந்துணர்வுடன் இலங்கை அரசாங்கத்துடன் தேன்நிலவை ஏற்படுத்திக்கொண்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் அரசியல் ராசதந்திர நகர்வான சூழ்நிலையை குழப்பிவிடாதீங்கோ, சர்வதேசம் கவனித்துக்கொண்டிருக்கு, 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வ போன்ற ;யல்சாப்புக்கள் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாரிய சரிவை உண்டு பண்ணியுள்ளதுடன் கூட்டமைப்பு தனது அரசியலை மீள்பரிசோதனை செய்யும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் கிராமத்திலிருந்து இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளும் மற்றும் மூன்று முறிப்பு கிராமத்திலிருந்து இரண்டு பெரும்பான்மை இனத்தவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பாக தலா இரண்டு பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்ற முறிப்பு கிராமத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களுக்கு உப நகரபிதா தலைமையை வழங்க வேண்டும் என கோரியிருப்பதால் வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் இழுபறி நிலமை காணப்படுவதாக தெரிய வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து இயங்கும் கொள்கைகள் அற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நகரசபை விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் செயல்படுமா என்பது கேளவிக்குறியாகவே இருக்கிறது.

மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்துடன் இணக்கமான எதிர்ப்பு அரசியலையும், இடைக்கால அறிக்கைக்குள் சமஸ்டி பதுங்கி இருக்கிறது என்று ஒரு குழப்பமான அரசியலையும் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா, முலலைத்தீவு போன்ற தமிழர் நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை தத்து நிறுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறது.

வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் எல்லையோரங்களில் தொடங்கி நகரை நோக்கி இறுகிவரும் நிலையில் அரச நிறுவனங்களளில் அதிகாரிகள் தொடக்கம் அராங்க அதிபர் வரை சிங்கள மயப்படுத்தப்பட்டுள்ளதும் நகரசபை உப நகரபிதா என்ற தலைமை சிங்களவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நல்லசகுனங்களாக தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இரகசியமான முறையில் வவுனியா மாவட்ட தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தலைமையிடம் தூது அனுப்பியிருந்த நிலையில் ஈ.ஆர்.எல்.எப் சாதகமகான பதிலை வழங்கியிருக்கவில்லை என்பதுடன் மத்தியில் மறைமுகமா சேர்ந்து ஆட்சி செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்றங்களிலும் சேர்ந்து ஆட்சி செய்ய ரகசிய பேச்சவார்த்தைகளில் ஈடுபடுவது தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும் ஒரு செயல்ப்பாடாகவே இருக்கிறது.

தமிழ் மக்கள் கடந்த முப்பது வருடங்களாக அரசியல் அல்லாத ஒரு யுத்தத்தின் கோரத்தாண்டவத்தின் கூர்மையை தாங்கி நிற்கும் நிலையில் அம் மக்களின் அவலங்களில் அல்லது அதற்கு காரணமான பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அரசியல் செய்வது ஆரோக்கியமானதாக இருக்குமா? ஏன்ற கேள்வியை உண்டு பண்ணியுள்ளது.

தேர்தல் காலங்களில் கூட்டமைப்பினர் செய்த பரப்புரைகள் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பினரின் தமிழ் தேசியத்தின் உணர்ச்சிப் பேச்சுக்கள் வாக்குகளை அபகரிப்பதற்கான செயல்ப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இருக்குமானால் தமிழர் விரோத சக்திகள் எமது மக்களின் அரசியலில் பங்கு போடாத நிலையை உருவாகக முன்வர வேண்டும்.

வவுனியாவைப் பொறுத்தவகையில் எல்லைக்கிராமங்களில் சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்தி யுத்த காலத்தில் தமிழ் மக்களை வவுனியாவில் காணிகள் வழங்கி குடியேற்றிய புளொட் அமைப்பினர் 1995 ஆம் ஆண்டு வவுனியா நகரசபையை கைப்பற்றி வவுனியாவில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில்..,

அன்று வவுனியா நகரசபையின் உப நகரபிதாவாக பதவி வகித்த க.சந்திரகுலசிங்கம் (மோகன்) கோவில்குளம் 8 ஆம் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு நகரசபை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மீண்டும் க.சந்திரகுலசிங்கத்திற்கு உப நகரபிதா தலைமை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு! நடைபெற்று வரும் எதிர்மாறான சம்பவங்களினால் புளோட் அமைப்பிற்குள் சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.

யுத்தகாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களையும், வவுனியா நகரசபைiயையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புளோட் அமைப்பானது யுத்தம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கையில் மக்கள் அரசியலை மறந்து செயற்பட்டதன் விழைவு இன்று அதன் நங்கூர சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை மற்றும் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள நிலைமையானது தமிழரசக் கட்ச்pக்குள் கரைந்து விடக்கூடிய அபாயகரமான நிலைமையை சந்தித்துள்ளது.

அந்தவகையில் தமிழ் மக்களின் ஆணையை கருத்தில்கொண்டு வேற்றுமைகளை மறந்து ஒன்று பட்டு ஆட்சியமைத்து தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளையும், அதிகாரஙகளையும் பெற்றுக்கொடுக்க அனைத்துக் தமிழ் கட்சியினரும் ஒன்றுபட வேண்டும்.

அதைவிடுத்து தமிழ் மக்களின் அவலங்களுக்கும் அவர்களின் அரசியல் உரிமைகளை வழங்க முன்வராத அரசியல் நாகரீகமற்ற பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் ஆணையை பங்கு போடுவது மீண்டும் பிரிந்து நின்று தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகவே பார்க்கப்படும்.

ஓற்றுமையில்லாத தமிழ் அரசியல் எதிர்கால சந்ததியை அரசியல் ஆழுமையற்ற சமூகமாகவும், பெரும்பான்மை கட்சிகளிடம் கையேந்த வைக்கும் ஒரு சமூமாக மாற்றும் அபாயநிலைமை உள்ளது.

எனவே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியல் சாகசங்களை முன்னெடுக்காமல், ஒன்றுக்கொன்று காலை வாரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழ் மக்களின் நலனை முன்நிறுத்தி ஒன்றுபட்டு செயல்ப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

-மைக்கல்-

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*